ஆங்கில புத்தாண்டு ராசி பலன் 2026 - Asiriyar.Net

Thursday, January 1, 2026

ஆங்கில புத்தாண்டு ராசி பலன் 2026

 



பொதுப் பலன்கள்:

2026-ஆம் ஆண்டு விஸ்வாவசு வருடம், மார்கழி மாதம் பிறக்கிறது, பஞ்சபட்சியில் வல்லாறு வலுவிழந்த நேரத்தில் பிறப்பதால் நல்ல பலன்கள் உண்டு என ஜோதிடர்கள் கூறுகிறார்கள்.


பெண்கள் அதிகம் வெற்றி பெறுவார்கள், பெண்கள் சார்ந்த துறைகளில் முன்னேற்றம் இருக்கும்.


அதிர்ஷ்டங்களை பெறப்போகும் ராசிகள் குறித்து பல கணிப்புகள் வெளியாகியுள்ளன. 


மொத்தத்தில், 2026-ஆம் ஆண்டு பல நல்ல விஷயங்களை எதிர்பார்க்கும் ஆண்டாக அமையும் என ஜோதிடர்கள் கணித்துள்ளனர். 


ராஜா கிரகமான சூரியனின் ஆதிக்கத்தில் - கிருத்திகை நட்சத்திரத்தில் இந்த வருடம் பிறக்கவுள்ளது 2026 ஆங்கிலப் புத்தாண்டு! உலகளவில் இந்தியாவின் கை ஓங்கும். திரைத்துறையைச் சேர்ந்தவர்கள் அரசியலில் விஸ்வரூபம் எடுப்பார்கள். எரிபொருள்கள் - பெட்ரோல், டீசல் விலை குறையும்.


புத்தாண்டு யாருக்கு எப்படி இருக்கும் என்பதை அனைவரும் அறிய ஆவலாக உள்ளனர். உஜ்ஜயினி ஜோதிடர் பண்டிட் நளின் சர்மா, கிரக பெயர்ச்சிகளின் அடிப்படையில் 12 ராசிகளுக்கான பலன்களை வழங்குகிறார். அதனடிப்படையில் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கனன பலன்கள் மற்றும் பரிகாரங்கள் பற்றி பார்க்கலாம்.


மேஷம்

மேஷ ராசி அன்பர்களே!


அன்பும், அரவணைப்பும் கொண்டு விளங்கும் மேச ராசி வாசகர்களே!


இந்த ஆண்டு உங்களின் ராசிக்கு ராசிநாதன் செவ்வாய் பாக்கியஸ்தானத்தில் அமர்ந்து இருப்பதும் சனி அமர்வதும் உங்களின் உழைப்பிற்கும், தனி திறமைக்கும் சவாலாக அமையும்.


இந்த ஆண்டு இரண்டு பெயர்ச்சிகள் குரு மே மாதம் கடகத்திற்கு பெயர்ச்சியாவதும் ராகு / கேது நவம்பர் மாதத்திலும் பெயர்ச்சி அடைகிறார்கள். இனி இந்த ஆண்டு பலன் எப்படி? என்பதை பார்ப்போம் எடுத்த காரியம் நிறைவேற உங்களின் தனிப்பட்ட முயற்சிகள் வெற்றியை பெற்றுத் தரும்.


விரைய சனி காலங்களில் அசையாத சொத்துகள் வாங்கி போடலாம். ஆயுள் காப்பீடு செய்து கொள்ளலாம். சேமிப்பால் பிற்காலத்தில் பலன் தரும் வகையில் சேமிப்பது நல்லது. புதிய தொழில் முயற்சிகளை கைவிடுவதும். கூட்டுத் தொழிலில் கவனமுடன் செயல்படுவதும் நல்லது. முடிந்த அளவு தொழில் செய்வதை விட வேலைக்கு செல்வது நல்லது.


குரு நான்கில் இருப்பது நல்லதல்ல என்றாலும் உங்களின் விரையாதிபதி குரு என்பதால் பெரிய பாதிப்பை தரமாட்டார். ஏழரை சனி காலங்களில் யாரிடமும் அதிகம் பேசுவதை குறைத்து கொள்வது நல்லது. பெண் பிள்ளைக்கு திருமணம் செய்து வைப்பது நல்லது. தொடர்ந்து ஆன்மீக பணிகளில் ஈடுபடுவது உங்களின் கஷ்டங்களை குறைக்கும்.


அதிர்ஷ்ட நிறங்கள்:  

ஓரஞ்சு, சிவப்பு, வெண்மை.


அதிர்ஷ்ட திசைகள்: 

கிழக்கு, மேற்கு, தென் கிழக்கு.


அதிர்ஷ்ட எண்கள்:

9, 6, 2.


அதிர்ஷ்ட மாதம்:

ஜனவரி, மே, ஒக்டோபர், நவம்பர்.


பரிகாரங்கள்:

ஞாயிறு கிழமைகளில் ராகு காலத்தில் 04.30 - 06.00 மணிக்குள் பைரவருக்கு மூன்று நல்லெண்ணெய் தீபமேற்றி தயிர் அன்னம் வைத்து தொடர்ந்து வழிபட்டு வர கஷ்டங்கள் நீங்கும்.


