போக்சோ வழக்கில் சிக்கி உயிரை மாய்த்துக்கொண்ட ஆசிரியை வழக்கறிஞரிடம் பேசிய ஆடியோவால் பரபரப்பு மண்ணச்சநல்லூர் அருகே போக்சோ வழக்கில் சிக்கிய அரசு பள்ளி ஆசிரியை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில், ஆசிரியையின் செல்போன் உரையாடல் ஆடியோ வெளியாகியுள்ளது.
திருச்சி மாவட்டம், நெட்டவேலம்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக தமிழ் ஆசிரியர் மோகன்தாஸ் கைது செய்யப்பட்டார்.
மேலும், ஆங்கில ஆசிரியை லில்லி மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்த நிலையில், வீட்டு கழிவறையில் ஆசிரியை லில்லி தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார்.
தற்கொலைக்கு முன்பாக வழக்கறிஞரிடம் ஆசிரியை பேசும் ஆடியோ, சமூகவலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Click Here - Audio link
No comments:
Post a Comment