பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் மருத்துவமனையில் அனுமதி - Asiriyar.Net

Post Top Ad

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Tuesday, September 27, 2022

பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் மருத்துவமனையில் அனுமதி

 பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் காய்ச்சல் காரணமாக சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.


சென்னையில் நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்ற பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷுக்கு திடீர் உடலநலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக  அனுமதிக்கப்பட்டுள்ளார்.


இவருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் பரவி வந்த நிலையில், அமைச்சர் அன்பில் மகேஷ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகதான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும், அவருக்கு லேசான அறிகுறிகள் மட்டுமே இருப்பதாகவும். விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தகவல் தெரிவித்துள்ளார்.


அமைச்சர் அன்பில் மகேஷ் உடல்நிலை தொடர்பாக  மருத்துவமனை அறிக்கை விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Post Top Ad