அரசு ஊழியர்கள், தங்களின் துறை தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை, டி.என்.பி.எஸ்.சி.,யின் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்' என, அறிவிக்கப்பட்டுள்ளது.டி.என்.பி.எஸ்.சி., செயலர் உமா மகேஸ்வரி வெளியிட்ட செய்திக்குறிப்பு:
அரசு ஊழியர்களுக்கான, மே மாத துறை தேர்வுகள், இம்மாதம் நடக்க உள்ளன.
கொள்குறி வகையிலான கணினி வழி தேர்வு, வரும் 16ல் துவங்கி 23ல் முடிகிறது. விரிந்துரைக்கும் வகை தேர்வு 24ல் துவங்கி 27ல் முடிகிறது.இந்த தேர்வுகளுக்கான நுழைவு சீட்டை, டி.என்.பி.எஸ்.சி.,யின் இணையதளத்தில், துறை தேர்வுக்கான ஒரு முறை பதிவின் வழியே, தங்களின் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.தேர்வர்கள் நுழைவு சீட்டு இருந்தால் மட்டுமே, தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment