CPS, அகவிலைப்படி உயர்வு, ஊதிய முரண்பாடு கோரிக்கைகைகள் தாமதமின்றி நிறைவேற்ற வேண்டும் - ராமதாஸ் - Asiriyar.Net

Monday, August 30, 2021

CPS, அகவிலைப்படி உயர்வு, ஊதிய முரண்பாடு கோரிக்கைகைகள் தாமதமின்றி நிறைவேற்ற வேண்டும் - ராமதாஸ்

 


அரசு ஊழியர்களின் உரிமைகளை வழங்குவதை தாமதப்படுத்துவது நியாயமல்ல என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.


இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் நீண்ட காலமாக எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் பழைய ஓய்வூதிய திட்டம், அகவிலைப்படி உயர்வு, ஊதிய முரண்பாடுகளை களைதல் உள்ளிட்ட கோரிக்கைகளை அரசு ஏற்காதது அவர்களைப் பெரும் சங்கடத்திற்குள்ளாக்கியுள்ளது.


தமிழக அரசு நிர்வாகத்தில் முதுகெலும்பாகத் திகழ்பவர்கள் அரசு ஊழியர்கள். அவர்களுடைய உரிமைகளை வழங்குவதில் தாமதப்படுத்துவது நியாயம் கிடையாது. எனவே 2003-ம் ஆண்டுக்குப் பிறகு பணியில் சேர்ந்த ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும். அரசு மருத்துவமனை மருத்துவர்களுக்கு, மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையாக ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வைத்துள்ளார்.









Post Top Ad