ரிஷபம்

ரிஷப ராசி அன்பர்களே!

இந்த ஆண்டு முன்னேற்றத்திற்கான புதிய கதவுகளைத் திறக்கும். குரு பெயர்ச்சி தன்னம்பிக்கையை அதிகரிக்கும். தொழில், நிதி, உறவுகளில் நல்ல பலன்கள். திருமணம் கைகூடும். 


எதையும் யோசித்து காலம் அறிந்து செயல்படும் ரிசப ராசி வாசகர்களே!


இந்த ஆண்டு உங்களின் ராசிக்கு ராசிநாதன் சுக்கிரன் அட்டம ஸ்தானத்தில் அமர்வதும், குரு ஆரம்பத்தில் தனஸ்தானத்திலும் மே மாதம் முதல் மூன்றாமிடத்திலும் சனி லாபஸ்தானத்திலும் அமர்வதும் உங்களின் வாழ்வில் இன்ப துன்பம் கலந்தே இருக்கும். நினைத்ததை அடைய சில நேரம் கடும்சிரத்தை எடுக்க வேண்டியதிருக்கும்.


ராசியில் சந்திரன் உச்சம் பெற்று அமர்வது உங்களின் அரசியல் வாழ்வில் இருக்கும் பதவிகளை தக்க வைத்துக் கொள்வீர்கள். வருமானத்தை தேவைகளுக்கு தகுந்தபடி ஈட்டிக் கொள்வீர்கள். எதையும் முன் கூட்டியே நன்கு யோசித்து செயல்படுவீர்கள். காரணமின்றி யாரிடமும் தொடர்பு கொள்ள மாட்டீர்கள். பணிபுரியுமிடத்தில் பெண்களிடம் யோசித்து பேசுவதும் பழகுவதும் உங்களின் பாதுகாப்பிற்கு நல்லது.


இந்த ஆண்டு இறுதியில் நவம்பரில் ராகு / கேது பெயர்ச்சிக்கு பின்பு கேது மூன்றில் அமர்ந்து உங்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக நற்பலனை பெற்று தருவார் கேட்டதை கிடைக்க செய்வார். உங்களின் மூயற்சிகளுக்கு நல்ல பலன் கிடைக்கும். மே மாதம் குரு பெயர்ச்சி பெறுவதால் கேதுவுடன் இணையும் போது பல வழிகளில் உங்களின் வளர்ச்சி சிறப்பாக அமையும். உங்களின் கலை பயணம் சிறப்பாக அமைத்தாலும் பல சவால்களை அடைய வேண்டி இருக்கும். பொருளாதாரத்தில் நல்ல வளர்ச்சியை அடைவீர்கள். இனி வரும் காலம் உங்களுக்கு சிறப்பாக அமையும்.


பரிகாரம்: 

வெள்ளிக்கிழமை தானம்.

சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயர் வழிபாடு செய்வதும், செவ்வாய் கிழமை சுப்ரமணியரை வழிபாடு செய்வதும் நன்மையை தரும்.


அதிர்ஷ்ட நிறங்கள்:  

வெண்மை, மஞ்சள், நீலம்.


அதிர்ஷ்ட திசைகள்: 

தெற்கு, தென் கிழக்கு, வடக்கு.


அதிர்ஷ்ட எண்கள்:

3, 6, 2.


அதிர்ஷ்ட மாதம்:

ஏப்ரல், மே, ஜுலை, ஒகஸ்ட்.


மிதுனம்

பேராற்றலும், பெருமிதமும் கொண்டு விளங்கும் மிதுன ராசி வாசகர்களே!


இந்த ஆண்டு உங்களின் ராசிக்கு ஆரம்பத்தில் குரு ராசியிலும் மே மாதம் முதல் தனஸ்தானத்திலும் அமர்வதும் உங்களின் ராசிநாதன் ஏழாமிடத்தில் அமர்வதும் கூட்டு தொழில் செய்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் உண்டாகும். கொடுத்து வைத்தவராக எல்லாம் பெறுவீர்கள். சனி தொழில் ஸ்தானத்தில் அமர்ந்து ராசிநாதனை பார்ப்பது உங்களின் வளர்ச்சி வழி கிடைக்கும்.


இந்த ஆண்டு முக்கிய பெயர்ச்சிகள் வருவது 06.03.2026 அன்று சனி பெயர்ச்சியும், 26.05.2026 குரு பெயர்ச்சியும், 19.11.2026 முதல் ராகு / கேது பெயர்ச்சியும் வருகிறது. இதில் உங்களுக்கு சாதகமான குரு பெயர்ச்சியும் சனி பெயர்ச்சியும் உங்களின் வளர்ச்சிக்கு மிகவும் உதவியாக அமையும். குரு கேது இணைவு தனஸ்தானத்தில் அமைவது உங்களின் பெரும் வளர்ச்சி உண்டாக வழிவகுக்கும். கேட்டதை கொடுக்கும் காலமாக அமையும்.


