தமிழகத்தில் 29, 30-ம் தேதிகளில் அதீத கனமழை பெய்யும் என்பதால் ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளது. 29-ம் தேதி கோவை, திருப்பூர், தென்காசி, 30-ம் தேதி நீலகிரி, கோவை, திருப்பூரில் அதீத கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது. வெப்பச்சலனம் காரணமாக தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், திண்டுக்கல், நீலகிரியில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
ஈரோடு, தேனி மற்றும் புதுச்சேரி பகுதியில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இதர மாவட்டங்களில் இன்று இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என கூறப்பட்டுள்ளது. நாளை செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், திண்டுக்கல், நீலகிரியில் இடியுடன் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேனி, திருவண்ணாமலை, சேலம் மற்றும் புதுச்சேரியில் இடி, மின்னலுடன் கனமழை பெய்யக்கூடும் எனவும் கூறியுள்ளது. தமிழ்நாடு, புதுவையில் அநேக இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில் 30-ம் தேதி வரை கன மழை பெய்ய வாய்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை 2 நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், ஒருசில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. விழுப்புரம் அனந்தபுரத்தில் 10 செ.மீ., கள்ளக்குறிச்சியின் அரியலூரில் 8 செ.மீ., முங்கில்துறைப்பட்டில் 6 செ.மீ மழை பதிவாகியுள்ளது.