தமிழகத்தில் 10ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இந்த தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge.tn.gov.in என்ற இணையதள முகவரியின் வாயிலாக மாணவர்கள் அறிந்து கொள்ளலாம். பள்ளி மாணவர்கள், தனித்தேர்வர்களுக்கான தேர்வு முடிவுகள் அவர்கள் செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி வழியாகவும் அனுப்பப்படும். அத்துடன் தாங்கள் படித்த பள்ளிகள் மூலமும் அறியலாம்.10ம் வகுப்பு பொதுத் தேர்வில் 91.39% மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
*தேர்வெழுதிய மொத்த மாணாக்கர்களின் எண்ணிக்கை : 9,14,320
* மாணவியர்களின் எண்ணிக்கை :4,55,017
* மாணவர்களின் எண்ணிக்கை: 4,59,303
முதல் 5 இடம் பிடித்த மாவட்டங்கள்!
பெரம்பலூர் : 97.67%
சிவகங்கை : 97.53%
விருதுநகர் : 96.22%
கன்னியாகுமரி : 95.99%
தூத்துக்குடி : 95.58%
No comments:
Post a Comment