இதுவரை தொழில் இல்லாமல் இருந்து வந்திருந்தால் நல்ல தொழில் மற்றும் வேலை கிடைக்கப் பெறுவீர்கள். யாரையும் எதிர்கொள்ளும் வலிமையை பெறுவீர்கள். குடும்ப பாரத்தை இறக்கி வைத்து சரியான பாதையில் செயல்பட வழி கிடைக்கும். கலைதுறையினருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வந்து சேரும். ஓன்லைன் வர்த்தகத்தில் உங்களின் வளர்ச்சி சிறப்பாக அமையும்  கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றிக் கொள்வீர்கள். குருவின் பார்வை பெறுமிடம் சிறப்பு. ராகுவை குருபார்க்கும் போது ராகுவால் வரும் துன்பம், தீரும். ஆன்மீக சேவை உங்களை ஊக்கபடுத்தும்.


பரிகாரம்: 

புதன் கிழமை பசுவுக்கு தீவனம்.

ஞாயிறு மாலை ராகு காலத்தில் 04.30 - 06.00 மணிக்குள் நவகிரக வழிபாடு செய்து பைரவருக்கும் விளக்கு ஏற்றி புளி சாதம் வைத்து வேண்டிக் கொண்டு வர சகல கஷ்டமும் நீங்கும்.


அதிர்ஷ்ட நிறங்கள்:  

பச்சை, மஞ்சள், சிவப்பு.


அதிர்ஷ்ட திசைகள்: 

மேற்கு, வடமேற்கு, வடக்கு.


அதிர்ஷ்ட எண்கள்:

5, 7, 9.


அதிர்ஷ்ட மாதம்:

பெப்ரவரி, ஜுலை, நவம்பர், டிசம்பர்.


கடகம்

மனவலிமையும், வைராக்கியமும் கொண்ட கடக ராசி வாசகர்களே!


இந்த ஆண்டு உணர்ச்சிபூர்வமான ஸ்திரத்தன்மையையும் மகிழ்ச்சியையும் தரும். வேலையில் பதவி உயர்வு, சம்பள உயர்வு உண்டு. முதலீட்டிற்கு பிற்பகுதி சிறந்தது. தாயின் உடல்நிலையில் கவனம். 


மனவலிமையும், வைராக்கியமும் கொண்ட கடக ராசி வாசகர்களே!


இந்த ஆண்டு உங்களின் ராசிக்கு ராசிநாதன் உச்சம் பெற்று அமர்ந்திருப்பதும், குரு, சனி, ராகு / கேதுகளின் பெயர்ச்சி இந்த ஆண்டு நிகழ்வதால் உங்களின் ராசிக்கு பல ஆண்டுகள் பட்ட கடுமையான மிக கஷ்டபட்ட நிலைமாறி வளர்ச்சி பாதைக்கு செல்வீர்கள். கொடுத்த வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றுவீர்கள்.


எதை செய்தால் நல்லதோ அதை மட்டும் தெரிவு செய்து பலன் பெறுவீர்கள். இதுவரையில் உங்களை ஏமாற்றி வந்தவர்களை அடையாளம் கண்டு கொள்வீர்கள். உங்களின் ராசியில் குரு,, மே மாதம் முதல் அமர்வது உச்ச பலன்களை தரும் வாய்ப்பை பெறுவீர்கள். சனி பாக்கியஸ்தானத்தில் 06.03.2026 முதல் வருவது உங்களுக்கு கிடைக்க கூடிய நற்பலன்களை பெற செய்வார். நவம்பர் மாதத்தில் கேது குருவுடன் இணைவு பெறுவது மிகப்பெரிய நற்பலன்களை பெறுவீர்கள்.


தொழில் நலிந்த அன்பர்களுக்கு இனிமேல் தொழில் விருத்தியை பெற்று தரும். கடமையை சரியாக செய்து உங்களின் வாழ்க்கை சூழ்நிலையை தெறிபடுத்திக் கொள்வீர்கள். எதையும் முன்கூட்டியே அறிந்து செயல்படுவீர்கள். அரசியல் வாதிகளுக்கு இது நல்ல காலமாக அமையும். இருக்கும் பதவியை தக்க வைத்து கொள்வதும் சிலருக்கு புதிய பதவியும் கிடைக்க பெறுவீர்கள். எதை சுமையாக நினைத்தீர்களோ அதன் மூலம் இனி உங்களுக்கு மேன்மையை உண்டாக்கும். ராகு / கேது பெயர்ச்சிக்கு பின்பு உங்களின் மகிழ்ச்சி சிறிது குறைந்தாலும் உங்களின் அரவணைக்கும் பண்பினால் எல்லாம் சரி செய்து விடுவீர்கள். ஆன்மீக நாட்டம் உண்டாகும். நம்பிக்கையுடன் வழிபட நல்லது நடக்கும்.


அதிர்ஷ்ட நிறங்கள்: 

வெண்மை, மஞ்சள், நீலம்.


அதிர்ஷ்ட திசைகள்:

வடக்கு, வடமேற்கு, தெற்கு.


அதிர்ஷ்ட எண்கள்:

2, 3, 9.


