மாணவர்கள் புகைப்பிடிப்பதை கண்டித்த ஆசிரியர்களில் இருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்; இருவரை இடமாற்றம் செய்து, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டார்.திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த சேவூர் கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்படுகிறது.
சில நாட்களுக்கு முன், அப்பள்ளியில் படிக்கும் பிளஸ் 1 மாணவர் ஒருவர், பள்ளி முடிந்து வீட்டுக்கு செல்லும்போது, நண்பர்களுடன் சிகரெட் குடித்து, மாணவியரின் முகத்தில் புகையை விட்டு கேலி, கிண்டல் செய்துள்ளனர்.பாதிக்கப்பட்ட மாணவியர், அவர்களது பெற்றோர், ஆசிரியர்களிடம் தெரிவித்தனர்.
இதையடுத்து, ஆசிரியர்கள் வெங்கடேசன், திலீப்குமார், நித்தியானந்தம், பாண்டியன் ஆகியோர் புகைப்பிடித்த மாணவரை கண்டித்துள்ளனர். அப்போது மாணவருக்கு உள்காயம் ஏற்பட்டதாக கூறி, ஆரணி அரசு மருத்துவமனையில் மாணவரை சேர்த்த பெற்றோர், ஆரணி போலீசில் புகாரளித்தனர்.
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேஷ்மூர்த்தி, புகார் பெட்டி வைத்து மாணவ, மாணவியரிடம் கருத்து கேட்டார்.அதன் அடிப்படையில், ஆசிரியர்கள் திலீப்குமார், வெங்கடேசன் ஆகியோரை சஸ்பெண்ட் செய்தும், நித்யானந்தத்தை கேளூர் அரசு மேல்நிலைப்பள்ளிக்கும், பாண்டியனை முள்ளண்டிரம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கும் இடமாற்றம் செய்து, நேற்று உத்தரவிட்டார்.
No comments:
Post a Comment