Admit Card for Tamil Literary Proficiency Test - Director of Government Examinations Announcement!- தமிழ் மொழி இலக்கியத் திறனறித் தேர்வுக்கான தேர்வுக் கூட நுழைவுச்சீட்டை 09.10.2023 முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அரசுத் தேர்வுகள் இயக்குநர் அறிவிப்பு!
15.10.2023 (ஞாயிற்றுக்கிழமை) அன்று நடைபெறவிருக்கும் தமிழ்மொழி இலக்கிய திறனறித் தேர்விற்கு வருகைபுரியும் மாணவர்களின் பெயர்பட்டியலினை தேர்வு மையம் வாரியாக www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் 09.10.2023 பிற்பகல் முதல் பதிவிறக்கம் செய்து கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. எனவே, ஒவ்வொரு தேர்வு மைய முதன்மை கண்காணிப்பாளர்கள் தவறாமல் பெயர் பட்டியலினை பதிவிறக்கம் செய்துகொள்ள அறிவுறுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
தேர்வுகூட நுழைவுச்சீட்டு:
மேற்படி தேர்விற்கான தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுக்களை 09.10.2023 பிற்பகல் முதல் பள்ளித் தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளம் மூலம் தங்கள் பள்ளிக்கான User ID /Password -ஐ கொண்டு பதிவிறக்கம் செய்து கொள்ள உரிய அறிவுரைகளை வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
மேலும், தமிழ்மொழி இலக்கிய திறனறித் தேர்விற்கு விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கு தேர்வு கூட நுழைவுச் சீட்டுகளை சம்பந்தப்பட்ட பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் பதிவிறக்கம் செய்து வழங்கவும். தேர்வு மைய விவரத்தினை அம்மாணவர்களுக்கு தெரிவிக்கவும் தலைமையாசிரியர்களுக்கு/ முதல்வர்களுக்கு அறிவுரை வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
தேர்வர்களின் தேர்வுகூட நுழைவுச் சீட்டுக்களில் பெயர் / பிறந்த தேதி ஆகியவற்றில் திருத்தம் எதும் இருப்பின் திருத்தத்தினை சிவப்பு நிற மையினால் சுழித்து சரியான பதிவினை குறிப்பிட்டும். ஒளிப்படத்தில் திருத்தங்கள் ஏதேனும் இருப்பின் தேர்வரின் புதிய ஒளிப்படத்தை உரிய இடத்தில் ஒட்டி பள்ளி தலைமையாசிரியர்கள் / முதல்வர்கள் சான்றொப்பம் மற்றும் பள்ளி முத்திரையுடன் தேர்வெழுத அத்தேர்வர்களுக்கு அனுமதி வழங்க தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளரிடம் அறிவுறுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
No comments:
Post a Comment