பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் கொண்டு வர பரிசீலனை - பகவந்த் மான் - Asiriyar.Net

Tuesday, September 20, 2022

பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் கொண்டு வர பரிசீலனை - பகவந்த் மான்

 




பஞ்சாப் மாநிலத்தில் ஓய்வூதியத் திட்டம் கடந்த 2004-ம் ஆண்டு நிறுத்தப்பட்டது.


இந்த திட்டத்தை மீண்டும் அமல்படுத்த அரசு ஊழியர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆம்ஆத்மி கட்சி பஞ்சாப்பில் ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் கொண்டு வரும் என அக்கட்சியின் தலைவரும், நிதியமைச்சருமான ஹர்பால் சிங் சீமா வாக்குறுதியளித்திருந்தார்.


இந்நிலையில், முதல்-மந்திரி பகவந்த் மான் தனது டுவிட்டர் பக்கத்தில், பழைய ஓய்வூதிய முறைக்கு மாற்றுவது குறித்து எனது அரசாங்கம் பரிசீலித்து வருகிறது. அதை செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் மற்றும் வழிமுறைகளை ஆய்வு செய்ய தலைமைச் செயலாளரிடம் கேட்டுள்ளேன். எங்கள் ஊழியர்களின் நலனுக்காக நாங்கள் உறுதியாக இருக்கிறோம் என்று கூறியுள்ளார்.



No comments:

Post a Comment

Post Top Ad