எண்ணும் எழுத்தும் பயிற்சி தேதி மாற்றம் - SCERT Proceedings - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Tuesday, September 27, 2022

எண்ணும் எழுத்தும் பயிற்சி தேதி மாற்றம் - SCERT Proceedings

 

வட்டார அளவிலான எண்ணும் எழுத்தும் பயிற்சி அக்டோபர் 10 முதல் 12ந்தேதி நடைபெறும்- SCERT இயக்குநர் அவர்களின் செயல்முறைகள்.


பார்வை -1 ல் காணும் கடிதத்தின்படி எண்ணும் எழுத்தும் சார்ந்து மாவட்ட அளவிலான தமிழ் ஆங்கிலம் மற்றும் கணித பாடத்திற்கான கருத்தாளர் பயிற்சியைத் தொடர்ந்து ஒன்றிய அளவிலான பயிற்சியை 06 : 10.2022 முதல் 08 : 10.2022 முடிய நடத்திடுமாறு அனைத்து மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது.


தற்போது , பார்வை -2 ல் காண் ஆய்வுக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட வழிகாட்டுதல்படி நிருவாகம் காரணங்களுக்காக ஒன்றிய அளவிலான பயிற்சியின் நாட்கள் 10.10.2022 முதல் 12.10.2022 முடிய நடத்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது.


எனவே , மாற்றம் செய்யப்பட்டுள்ள நாட்களில் பயிற்சியினை தொய்வின்றி நடத்திட அனைத்து மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.


Post Top Ad