அரசுப் பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் 9ம் வரை படிக்கும் மாணவர்கள், அறிவியல் மற்றும் கணித பாடங்களை இணைய வழிக் கல்வி மூலம் செயல்வழிக் கற்றல் மூலம் வகுப்பு எடுக்க பள்ளிக் கல்வித்துறை அனுமதி அளித்துள்ளது.
இது குறித்து பள்ளிக் கல்வி ஆணையர் நந்தகுமார் வெளியிட்டுள்ள அறிவிப்பு: தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, ஈரோடு, திருப்பூர், ராமநாதபுரம், விருதுநகர், தேனி, கடலூர், திருநெல்வேலி, தென்காசி, கரூர் என 18 மாவட்டங்களில் புதியதாக அறிவியல் மையங்கள், நடமாடும் அறிவியல் சோதனைக்கூடம் ஆகியவற்றை செயல்படுத்த பன்னாட்டு நிறுவனமான அகஸ்தியா தொண்டு நிறுவனத்துக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.
மேலும், இந்த நிறுவனம், சென்னை உள்ளிட்ட பிற மாவட்டங்களிலும் மேற்கண்ட திட்டத்தை செயல்படுத்தி வரும் நிலையில் இந்த ஆண்டும் தொடர்ந்து செயல்படுத்தவும் அனுமதிக்கப்படுகிறது. தற்போதுள்ள கொரோனா தொற்று சூழ்நிலை காரணமாக பள்ளிகள் திறக்கப்படாததால், அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி மேற்கண்ட திட்டத்தை அந்தந்த மாவட்டங்களில் செயல்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளதால் பள்ளி மாணவர்களின் கற்றல், கற்பித்தல் பணிகள் பாதிக்காத வகையிலும், மேற்கண்ட திட்டத்தை செயல்படுத்த அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
No comments:
Post a Comment