பட்ஜெட்டில் கோரிக்கைகள் அறிவிக்கப்படாததால் ஆக., 16 ல் மாநிலம் முழுவதும் ஆயிரம் இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்த தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் முடிவு செய்துள்ளனர்.
சங்க நிர்வாகிகள் கூறியதாவது: தமிழக பட்ஜெட்டில் சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக வரன்முறைப்படுத்த, கொரோனாவை காட்டி 27 மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்ட அகவிலைப்படி அறிவிக்காதது,புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்யாதது போன்ற அரசு ஊழியர்களின் நீண்டநாள் கோரிக்கைகள் குறித்து அறிவிப்பு இல்லாதது ஏமாற்றமளிக்கிறது.
அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை நடப்பு சட்டசபை கூட்டத்தொடரிலேயே முதல்வர் ஸ்டாலின் அறிவிக்க வேண்டும்.முதல்வர் கவனத்தை ஈர்க்கும் வகையிலும், தேர்தல் வாக்குறுதியில் தெரிவிக்கப்பட்டதை நிறைவேற்ற கோரியும் ஆக.,16ல் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என கூறியுள்ளனர்.