தமிழகத்தில் ஏற்கனவே உள்ள தளர்வுகளுடன் ஜன.31 ம் தேதி வரை பொதுமுடக்கம் நீட்டிப்பு. - Asiriyar.Net

Post Top Ad


Thursday, December 31, 2020

தமிழகத்தில் ஏற்கனவே உள்ள தளர்வுகளுடன் ஜன.31 ம் தேதி வரை பொதுமுடக்கம் நீட்டிப்பு.

 கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுப்பதற்காக , மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி , தமிழ்நாட்டில் 25.3.2020 முதல் தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ் , ஊரடங்கு உத்தரவு பல்வேறு தளர்வுகளுடன் அமலில் இருந்து வருகிறது. மாண்புமிகு அம்மாவின் அரசு , இந்த நோய்த் தொற்றிலிருந்து மக்களை காத்து அவர்களுக்கு உரிய நிவாரணங்களை வழங்கி , முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. 


தமிழ்நாடு அரசின் சிறப்பான செயல்பாட்டினாலும் , பொதுமக்களின் ஒத்துழைப்பினாலும் , மாநிலத்திலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் , நோய்த் தொற்று பரவல் படிப்படியாக குறைந்து , நோய்த் தொற்று கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது . தமிழ்நாடு அரசின் சிறப்பான நடவடிக்கைகளினால் , நோய்த் தொற்று விகிதம் கடந்த ஒரு மாதமாக 1.7 சதவிகிதத்திற்கும் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது . கடந்த 10 நாட்களாக இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாள் ஒன்றுக்கு 1,100 நபர்களுக்கு கீழாகவே உள்ளது. சிகிச்சையில் இருப்போரின் எண்ணிக்கை சுமார் 50,000 ல் இருந்து தற்போது 8,867 நபர்கள் என்ற அளவிற்கு குறைந்து உள்ளது.
Recommend For You

Post Top Ad