மறுகூட்டல் விண்ணப்பம், மதிப்பெண் மாற்ற பதிவெண் பட்டியல் நாளை வெளியீடு - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு - Asiriyar.Net

Wednesday, September 21, 2022

மறுகூட்டல் விண்ணப்பம், மதிப்பெண் மாற்ற பதிவெண் பட்டியல் நாளை வெளியீடு - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

 




பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட அறிக்கை: கடந்த  ஜூலை, ஆகஸ்ட் மேல்நிலை முதலாம் ஆண்டு, இரண்டாம் ஆண்டு துணைத் தேர்வுகள்  எழுதி மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு கோரி விண்ணப்பித்தவர்களுள்  மதிப்பெண் மாற்றம் உள்ள தனித்தேர்வர்களது பதிவெண்களின் பட்டியல்  www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் நாளை பிற்பகல் 12 மணிக்கு வெளியிடப்பட  உள்ளது. இப்பட்டியலில் இடம் பெறாத பதிவெண்களுக்கான விடைத்தாள்களில் எவ்வித  மதிப்பெண் மாற்றமும் இல்லை என தெரிவிக்கப்படுகிறது.


மறுகூட்டல்,  மறுமதிப்பீட்டில் மதிப்பெண் மாற்றம் உள்ள தனித்தேர்வுகள் மட்டும்  மேற்குறிப்பிட்ட இணையதளத்தில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகிய  விவரங்களை பதிவு செய்து தங்களுக்கான திருத்தப்பட்ட மதிப்ெபண்கள் அடங்கிய  பட்டியலை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் மேல்நிலை துணை தேர்வு  எழுதிய தனித்தேர்வர்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் தேதி  பின்னர் அறிவிக்கப்படும்.


No comments:

Post a Comment

Post Top Ad