அதிர்ஷ்ட மாதம்:

ஜனவரி, பெப்ரவரி, நவம்பர், டிசம்பர்.


பரிகாரம்: 

சிவ வழிபாடு.

வெள்ளி, செவ்வாய்கிழமைகளில் அம்மன் வழிபாடு செய்து விளக்கெண்ணெய் தீபமிட்டு புளி அன்னம் வைத்து வேண்டிக் கொள்வதும், செவ்வரளி பூ வைத்து வேண்டுவதும் சிறப்பான நல்ல பலனை பெறுவீர்கள்.


சிம்மம்

தைரியமும், துணிச்சலும் கொண்டு விளங்கும் சிம்ம ராசி வாசகர்களே!


2026 தைரியத்தையும் சமூக மதிப்பையும் அதிகரிக்கும். வெளிநாட்டு வாய்ப்புகள் கிடைக்கும். திடீர் பண வரவு உண்டு. சகோதரர் ஆதரவு கிடைக்கும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. 


எதை பற்றியும் கவலைபடாமல் செயல்படும் உங்களின் மன வலிமை உங்களை ஊக்கபடுத்தும். ராசிக்கு ஐந்து, எட்டாமிட அதிபதி குரு விரையத்தில் வந்து அமரும் போது எதிர்பாராத திடீர் அதிர்ஷ்ட பலன்களைப் பெறுவீர்கள். அதிர்ஷ்ட பலன்களை பெற சற்று சிரமம் இருந்தாலும் கிடைக்கப் பெறுவீர்கள். அதேபோல முதல் சுற்றில் சனி ஆறு மற்றும் சனி எட்டில் அமர்வது எந்த கெடுபலன்களையும் தருவது இல்லை. எதிரிகளின் பலம் அதிகரித்தாலும் உங்களின் பலம் அதனை எதிர்கொள்ளும் மனதைரியத்தை தரும். பிற்பகுதி இந்த ஆண்டு இல்லை என்பதால் சனி இந்த ஆண்டு உங்களுக்கு நற்பலனைகளையே தருவார்.


குரு ஆரம்பத்தில் கெடுபலன்களை தந்து எதிர்பாராத செலவுகளையும் தங்க நகைகளை அடவு வைப்பதும் தங்க நகைகள் தங்காமல் போகும். நவம்பரில் கேது குருவுடன் இணையும் போது நல்ல அதிர்ஷ்ட பலன்களை பெறுவீர்கள். எடுத்த காரியம் வெற்றியை தரும். பொருளாதார வளர்ச்சி மிகவும் சிறப்பாக அமையும். உங்களின் ராசிநாதன் சூரியன், சனி நட்சத்திரங்களில் பயணம் செய்யும் போது சற்று சவால்களை சந்திக்க வேண்டி வரும். இனி பொதுவான அரசியல் பணிகளில் உங்களின் வளர்ச்சி மேன்மை பெற்று தரும். எதிலும் கவனமாக இருப்பது நல்லது.


அதிர்ஷ்ட நிறங்கள்:  

சிவப்பு, ஓரஞ்சு, வெண்மை.


அதிர்ஷ்ட திசைகள்: 

கிழக்கு, வடகிழக்கு, மேற்கு.


அதிர்ஷ்ட எண்கள்:

1, 6, 9.


அதிர்ஷ்ட மாதம்:

ஜனவரி, ஜுன், செப்டம்பர், நவம்பர்.


பரிகாரங்கள்:

ஞாயிறுகிழமைகளில் ஆதித்ய ஹ்ருதயம் சொல்லி சூரியனுக்கு விளக்கு போட்டு வருவதும். அடிக்கடி விநாயகர் வழிபாடு செய்வதும் உங்களின் வளர்ச்சி சிறப்பாக அமையும். 


கன்னி


துணிச்சலும், வைராக்கியமும் கொண்டு விளங்கும் கன்னி ராசி வாசகர்களே!


இந்த ஆண்டு உங்களின் ராசிக்கு ராசிநாதன் புதன் சுகஸ்தானத்தில் அமர்வதும் குரு புதன் பரிவர்த்தனை யோகம் பெறுவதும் மூன்று பெயர்ச்சிகளில் மார்ச் மாதம் சனி ராசியை பார்கிறார். அடுத்து மே மாதம் குரு லாபஸ்தானத்தில் அமர்கிறார். நவம்பர் மாத்தில் ராகு / கேது பெயர்ச்சி பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் ராகுவும், லாபஸ்தானத்தில் கேதுவும் குருவுடன் இணைவு பெற்று வளம் பல தந்து வாழ்வில் உயர வழிவகுத்து தருவார்.


இதுவரை உங்களுக்கு ஆறாமிடத்தில் சனி அமர்ந்து கடன் எதிரிகளிடமிருந்து மீட்டு தர வழிவகுத்த சனி, கண்டக சனியாக அமர்வது உங்களின் கூட்டுத் தொழில் மிக சிறப்பாக அமையும், வெளிநாட்டு தொழில் வாய்ப்புகளும் அமையும். மிகவும் சிறப்பான வளர்ச்சியை பெற்று தருவார். கணவன் மனைவி உறவு சில நேரம் பிரச்சனைகளை தரும். ஓன்லைன் வர்த்தகம் சிறப்பாக அமையும். ஆயுள் காப்பீடு தொகை வந்து உங்களுக்கு பொருளாதார வளத்தை பெற்று தரும். எதிர் காலத்திற்கு தகுந்த திட்டங்களை உருவாக்கிக் கொள்வீர்கள்.


குரு மே மாதம் உங்களுக்கு லாபஸ்தானத்தில் உச்சம் பெற்று அமர்வது நீங்கள் செய்யும் தொழிலில் நன்மையை தரும். கண்டக சனியை குரு பார்ப்பதால் சனியின் தாக்கம் அதிகமில்லாமல் பார்த்து கொள்வார். நவம்பரில் கேது குருவுடன் இணையும் போது எதிர்பாராத அதிர்ஷ்ட பலன் தேடி வரும். எதையும் எதிர்பாராமல் நீங்கள் உங்களின் கடமையை செய்வீர்கள். ஆன்மீக பணிகளில் தொடர்ந்து செயல்படுவீர்கள்.


அதிர்ஷ்ட நிறங்கள்:  

பச்சை, நீலம், மஞ்சள்.


அதிர்ஷ்ட திசைகள்: 

தெற்கு, தென் மேற்கு, வடக்கு.


அதிர்ஷ்ட எண்கள்:

5, 6, 3.


அதிர்ஷ்ட மாதம்:

மார்ச், மே, ஜுலை, ஓகஸ்ட்.


பரிகாரங்கள்:

சனிக்கிழமைகளில் பைரவருக்கு மூன்று நல்லெண்ணெய் தீபமிட்டு எள் கலந்த அன்னம் செய்து வைத்து வேண்டிக் கொள்ள சகல காரியமும் அனுகூலமாகும். வெற்றியை தரும்.


துலாம்


தனி திறமையுடன் எப்பொழுதும் செயல்படும் துலாம் ராசி வாசகர்களே!


இந்த ஆண்டு உங்களின் ராசிக்கு ஆரம்பத்தில் பாக்கியஸ்தானத்தில் குரு அமர்வதும் ராசிநாதன் குரு வீட்டில் அமர்வதும் சனி பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் அமர்வதும் உங்களின் வாழ்க்கை சூழ்நிலைகளை வளப்படுத்தி தருவார்கள். மார்ச் மாதத்திலிருந்து சனி ஆறாமிடத்தில் அமர்வதும். குரு தொழில் ஸ்தானத்தில் உச்சம் பெறுவது அமைகிறது. நவம்பரில் கேது குருவும் இணைந்து யோக பலன்களை தருவார்.


பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சனி வரும் 06.03.2026 முதல் சத்ரு ஸ்தானத்தில் சரியான வழியை தெரிவு செய்யவும். கடன் பிரச்சனைகளிலிருந்து விடுபடவும் உதவிகளை செய்வார். எதிரிகளின் சூழ்ச்சியை உணர செய்து அதிலிருந்து தப்பிக்க உதவுவார். இனிவரும் குரு பெயர்ச்சி 26.05.2026 முதல் குரு தொழில் ஸ்தானத்தில் உச்சம் பெற்று உங்களின் தொழிலில் முன்னேற்றம் பெற செய்வார். தனித்த குரு அவதியை தருவார் என்பதால் சிறிது காலம் சில கஷ்டங்களை பட்டாலும் பிற்கால சூழ்நிலை மாறும். 


ராகு சுகஸ்தானத்தில் அமர்வது தாயார் உடல் நலனில் காரணம் செலுத்த வேண்டி வரும். நவம்பர் மாத பெயர்ச்சிக்கு பின்பு கவனமுடன் இருப்பது நல்லது. கேது குருவுடன் இணையும் போது எதிர்பாராத அதிர்ஷ்டங்கள் தேடி வரும். நினைத்தபடி எல்லாம் சிறப்பாக அமையும். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவீர்கள். காலத்திற்கு தகுந்த தொழிலில் முன்னேற்றங்கள் அடைவீர்கள். முதலீடு இல்லாத தொழிலில் சிறப்பான வளர்ச்சியை பெறுவீர்கள்.


அதிர்ஷ்ட நிறங்கள்:  

வெண்மை, மஞ்சள், நீலம்.


அதிர்ஷ்ட திசைகள்: 

மேற்கு, தென் கிழக்கு, வடக்கு.


அதிர்ஷ்ட எண்கள்:

6, 8, 9.


அதிர்ஷ்ட மாதம்:

ஜனவரி, ஜுன், செப்டம்பர், நவம்பர்.


பரிகாரங்கள்:

செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் அம்மன் வழிபாடு செய்து விளக்கு ஏற்றி புளி சாதம் வைத்து வேண்டிக் கொள்ள சகல காரியமும் நன்மையை தரும். வியாழக் கிழமைகளில்  குருவிற்கு ( தெட்சிணாமூர்த்தி)விளக்கு ஏற்றவும்.


விருச்சிகம்


தைரியமும், துணிச்சலும் கொண்டு விளங்கும் விருச்சிக ராசி வாசகர்களே!


இந்த ஆண்டு உங்களின் ராசிக்கு ஆரம்பத்தில் அட்டம குருவாக அமர்ந்தும், சனி சுகஸ்தானத்தில் அமர்ந்தும் இருப்பது உங்களின் பல கஷ்ட நஷ்டங்களை தந்து வந்தார்கள். இனி பஞ்சம ஸ்தானத்தில் 06.03.2026 முதல் சனி அமர்ந்து செயல்படுவதும். குரு பாக்கியஸ்தானத்தில் அமர்ந்து உச்சம் பெற்று ராசியை பார்வை இடுவதும் உங்களின் பிற்கால பலன்கள் சிறப்பாக அமையும். ராகு மூன்றில் அமர்ந்து முயற்சிகளுக்கு மிக பலன்களை தருவார்.


குரு அட்டமஸ்தானத்தில் இருந்து பொருளாதார முடக்கத்தை தந்தால் எந்த வருவாயுமின்றி கஷ்டங்களை பட்டு வந்தீர்கள். 26-05-2026 முதல் குரு பாக்கியஸ்தானத்தில் அமர்வதால் உங்களின் நீண்ட நாள் கோரிக்கை முடிவுக்கு வரும். யோகாதிபதி சந்திரன் வீட்டில் உச்சம் பெறுவதால் உங்களின் அனைத்து வேண்டுதலும் நிறைவேறும். தொழில் ஸ்தானத்தில் அமர்ந்த கேது. குருவுடன் இணையும் போது இன்னும் சிறப்பான நற்பலன்கள் அடைவீர்கள்.


சனி அர்த்தாஷ்டம சனியாக அமர்ந்து பல துன்பங்களை அடைந்து வந்தீர்கள். 06.03.2026 முதல் சனி பஞ்சம ஸ்தானத்தில் அமர்ந்து உங்களின் முயற்சிகளுக்கு நல்ல பலனை பெற்று தரும். கொடுத்த இடத்தில் உங்களுக்கு பணம் திரும்ப கிடைக்கும். எதை நினைத்து செயல்படுகின்றீர்களோ அதையே விரைவில் செயல்பட துவங்குவீர்கள். யாரையும் துணைக்கு அழைக்காமல் செயல்படுவீர்கள். அரசியலிலும் பொது வாழ்விலும் உங்களின் செயல்பாடுகளின் மூலம் வளர்ச்சியை எட்டுவீர்கள். குடும்பத்தில் சுபகாரியம் நடக்கும். திருமணம் விரைவில் கைகூடும். பொருளாதார வளர்ச்சி மேம்படும்.


அதிர்ஷ்ட நிறங்கள்:  

ஓரஞ்சு, மஞ்சள், வெண்மை.


அதிர்ஷ்ட திசைகள்: 

வடக்கு, வடமேற்கு, தெற்கு.


அதிர்ஷ்ட எண்கள்:

9, 3, 2.


அதிர்ஷ்ட மாதம்:

பெப்ரவரி, மே, ஜுலை, நவம்பர்.


பரிகாரங்கள்:

செவ்வாய் கிழமைகளில் சுப்ரமணியரையும், நரசிம்மரையும் வணங்கி நெய் தீபமேற்றி வேண்டிக் கொள்ள அனைத்து காரியமும் சிறப்பாக அமையும்.


தனுசு


தனக்கென்று ஒரு பாதையை உருவாக்கிக்கொள்ளும் தனுசு ராசி வாசகர்களே!


இந்த ஆண்டு உங்களின் ராசிக்கு ஆரம்பத்தில் உங்களின் ராசிநாதன் குரு ராசியை பார்வை இடுவதும், மூன்றாமிடத்தில் சனி இருந்து மனவலிமையை தருவதும் உங்களுக்கு மிகவும் சாதகமான சூழ்நிலையும் அமையும். 06.03.2026 சனி சுகஸ்தானத்திற்கு பெயர்ச்சி ஆவதால் தாயார் உடல் நலனில் கவனம் செலுத்த வேண்டி வரும். 26.05.2026 முதல் குரு அட்டம ஸ்தானத்தில் அமர்வது பொருளாதார நிலையில் சற்று கவனம் செலுத்த வேண்டி வரும்.


மூன்றாமிடத்திற்குரிய சனி ஆட்சி பெற்று அமர்ந்தாலும் இதுவரை அதனால் எந்த பலனும் கிடைக்க பெறவில்லை என்ற நிலை இருந்து வந்தது. மேலும் இனி 06.03.2026 முதல் சுகஸ்தானத்தில் சனி அமர்வது ஒரு புறம் வாகன வசதிகளையும், வீடு கட்டும் வாய்ப்பும் பெற்று தருவார். எனினும் தாயார் உடல் நலனில் கவனம் செலுத்துபடி அமையும். உங்களின் உடல் நலனிலும் அடிக்கடி கவனம் செலுத்த வேண்டி வரும். எதை செய்தாலும் அதில் சிக்கல் வந்து மறையும்.


குரு பார்வை இருக்கும் வரையில் உங்களுக்கு எதையும் சமாளிக்கும் வாய்ப்பு அமையும். அட்டம ஸ்தானத்தில் உச்சம் பெற்று குரு அமர தொழிலும், கொடுக்கல் வாங்கலிலும் கவனமுடன் இருப்பது நல்லது. கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி வளம் பெறுவது நல்லது. புதிய முயற்சிகளையோ, தொழில் துவங்குவதையோ தவிர்ப்பது நல்லது.  தங்க நகை அடவுக்கு போகும் நிலை உண்டாகும். சேமிப்பு கரையும்.


19.11.2026 முதல் ராகு / கேது பெயர்ச்சி ஆவது தனஸ்தானத்தில் ராகு அமர்வதும் குருவுடன் கேது இணைவு பெறுவதும் உங்களின் பொருளாதார நிலை தேவைகளை உணர்த்தும் போது கஷ்டமும், நஷ்டமும் சேர்ந்த உண்டாகும். எதிலும் கவனமுடன் இருப்பது நல்லது.


அதிர்ஷ்ட நிறங்கள்:  

மஞ்சள், ஓரஞ்சு, வெண்மை.


அதிர்ஷ்ட திசைகள்: 

கிழக்கு, வடகிழக்கு, மேற்கு.


அதிர்ஷ்ட எண்கள்:

3, 6, 9.


அதிர்ஷ்ட மாதம்:

ஜனவரி, ஏப்ரல், மே, ஜுலை.


பரிகாரங்கள்:

சனிக்கிழமைகளில் பைரவருக்கு மூன்று வைத்து நல்லெண்ணெய் தீபம் ஏற்றி சிவப்பு அரளி பூ சாற்றி, வேண்டிக் கொள்ள உங்களின் அனைத்து விடயத்திலும் தடை நீங்கி நற்பலன்களை பெறுவீர்கள்.


மகரம்


மன உறுதியும், பிறருக்கு உதவி செய்யும் குணமும் கொண்ட மகர ராசி வாசகர்களே!


இந்த ஆண்டு உங்களின் ராசிக்கு ஏழரை சனி முடிவுக்கு வருவதும், ஆறாமிடத்து குரு ஆரம்பத்தில் சில சிக்கல்களை தந்தாலும், மே முதல் குரு பார்வை ராசிக்கு வருவதும் உங்களின் வளர்ச்சிக்கு இனி உறுதுணையாக அமையும். எதை செய்தாலும் அதில் உங்கள் பக்கம் நியாயம் இருக்கும் படியான சூழ்நிலையை உருவாக்கிக் கொள்வீர்கள். திட்டமிட்ட காரியங்களை சரியாக செய்து முடிப்பீர்கள்.


ராசிநாதன் சனி வரும் 06.03.2026 முதல் மீனத்திற்கு செல்வது உங்களின் முயற்சிகளுக்கு பக்கபலமாக அமையும். எடுத்த காரியம் துலங்கும். சொன்னபடி சில நேரம் நடக்க வேண்டிய உதவிகள் கிடைக்கும். ராகு ஆண்டு இறுதியில் ராசியில் வந்து அமர்வதும் குருவுடன் கேது அமர்வதும் உங்களின் தொழில் வளர்ச்சிக்கு உறுதுணையாக அமையும். தனஸ்தானத்தில் ஆரம்பத்தில் இருந்து வந்த ராகுவால் பொருளாதார தடையும், திருமண தடையும் உண்டாகும். குரு பார்வை பெற்றவுடன் திருமண தடை நீங்கும்.


வரும் 26.05.2026 முதல் குரு கடகத்தில் உச்சம் பெற்று அமர்வதும் ராசியை பார்வை இடுவதும் உங்களுக்கு சாதகமான சூழ்நிலை உண்டாகும். இனி உங்களின் கொள்கைகளை தீர்மானித்து அதன்படி நடந்தால் எல்லாம் நன்மையாக அமையும். குரு பார்க்க கோடி நன்மை என்பது போல உங்களுக்கு குரு பார்வையால் எடுத்த காரியம் வெற்றியை தரும். யாரையும் நம்பிகொண்டிருக்காமல் உங்களின் வளர்ச்சி பாதையை உருவாக்கி கொள்வீர்கள். பொது விடயங்களில் உங்களின் செயல்பாடுகள் சிறப்பாக அமையும். கலைதுறையினருக்கு நல்ல வளர்ச்சி உண்டாகும். தொழிலாளர்களுக்கு சிறப்பு சலுகைகள் கிடைக்கும். சரியான வழிபாட்டை தெரிவு செய்து நல்ல பலனை அடைவீர்கள்.


அதிர்ஷ்ட நிறங்கள்:  

மஞ்சள், நீலம், வெண்மை.


அதிர்ஷ்ட திசைகள்: 

தெற்கு, தென் கிழக்கு, வடக்கு.


அதிர்ஷ்ட எண்கள்:

8, 3, 6.


