அரசு பள்ளிகள் நவீன மயமாக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி அளித்துள்ளார். தமிழகத்தில் 58 ஆயிரம் அரசு, அரசு உதவி பெரும் பள்ளிகள் நிதி நிலைக்கே ஏற்ப மத்திய - மாநில அரசுகளின் நிதி உதவியோடு நவீன மயமாக்கப்படும் என பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். திருச்சி மாவட்டம், மனப்பாறையை அடுத்த கொடும்பபட்டியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மற்றும் அரசு பள்ளிக்கு சுற்று சுவர் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதில் பள்ளிகல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது, வரும் பட்ஜெட் கூட்டத் தொடரில் பள்ளிக் கல்வித்துறைக்கு அதிகநிதி ஒதுக்கிடு செய்ய வேண்டும் என்று நிதிஅமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளேன். 120 கல்வி மாவட்டங்களில் மாதிரி பள்ளி கொண்டு வர வேண்டும் என்றும் நிதிஅமைச்சரிடம் வலியுறுத்தி உள்ளோம். பள்ளிக்கல்வி துறையின் மாணவ - மாணவிகளின் வளர்ச்சிக்கான திட்டங்கள் குறித்து வரும் கூட்டத்தொடரில் முதல்வர் அறிவிப்பார். தமிழகத்தில் 58 ஆயிரம் அரசு, அரசு உதவி பெரும் பள்ளிகள் நிதி நிலைக்கே ஏற்ப மத்திய - மாநில அரசுகளின் நிதி உதவியோடு நவீன மயமாக்கப்படும் என்று அவர் கூறினார்.
No comments:
Post a Comment