ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி
பள்ளி மேலாண்மைக்குழு கூட்டம் - 30.09.2022
நடைபெறுவதற்கான வழிமுறைகள்
1. 30.9.2022 அன்று நடைபெறும் பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தினை மாநில திட்ட இயக்குனர் மற்றும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுடைய செயல்முறைகளின் படி செயல்படுத்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
2. பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொள்வதை பள்ளி தலைமை ஆசிரியர்கள் உறுதி செய்து கொள்ள வேண்டும்.
3. அழைப்பிதழ் அல்லது தொலைபேசி வாயிலாக அவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு இருக்க வேண்டும்.
4. பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தில் பங்குபெறும் உறுப்பினர்கள் வருகையை TNSED Parents ஆப்ல் வருகையை அன்றைய தினமே பதிவு செய்தல் வேண்டும்.
5. பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் வருகையை பள்ளி தலைமை ஆசிரியர் அல்லது பள்ளி மேலாண்மை குழு தலைவர் தொலைபேசி எண் மூலம் (Username & Password) வருகை பதிவை update செய்தல் வேண்டும்.
6. மாநிலத் திட்ட இயக்குனர் அவர்களின் செயல்முறைகளில் கொடுக்கப்பட்டுள்ள கூட்டப் பொருட்களை அன்றைய தினம் தீர்மானமாக இயற்றப்பட வேண்டும்.
7. பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தில் இயற்றப்பட்ட தீர்மானங்களை அக்டோபர் 02.10.2022 அன்று நடைபெறும் கிராம சபை கூட்டத்தில் விவாதிக்க வேண்டும்.
8. பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தில் தங்கள் பள்ளி சார்ந்த தேவைகள் ஏதாவது ஒன்றினை (பள்ளி செயல்திட்டம் சார்ந்து ) பள்ளி மேம்பாட்டு திட்ட TNSED parents app-ல் அன்றைய தினமே பதிவேற்றம் செய்திட வேண்டும்.
No comments:
Post a Comment