12 ஆண்டாக அரசு பள்ளிகளில் பணிபுரியும் பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் வலியுறுத்தி உள்ளார்.
அரசு நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் கணினி, உடற்கல்வி, ஓவியம், இசை, தையல், தோட்டக்கலை, கட்டிடக்கலை, வாழ்வியல்திறன் ஆகியவற்றை கற்று தரும் பகுதிநேர ஆசிரியர்களுக்கு ரூபாய் 10ஆயிரம் தொகுப்பூதியம் வழங்கப்படுகிறது.
வருகின்ற ஜூன் மாதம் பள்ளி ஆரம்பித்ததும், பகுதிநேர ஆசிரியர்கள் இந்த வேலைக்கு சேர்ந்து 13வது கல்வி ஆண்டு தொடங்குகிறது.
திமுக ஆட்சிக்கு வந்து 3வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
ஆனாலும் திமுக தேர்தல் வாக்குறுதி 181-படி பணிநிரந்தரம் நிறைவேற்றவில்லை.
கடந்த இரண்டு ஆண்டில் சம்பள உயர்வு வழங்கவில்லை. மே மாதம் சம்பளமும் வழங்கவில்லை.
ரூபாய் 10ஆயிரம் குறைந்த சம்பளத்தில் பகுதிநேர ஆசிரியர்கள் குடும்பங்கள் தவிக்கின்றார்கள்.
தொகுப்பூதியம் ஒழித்து காலமுறை சம்பளம் வழங்கி பணிநிரந்தரம் செய்தால் மட்டுமே பகுதிநேர ஆசிரியர்களுக்கு அரசின் பண பலன்கள் கிடைக்கும்.
முதல்வரிடம் பலமுறை மனு கொடுத்து கோரிக்கை நேரில் வலியுறுத்தப்பட்டது.
லட்சக்கணக்கில் மனுக்கள் அனுப்பியும் கோரிக்கை மீது கவனம் செலுத்தவில்லை என்று தெரிகிறது.
கவன ஈர்ப்பு செய்து போராட்டங்களும் நடத்தப்பட்டு வருகிறது.
பல்வேறு அரசியல் கட்சிகள் அறிக்கை மூலமாகவும், சட்டசபையிலும் பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி உள்ளார்கள்.
ஆனால் பணிநிரந்தரம் குறித்து அரசின் முடிவு தெரியவில்லை.
இதனால் போராடும் நிலைக்கு பகுதிநேர ஆசிரியர்கள் தள்ளப்பட்டு உள்ளார்கள்.
இதனை மனிதாபிமானத்துடன் நினைத்து, தமிழக முதல்வர் அவர்கள் 12ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்கள் குடும்பங்கள் வாழ்வாதாரம் முன்னேற, பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
********************
எஸ்.செந்தில்குமார்
மாநில ஒருங்கிணைப்பாளர்
பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு
செல் : 9487257203
No comments:
Post a Comment