அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, விருப்ப இடமாறுதல் கவுன்சிலிங், இன்று துவங்குகிறது. இரவில் கவுன்சிலிங்கை நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது
முதல் நாளில், சுழற்சி மாறுதல் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, வருவாய் மாவட்டத்துக்குள் இடமாறுதல் நடக்க உள்ளது.
படிப்படியாக ஒவ்வொரு பிரிவினருக்கும், 26ம் தேதி வரை கவுன்சிலிங் நடக்கிறது. இரவு நேரத்திலும் கவுன்சிலிங் நடத்தப்படுவது உண்டு.
அதனால், ஆசிரியர்கள் விடிய விடிய காத்திருப்பர்.
அந்த நிலை இன்றி, இந்த முறை இரவு நேரத்தில் நடத்தாமல், பகலிலேயே கவுன்சிலிங்கை முடிக்க, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுஉள்ளது
No comments:
Post a Comment