தமிழகத்தில் 10-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் இன்று (மே 19) காலை 10 மணிக்கு வெளியிடப்பட்டது. இதன்படி, மொத்தம் தேர்வு எழுதிய 9,14,320 மாணவ, மாணவியர்களில் 8,35,614 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 91.39, இதில் மாணவியர்களின் எண்ணிக்கை 4,30,710. மாணவர்களின் எண்ணிக்கை 4,04,904, மாணவியர்களின் தேர்ச்சி சதவீதம் 94.66. மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் 88.16. மாணவர்களை விட மாணவியர்கள் 6.50 சதவீதம் அதிகமாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.
கடைசி 5 இடம் பிடித்த மாவட்டங்கள்!
ராணிப்பேட்டை (83.54% ) மாவட்டம் கடைசி இடத்தை பிடித்துள்ளது.
இதற்கு அடுத்தபடியாக நாகப்பட்டிணம் ( 84.41 %), கிருஷ்ணகிரி ( 85.36 % ), மயிலாடுதுறை ( 86.31 %), செங்கல்பட்டு ( 88.27 % ) உள்ளிட்ட மாவட்டங்கள் உள்ளது.
No comments:
Post a Comment