Tamilnadu Teachers News

New

LATEST
Loading latest posts...

Monday, May 22, 2023

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது? - பள்ளிக்கல்வி அமைச்சர் விளக்கம்

 



கோடை விடுமுறை முடிந்து ஜூன் 1-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவித்துள்ளார். தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்களுக்கு ஏப்ரல் மாதம் இறுதியில் ஆண்டு தேர்வுகள் முடிந்தன. இதனை தொடர்ந்து தற்போது கோடை விடுமுறையில் மாணவர்கள் உள்ளனர். ஜூன் 1ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஸ் ஏற்கனவே அறிவித்திருந்தார்.


ஆனால், எந்த வருடமும் இல்லாத அளவுக்கு தற்போது கோடை வெயில் கொளுத்தி வருகிறது. இதனால் வீட்டை விட்டு வெளியே வர முடியாத சூழல் உள்ளதால் பள்ளிகள் திறப்பு தள்ளி போகலாம் என தகவல் வெளியான நிலையில் பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் விளக்கம் அளித்துள்ளார்.


இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த பேசிய அவர்; ஏற்கனவே திட்டமிட்டபடி தமிழ்நாடு முழுவதும் பள்ளிகள் அதே தேதியில் திறக்கப்படும். ஜூன் 1-ம் தேதி 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை திறக்கப்படும். ஜூன் 5ஆம் தேதி 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படும் என்று தெரிவித்தார்.


6 முதல் 12ஆம் வகுப்பு வரை ஜூன் 1ல் பள்ளிகள் திறப்பு

1 - 5ஆம் வகுப்பு வரை ஜூன் 5ல் பள்ளிகள் திறப்பு.

 பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்

கோடை வெயிலால் பள்ளி திறப்பு தள்ளி வைக்கப்படலாம் என தகவல் பரவிய நிலையில் அமைச்சர் விளக்கம்


No comments:

Post a Comment

LightBlog