பள்ளிக்கல்வி ஆணையரகம் சார்பில், அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை விவரம்; தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மத்திய, மாநில அரசுப்பணிகளுக்கான பல்வேறு போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்வதற்கு துறையின் முன் அனுமதி பெற வேண்டும்.
இதற்கான விண்ணப்பங்களை முதன்மைக் கல்வி அலுவலகங்களில் இருந்து ஆணையரகத்துக்கு பரிந்துரை செய்து அனுப்புவதில் காலதாமதம் ஏற்படுவது தெரியவந்துள்ளது.
இந்நிலையை தவிர்க்கும் பொருட்டு இனிவரும் காலங்களில் தங்கள் மாவட்ட அலகுக்குட்பட்ட ஆசிரியர்களுக்கு அந்தந்தமுதன்மைக் கல்வி அதிகாரிகளே போட்டித்தேர்வுகளில் பங்கேற்பதற்கு முன் அனுமதிவழங்கலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment