பட்டதாரிகளுக்கு (2) தமிழக அரசு வேலை - Last Date to Apply 08.01.2021 - Asiriyar.Net

Post Top Ad


Friday, December 25, 2020

பட்டதாரிகளுக்கு (2) தமிழக அரசு வேலை - Last Date to Apply 08.01.2021

 


ஒரு வருகைக்கு ரூ.1000 ஊதியத்தில் தமிழக அரசு வேலை – ஆண்,பெண் பட்டதாரிகளுக்கு அழைப்பு !


தமிழக அரசின் சமூக நலத்துறையின் மூலம் தற்போது அரசு கூர்நோக்கு இல்லம் மற்றும் சிறப்பு இல்லங்களில் உள்ள சிறார்களுக்கு ஆலோசனைகள் வழங்க ஆலோசகர் (ஆற்றுப்படுத்துநர்) பணிக்கு அதிகாரபூர்வ பணியிட அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியான ஆண், பெண் பட்டதாரிகள் இந்த அரசு பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த பணியிடம் குறித்த முழு விவரங்களையும் கீழே எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்து கொள்ளலாம்.
நிறுவனம்    -    TN Govt

பணியின் பெயர்   -     Counsellor

பணியிடங்கள்   -     02

கடைசி தேதி   -     08.01.2021

விண்ணப்பிக்கும் முறை Offline
தமிழக அரசு பணிகள் :

சென்னை, கடலூர், திருச்சி, சேலம், கோவை, மதுரை, திருநெல்வேலி உள்ள கூர்நோக்கு இல்லம் மற்றும் சென்னை, செங்கல்பட்டு ஆகிய இடத்தில உள்ள சிறப்பு இல்லங்களில் பணியாற்ற 02 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.


ஆண் பட்டதாரி – 01 || பெண் பட்டதாரி – 01
ஆலோசகர் (ஆற்றுப்படுத்துநர்) கல்வித்தகுதி :

அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிறுவனங்களில் உளவியல் மற்றும் ஆற்றுப்படுத்துதலில் முதுகலை பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு வருகையின் அடிப்படையில் ஒரு வருகைக்கு போக்குவரத்துக்கு செலவு உட்பட ரூ.1000/- ஊதியமாக வழங்கப்படும்.


விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் வரும் 08.01.2021 அன்றுக்குள் நன்னடத்தை அலுவலர், அரசினர் கூர்நோக்கு இல்லம், 34, கீழரண் சாலை, திருச்சிராப்பள்ளி – 620002 என்ற முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.


Click Here To Download - Notification - PdfRecommend For You

Post Top Ad