பள்ளிக்கல்வித் துறையில் அரசுப்பள்ளி மாணவர்களின் சுயவிவரங்கள், கல்வி சார்ந்த பல்வேறு தகவல்கள் பள்ளிக்கல்வி மேலாண்மை தகவல் மையத்தின் (எமிஸ்) தளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகின்றன. சுகாதாரத் துறை அறிவுறுத்தலின்படி சமீபகாலமாக மாணவர்களின் உடல்நலம் சார்ந்த தகவல்களும் சேகரிக்கப்பட்டு பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றன.
அதன்படி, அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களிடம் ஏதேனும் உடல்நலக் குறைபாடு இருக்கிறதா என்பதை பரிசோதனை செய்து தகவல் தெரிவிக்க வேண்டும் என்று ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது. அந்த பட்டியலில் ரத்தசோகை, தைராய்டு, பார்வைபாதிப்பு, காசநோய் உட்பட 36 வகைநோய்கள் இடம்பெற்றுள்ளன.
இதுகுறித்து அரசுப் பள்ளி ஆசிரியர்கள் சிலர் கூறியதாவது:
ஏற்கெனவே எமிஸ் செயலியில் தினசரி நிர்வாகப் பணிகளைமேற்கொள்வதிலேயே பெரும்பாலான நேரம் சென்றுவிடுகிறது. இந்த சூழலில், தற்போது ஒவ்வொரு மாணவரையும் முழுமையாக ஆய்வு செய்து முடிக்க 30 நிமிடங்கள் வரை ஆகிறது. இதனால், கற்பித்தல் பணியில் கவனம்செலுத்த முடியவில்லை.
காலாண்டு தேர்வுக்கு மாணவர்களை தயார்படுத்த வேண்டும். எனவே, இந்த மருத்துவ ஆய்வுப்பணிகளை ஊரக சுகாதாரப் பணியாளர்கள் மூலம் மேற்கொள்ள பள்ளிக்கல்வித் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
No comments:
Post a Comment