சட்டப் படிப்பில் சேர மே 15 முதல் விண்ணப்பிக்கலாம் - Asiriyar.Net

Wednesday, May 10, 2023

சட்டப் படிப்பில் சேர மே 15 முதல் விண்ணப்பிக்கலாம்

 

சட்டப் படிப்பில் சேர மே 15 முதல் விண்ணப்பிக்கலாம்


தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலை.யுடன் இணைப்பு அங்கீகாரம் பெற்ற அனைத்து சட்டக் கல்லூரிகளிலும், சட்டப் பல்கலை.யின் சீர்மிகு சிறப்பு சட்டக் கல்லூரியில் வழங்கப்படும் 5 ஆண்டு ஒருங்கிணைந்த சட்டப் படிப்பிலும் சேர மே 15 முதல் 31 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.


ஒருங்கிணைந்த சட்டப் படிப்புகள்: மே 15 முதல் விண்ணப்பிக்கலாம்.


ஐந்தாண்டு ஒருங்கிணைந்த சட்டப் படிப்புகளில் சேர மே 15 முதல் இணையவழியில் விண்ணப்பிக்கலாம் என சட்டப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.


தமிழ்நாடு டாக்டா் அம்பேத்கா் சட்டப் பல்கலையுடன் இணைப்பு அங்கீகாரம் பெற்ற அனைத்து சட்டக் கல்லூரிகளிலும், சட்டப் பல்கலையின் சீா்மிகு சிறப்பு சட்டக் கல்லூரியில் வழங்கப்படும் 5 ஆண்டு ஒருங்கிணைந்த சட்டப் படிப்புகளிலும் சேருவதற்கு மே 15 முதல் 31-ஆம் தேதி வரை இணையவழியில் விண்ணப்பிக்கலாம்.


மூன்றாண்டு சட்டப் படிப்புகள் மற்றும் முதுநிலை சட்ட மேற்படிப்புகளுக்கான சோ்க்கைக்கு விண்ணப்பிக்கும் தேதிகள் பல்கலை.


இணையதளத்தில் பின்னா் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளாா் சட்டப் பல்கலை. பதிவாளா் ரஞ்சித் உம்மன் ஆபிரகாம்.
Post Top Ad