JACTTO GEO - ஆசிரியர்கள் ஏன் மாநாட்டிற்கு வர வேண்டும்? - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Saturday, September 10, 2022

JACTTO GEO - ஆசிரியர்கள் ஏன் மாநாட்டிற்கு வர வேண்டும்?

 




ஆசிரியருக்கு வணக்கம்..


 *ஏன் நாளை மாநாட்டிற்கு வர வேண்டும்?*


ஒவ்வொரு சங்கமும்

👉🏼 மாலை நேர ஆர்ப்பாட்டம்

👉🏼 கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

👉🏼 மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம்

👉🏼ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் 

👉🏼தற்செயல் விடுப்பு போராட்டம்

👉🏼உண்ணாவிரதம் 

👉🏼மனித சங்கிலி போராட்டம்

👉🏼 காத்திருப்பு போராட்டம்

*இறுதியாக*

🤲🏼வேலை நிறுத்தம் 


என பல போராட்டங்களை சந்தித்து *இறுதியில் சந்திப்பது முதலமைச்சரின் நம்பிக்கையான வாக்குறுதிகளை தான்* அவ்வாக்குறுதிகளின் அடிப்படையில் போராட்டங்கள் முடிவுக்கு வரும். இதுபோல கடந்த 18 ஆண்டுகளாக போராட்டங்கள் தொடர்கின்றன. 


ஆனால் இயக்க வரலாற்றில் போராட்ட வரலாற்றில் எப்போதும் இல்லாத அளவிற்கு *இவை எல்லாம் செய்வதற்கு முன்னே முதலமைச்சர் நம்மோடு பேச வருகிறார்* 


பேச்சுவார்த்தையில்  10 சங்கப் பிரதிநிதிகளுக்கு முன்னால் தரும் வாக்குறுதிகளை *பல்லாயிரக்கணக்கான அரசு ஊழியர்கள் முன்னே தர வருவார் என்ற நம்பிக்கையோடு இருக்கின்றோம்.*


மாநாட்டில் கலந்துகொள்ளும் நம்மை கண்டு *இத்தனை ஊழியர்கள் நம்மை நம்பி இருக்கிறார்கள் என்ற எண்ணம் அவர் மனதில் ஏற்பட்டால் மட்டுமே நேர்மறையான சில வார்த்தைகளை அவர் சொல்ல நேரிடும்*. எனவே *களப்போராட்டங்களில் கலந்து கொள்ளவில்லை என்றாலும் நாளை நடக்கும் மாநாட்டில் ஒரு அரசு ஊழியராக ஆசிரியராக கட்டாயம் கலந்து கொண்டு இதுவரை ஆற்றாத களப்பணியை நாளைக்கு ஆற்ற* மாநாட்டிற்கு வர வேண்டும் என வேண்டி கேட்டுக்கொள்கிறோம்.


சமூகத்தில் ஒவ்வொரு அரசு ஊழியருக்கும்  *நன்மதிப்பு இருப்பது நாம் செய்யும் பணியால் மட்டுமே* இந்த பணிக்கு ஒரு பாதிப்பு என்றால் யாரோ சிலர் போராட மாட்டார்கள் *உங்கள் பணி உங்கள் வாழ்க்கை உங்கள் பெருமை உங்கள் நம்பிக்கைக்கு நீங்கள் தான் களத்திற்கு நேரடியாக வரவேண்டும்* உங்கள் கௌரவத்தை உங்கள் வாழ்க்கையை  காத்துக் கொள்ள நம்பிக்கையோடு மாநாட்டிற்கு வரும்படி அன்புடன் அழைக்கின்றோம்.


உறவினர் திருமணங்களுக்கு ஆயிரம் கி.மீ செல்லும் நாம், உணர்வான நம் பணிக்கான கோரிக்கை போராட்டத்திற்கு சில கிலோமீட்டர் செல்வது பெரிதல்ல.

*இது உங்கள் வாழ்க்கைக்கானது உங்களுக்கானது யாரையும் எதிர்பார்க்காமல் துணிந்து எழுந்து வாருங்கள்.*


*மாநாட்டில் எல்லாம் மாறிவிடும் என்று சொல்லவில்லை*


 ஆனால் 


*நீண்ட பயணம் முதல் அடியில் இருந்து தான் தொடங்கும்* என்ற பொன்மொழிகள் மீது நம்பிக்கை கொண்டு வாருங்கள்.. 

*10/9/22   சனிக்கிழமை  சென்னை   தீவுத்திடலில்   நடைபெறும்   வாழ்வாதார   நம்பிக்கை   மாநாட்டில்   நமது   கடமைகள்.*

💥💥💥💥💥💥💥


👉*கடமையை   செய்வோம்   உரிமையை   கோருவோம் என்பது   நமது   அனைவரின்   தாரக    மந்திரம்.*


👉மாநாட்டில்   முதல்வர்   என்ன வேண்டுமானாலும்    சொல்லட்டும்.   நாம்   செய்ய   வேண்டியதை   சரியாக   செய்வோம்.


👉கண்ணுக்கு   முன்   இருக்கும்   நமது  ஊழியர்களை/ ஆசிரியர்களை   திரட்டுவது  நமக்கு    கடினம்   என்றால்,  கண்ணுக்கு   தெரியாத   பொருளாதார   கோரிக்கைகளை   நிறைவேற்ற   ஆட்சியாளர்கள்   யோசிப்பார்கள்   இல்லையா?    அவர்களை   யோசிக்க   விடாமல்,


👉தன்னெழுச்சியாக      அனைவரும்   ஏதோ   ஒரு  வழியில்   மாநாட்டிற்கு   சென்று   அடைவது   என  முடிவு   எடுப்போம்.


👉நாம்   ஒருவர்   செல்லவில்லை யென்றால்   என்ன    என்று   பின்வாங்காதீர்கள்.   ஒவ்வொருவரும்   சேர்ந்தால்தான்   கூட்டம்.


👉நமது   உழைப்பில்   வாழ்ந்து   கொண்டு   இருக்கின்ற   சில   வீணர்களின்   வீண்பேச்சை   கேட்டு   மாநாட்டிற்கு   வராமல்   இருந்து விடாதீர்கள்.  அந்த   வீணர்களையும்    அழைத்து வர   முயற்சி   செய்யுங்கள்.

*இம்மாநாடு கோரிக்கைகள் வென்றெடுக்கும் முதல் படியாக இருக்கலாம்*

🚶🏻‍♂️🚶🏻‍♀️🚶🏻‍♂️🚶🏻‍♀️🚶🏻‍♂️🚶🏻‍♀️🚶🏻‍♂️🚶🏻‍♀️

நல்லதே நடக்கும்

நம்பிக்கையோடு செல்வோம்


வாருங்கள் ஒன்றிணைந்து செல்வோம்.. 

(தவிர்க்கக் காரணம் தேடாதீர்)






Post Top Ad