10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் கணிதத்தில் 3,649 பேர் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
தமிழகத்தில் 10-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் இன்று (மே 19) காலை 10 மணிக்கு வெளியிடப்பட்டது. இதன்படி, மொத்தம் தேர்வு எழுதிய 9,14,320 மாணவ, மாணவியர்களில் 8,35,614 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 91.39, இதில் மாணவியர்களின் எண்ணிக்கை 4,30,710. மாணவர்களின் எண்ணிக்கை 4,04,904, மாணவியர்களின் தேர்ச்சி சதவீதம் 94.66. மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் 88.16. மாணவர்களை விட மாணவியர்கள் 6.50 சதவீதம் அதிகமாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.
10-ம் வகுப்பு பொதுத் தேர்வில், ஆங்கிலத்தில் 89 பேர் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். கணிதப் பாடத்தில் 3,649 பேரும், அறிவியல் பாடத்தில் 3,584 பேரும், சமூக அறிவியல் பாடத்தில் 320 பேரும் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். தமிழ் பாடத்தில் யாரும் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெறவில்லை.
பாடம் வாரியாக பார்த்தால் தமிழில் 95.55 சதவீதம், ஆங்கிலத்தில் 98.93 சதவீதம், கணிதத்தில் 95.54 சதவீதம், அறிவியலில் 95.75 சதவீதம், சமூக அறிவியலில் 95.83 சதவீத பேர் பெற்றுள்ளனர்.
No comments:
Post a Comment