கருணை அடிப்படையில் பணி நியமனம் - வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு - Asiriyar.Net

Thursday, September 8, 2022

கருணை அடிப்படையில் பணி நியமனம் - வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

 




கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்குவது தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து ஆணையை பதிவுத்துறை தலைவர் வெளியிட்டுள்ளார். இது குறித்து வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து ஆணை: 


கருணை அடிப்படையில் பணிநியமனம் வழங்க காலதாமதம் ஏற்படும் நிலை எழுகிறது. எனவே இனி வருங்காலங்களில் இறப்புற்ற அரசுப்பணியாளரின் வாரிசுக்கு கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்கும் பொருட்டு கருணை அடிப்படையில் பணிநியமனம் கோரி பெறப்பட்ட மனு மற்றும் அதன் இணைப்புகளை மாவட்டபதிவாளர் ஆய்வு செய்து மனுதாரரால் தெரிவிக்கப்பட்ட விவரங்களின் உண்மை தன்மை குறித்தும், குடும்பம் வறிய சூழலில் உள்ளதா என்பது குறித்தும், கருணை அடிப்படையில் நியமனம் கோரும் கோரிக்கை, பரிசீலனைக்கு உகந்ததா என்பது குறித்தும் திருப்தியடைந்த பின்னர் துணைப்பதிவுத்துறை தலைவருக்கு கருத்துருவை மேலனுப்ப வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



No comments:

Post a Comment

Post Top Ad