பழைய ஓய்வூதியத் திட்டம் - வழக்கு தொடுத்த 30 நபர்களின் விவரங்கள் கோரி உத்தரவு - CoSE Proceedings - Asiriyar.Net

Saturday, September 24, 2022

பழைய ஓய்வூதியத் திட்டம் - வழக்கு தொடுத்த 30 நபர்களின் விவரங்கள் கோரி உத்தரவு - CoSE Proceedings

 

பல்வேறு துறைகளில் மக்கள் கணக்கெடுப்புத் துறையில் பணிபுரிந்து பணிநீக்கம் செய்யப்பட்ட பணியாளர்களை பல்வேறு துறைகளில் ஈர்த்துக் கொள்ளப்பட்டு பணிபுரியும் ஆசிரியரல்லா பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் தமிழ்நாடு ஓய்வூதிய விதிகள் 1978 - ன்படி பழைய ஓய்வூதியத் திட்டத்தில் அனுமதிக்கக் கோரி பார்வை 1 - ல் குறிப்பிட்டுள்ளவாறு திரு . S. முருகன் மற்றும் 29 நபர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து பெறப்பட்ட தீர்ப்பாணையினை செயல்படுத்த வேண்டி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளதாக தெரிவித்து 


இவ்வழக்கின் தீர்ப்பாணையை எதிர்த்து மேல்முறையீட்டு மனு மற்றும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு சார்பாக Affidavit தாக்கல் செய்ய ஏதுவாக இவ்வழக்கு தொடர்ந்த பணியாளர்களில் பள்ளிக் கல்வித் துறையில் பணிபுரியும் பணியாளர்களின் பணி சார்ந்த விவரங்களை கீழ்க்குறிப்பிட்டுள்ள படிவத்தில் உடன் அனுப்பி வைக்குமாறு பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு!










No comments:

Post a Comment

Post Top Ad