ஆழ்துளை கிணறு தேவையான பள்ளிகள் விவரம் கோருதல் - DEE Proceedings - Asiriyar.Net

Monday, May 15, 2023

ஆழ்துளை கிணறு தேவையான பள்ளிகள் விவரம் கோருதல் - DEE Proceedings

 

அனைத்து தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு ஆழ்துளை கிணறு தேவையான பள்ளிகளை படிவத்தில் கேட்கப்பட்டுள்ள வினாக்களுக்கு விடையளிக்கவும் கேட்டுக் கொள்ளப்படுகிறது


தொடக்கக் கல்வி - தேசிய நீரியல் திட்டம் - அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் ஆழ்துளை கிணறு அமைக்க தேவைப்படும் பள்ளிகளின் விவரம் அனுப்ப கோருதல்-சார்பு.


பார்வை

தமிழ்நாடு நீர்வளத் துறை கடிதம் DD (G)OT.7/AG. IV/NHP/Piezometer Drilling/2023/ Dated:20.03.2023

பார்வையில் காணும் கடிதத்தில் அரசு வளாகங்களான தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் தமிழக நீர்வளத்துறை சார்பில் ஆழ்துளை கிணறு அமைக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியானது நிலத்தடி நீரை பிரித்தெடுத்தல் மற்றும் நீர்கட்டி போன்ற வேறு எந்த நோக்கங்களுக்கும் பயன்படுத்தக்கூடாது எனவும், நீர்மட்டத்தை கண்காணிக்க மட்டுமே பயன்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

எனவே தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் ஆழ்துளை அமைக்க தேவைப்படும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளின் விவரங்களை இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் (Excel Sheer) பூர்த்தி செய்து 205.2023க்குள் இவ்வியக்கக deeksections@gmail.com

மற்றும்deesections@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புமாறு அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு (தொடக்கக் கல்வி) அறிவுறுத்தப்படுகிறது.இணைப்பு படிவம்


Click Here to Download - Form & DEE Proceedings - PdfPost Top Ad