காலைச் சிற்றுண்டித் திட்டம் தொடக்கம் - மாணவர்களுக்கு ஊட்டிவிட்ட முதல்வர் - Asiriyar.Net

Thursday, September 15, 2022

காலைச் சிற்றுண்டித் திட்டம் தொடக்கம் - மாணவர்களுக்கு ஊட்டிவிட்ட முதல்வர்

 

மதுரையில் காலைச் சிற்றுண்டித் திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின், மாணவர்களுக்கு உணவை ஊட்டிவிட்டு அவர்களுடன் அமர்ந்து உணவருந்தினார்.


அரசு தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது.




முதல்கட்டமாக மாநகராட்சி, நகராட்சி மற்றும் கிராமங்களில் உள்ள 1,545 பள்ளிகளில் இத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. முன்னாள் முதல்வா் அண்ணா பிறந்தநாளான இன்று இத்திட்டத்தை முதல்வா் மதுரையில் தொடக்கி வைத்தார்.


சிம்மக்கல் பகுதியில் உள்ள மாநகராட்சி தொடக்கப் பள்ளியில், காலைச் சிற்றுண்டித் திட்டத்தைத் தொடக்கி வைத்த முதல்வர் ஸ்டாலின், மாணவர்களுடன் அமர்ந்து உணவருந்தினார். அப்போது அருகிலிருந்த மாணவர்களுக்கு உணவை ஊட்டிவிட்டார்.



No comments:

Post a Comment

Post Top Ad