அரசுப் பள்ளி தலைமை ஆசிரியரிர் மீது துறை ரீதியாக நடவடிக்கை - மாவட்ட கல்வி அலுவலர் - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Thursday, January 4, 2024

அரசுப் பள்ளி தலைமை ஆசிரியரிர் மீது துறை ரீதியாக நடவடிக்கை - மாவட்ட கல்வி அலுவலர்

 



திருவண்ணாமலை அடுத்த துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவர்களை மண் அள்ளும் பணியில் ஈடுபடுத்தியது கடும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. 


எழுத்தறிவு பெற்ற வீடும், நாடும் முன்னேறும் என்பதற்காக பள்ளி கல்வித் துறைக்கு தமிழக அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது. 


பள்ளிகளுக்கு புதிய கட்டிடம் கட்டுதல், பழைய கட்டிடத்தை சீரமைத்தல், பள்ளி வளாகத்தை பராமரித்தல், மாணவர்களுக்கு நோட்டு, புத்தகம் வழங்கல் உள்ளிட்ட பல திட்டங்களுக்காக அதிகளவில் நிதி ஒதுக்கீடு செய்கிறது.


ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்களின் கல்வியில் கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறது. ஆரம்ப கல்வி முதல் மேல்நிலை கல்வி வரை, அனைத்து மாணவர்களும் கற்க வேண்டும் என நடவடிக்கை எடுத்துள்ளது. 


இந்நிலையில் பள்ளிக்கு வரும் மாணவர்களை தொழிலாளர்களாக பயன்படுத்தும் நிகழ்வு, தமிழகத்தில் அவ்வப்போது வெளிச்சத்துக்கு வந்த வண்ணம் உள்ளன. இந்த வரிசையில், திருவண்ணாமலை மாவட்டமும் இடம் பிடித்துள்ளது.


துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில்திருவண்ணாமலை அடுத்த துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள், மண் அள்ளும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பள்ளிக்கு வந்த மாணவர்களை, பாடம் கற்றுக் கொள்ள அனுமதிக்காமல் மண்வெட்டி மற்றும் மண் அள்ளுவதற்கு வாளியை தூக்க செய்துள்ளது அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளன. 


பள்ளி நுழைவு வாயில் பகுதியில் உள்ள மண் அகற்றப்பட்டு, மற்றொரு இடத்தில் கொட்டப்பட்டுள்ளது. இதுகுறித்து பெற்றோர் மற்றும் கல்வியாளர்கள் கூறும் போது, “பள்ளி வளாகத்தல் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்கிறது. 


நிதி இல்லையென்றாலும், ஊராட்சி நிர்வாகம் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஆனால், துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவர்களை தொழிலாளர்களாக அடிக்கடி பயன்படுத்தும் நிலை தொடர்கிறது.


பள்ளியில் கல்வி பயிலுவதற்காகதான் பிள்ளைகளை பெற்றோர் அனுப்புகின்றனர். கல்வியில் பின்தங்கிய, திருவண்ணாமலை மாவட்டத்தில் பொதுத் தேர்வில் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க அடித்தளமிடுவது ஆரம்ப மற்றும் நடுநிலை கல்வியாகும். 


இத்தகைய முக்கியத்துவம் பெற்றுள்ள நடுநிலைப் பள்ளியில் மாணவர்களை, கூலி தொழிலாளர்களாக பயன்படுத்தி உள்ளனர். இந்த நிலை தொடராமல் இருக்க, பள்ளி கல்வித் துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.


பெற்றோர், சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனம் துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் மண் அள்ளும் பணியில் ஈடுபடுத்தப்பட்ட மாணவர்கள், வாளியில் நிரப்பப்பட்ட மண்ணை தூக்க முடியாமல் திணறினர்.துறை ரீதியாக நடவடிக்கை...


இதுகுறித்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் கார்த்திகேயனை தொடர்பு கொண்டு கேட்டபோது, “பள்ளியில் மாணவர்களை மண் அள்ளும் பணியில் ஈடுபடுத்தியது தொடர்பாக, தலைமை ஆசிரியரிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. அவர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும். 


மேலும், பள்ளியில் மாணவர்களுக்கு கல்வி கற்று கொடுப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்றும், மாணவர்களை பிற பணியில் ஈடுபடுத்தக் கூடாது என அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது” என்றார்.



Post Top Ad