இலவச கல்வி உபகரணத்தின் தரம் - மாணவர்களின் கருத்துபெற உத்தரவு - Asiriyar.Net

Monday, August 16, 2021

இலவச கல்வி உபகரணத்தின் தரம் - மாணவர்களின் கருத்துபெற உத்தரவு

 




தமிழகத்தில் அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வரும், இலவச கல்வி உபகரணப் பொருட்களின் தரம், அளவு, வண்ணம் மற்றும் மாணவர்கள் பயன்படுத்துவதற்கு ஏற்ற வகையில் இருக்கிறதா என்பது குறித்து மாணவர்களின் கருத்துகளை பெற்று அனுப்ப வேண்டும் என்று கடந்த மாதம் 20ம் தேதி நடந்த கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. 


அதன்படி ஒவ்வொரு கல்வியாண்டும், விலையில்லா கல்வி உபகரணப் பொருட்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டவுடன், 4 அல்லது 5 நாட்களுக்குள் மாணவர்களிடம் விலையில்லா கல்வி உபகரணப் பொருட்களின் பயன்பாடு குறித்து கருத்துகள் பெறப்பட வேண்டும். ஒவ்வொரு கல்வி மாவட்டத்திற்கும் தனித்தனியாக அறிக்கை பெறப்பட வேண்டும்.


விலையில்லாக் கல்வி உபகரணப்பொருட்கள் பெறப்பட்டவுடன், பொருட்கள் தேவைப்பட்டியலின் அடிப்படையில் பெறப்பட்டுள்ளதா மற்றும் அவற்றின் தரம் சரியான முறையில் உள்ளனவா உரியவற்றை அலுவலர் மூலம் சரிபார்த்து, அதன் விவரத்தினை உடனடியாக அனுப்பப்படவேண்டும். எனவே மாவட்டத்தில் உள்ள மாவட்டக்கல்வி அலுவலர், தலைமையாசிரியர்கள் வாயிலாக கருத்துகள் கோரப்பட்டுள்ளது. 


அதற்கான கொடுக்கப்பட்டுள்ள படிவத்தில் பூர்த்தி செய்து கல்வி மாவட்டம் வாரியான தொகுப்பறிக்கையை சென்னை தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். 2 நகல்கள் விரைவு அஞ்சலில் அனுப்ப மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பள்ளிக்கல்வி இணை இயக்குனர் நரேஷ் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியுள்ளார்.





Post Top Ad