மகப்பேறு விடுமுறை வழங்குவதில் எந்த பாகுபாடும் காட்டக்கூடாது என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது. பெண் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் சம்பளத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பை 270 நாட்களாக அதிகரித்து, தமிழக அரசு பிறப்பித்த உத்தரவு அமல்படுத்தப்படவில்லை என சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இதனை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி மற்றும் கிருபாகரன் ஆகியோர் அடங்கிய அமர்வு, மகப்பேறு விடுப்பு வழங்குவதில் வரன்முறை செய்யப்பட்ட ஊழியர்களுக்கும், வரன்முறை செய்யப்படாத ஊழியர்களுக்கும் இடையே பாகுபாடு காட்டக்கூடாது. அனைவருக்கும் ஒரே மாதிரி மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும் என அறிவுறுத்தினர்.
No comments:
Post a Comment