அதிர்ஷ்ட மாதம்:

மார்ச், ஜுன், செப்டம்பர், நவம்பர்.


பரிகாரங்கள்:

ஞாயிறு மாலை ராகு காலத்தில் (04.30 - 06.00) நவகிரக வழிபாடு செய்வதும். பைரவருக்கு அரளி பூ மாலையும் தயிர் அன்னம் வைத்து வேண்டிக் கொள்ள வெற்றியை முழுமையாக அடைவீர்கள்.


கும்பம்


வைராக்கியமும், மன வலிமையும் கொண்ட கும்ப ராசி வாசகர்களே!


இந்த ஆண்டு உங்களின் ராசிக்கு ராசிநாதன் ராசியில் அமர்ந்து தொழில் ஸ்தானத்தை பார்வை இடுவதும் குரு பார்வை பெறுவது ஆண்டின் துவக்கத்தில் நற்பலன்களை பெற்று தரும். ராகு உங்களின் அறிவாற்றலை பெருக்குவதுடன் ஞாபக மறதி அடிக்கடி வரச் செய்வார். எதிரிகளிடமிருந்து நீங்கள் விடுபடும் வாய்ப்பையும் பெற்று திகழ்வீர்கள்.


இந்த ஆண்டு உங்களுக்கு ஏழரை சனியின் கடைசி சுற்றான 06.03.2026 முதல்  தனஸ்தானத்தில் சனி அமர்ந்து வாழ்வில் பொருளாதாரத்தின் தன்னிறைவு  பெறும் வாய்ப்பை பெறுவீர்கள். உங்களின் தொடர் முயற்சிக்கு நல்ல பலன்கள் கிடைக்க பெறுவீர்கள். யாரையும் நம்பிக்கொண்டு இருக்கமாட்டீர்கள். சமயத்திற்கு தகுந்தபடி உங்களின் சூழ்நிலைகளை மாற்றி அமைத்துக் கொள்வீர்கள்.


குரு உங்களின் ராசியை பார்வை இடுவது செயல்திறனை அதிகரிக்க செய்யும். உறுதியான மனநிலையில் எதையும் செய்யும் வைராக்கியம் பெறுவீர்கள். 26.05.2026 முதல் குரு பெயர்ச்சியாகி ஆறாமிடத்தில் அமர்வது உங்களின் ராசிநாதன் சனியை பார்வை இடுவதும் உங்களின் வருமானத்தை பெருக்கி கொள்ள நல்ல வாய்ப்பாக அமையும் தொடர்ந்து மனதில் மறுமலர்ச்சியை உருவாக்கி மேன்மை அடைவீர்கள். 13.11.2026 முதல் ராகு / கேது பெயர்ச்சியாகி பனிரெண்டில் ராகு அமர்ந்து தொழில் ஸ்தானத்தை பார்ப்பதும் கேது ஆறாமிடத்தில் அமர்ந்து முயற்சி ஸ்தானத்தில் பார்வை இடுவதும் தொழிலிலும், வளர்ச்சி பாதையில் செல்லும் நல்ல வாய்ப்பையும் பெறுவீர்கள். எதையும் நன்கு யோசித்து செயல்படுவீர்கள். காலத்தின் சூழ்நிலைகள் அறிந்து செயல்பட்டு வருவாயை பெருக்கி கொள்வீர்கள்.


அதிர்ஷ்ட நிறங்கள்:  

நீலம், வெண்மை, மஞ்சள்.


அதிர்ஷ்ட திசைகள்: 

மேற்கு, தென் கிழக்கு, வடக்கு.


அதிர்ஷ்ட எண்கள்:

8, 6, 3.


அதிர்ஷ்ட மாதம்:

மார்ச், ஏப்ரல், ஜுலை, நவம்பர்.


பரிகாரங்கள்:

சனிக்கிழமைகளில் பைரவர் வழிபாடு செய்து நல்லெண்ணெய் தீபமிட்டு தயிர் அன்னம் வைத்து வேண்டிக் கொள்ளவும். செவ்வாய் கிழமை சுப்ரமணியரை வணங்கி நெய் தீபமிட்டு வேண்டிக் கொள்ள சகல நன்மைகள் உண்டாகும்.


மீனம்


வாழ்வில் எளிமையும், அன்பையும் கொண்டு விளங்கும் மீன ராசி வாசகர்களே!


இந்த ஆண்டு உங்களின் ராசிக்கு ராசிநாதன் குரு சுகஸ்தானத்தில் அமர்ந்து தொழில் ஸ்தானத்தை பார்வை இட்டதால் தொழில் சிறப்பாக அமைந்தது. விரைய சனி வரும் 06.03.2026 முதல் ஜென்ம சனியாக வருவது உங்களின் மனரீதியான வலிமையை பெறுவீர்கள். கடந்த கால சூழ்நிலைகள் மறந்து வாழ்வில் சுபிட்சம் பெறுவீர்கள். எதிலும் திட்டமிடல் மூலம் சிறப்பாக செயல்பட்டு வெற்றியை பெறுவீர்கள்.


இந்த ஆண்டு ஆரம்பத்தில் சனி விரயத்தில் இருந்தாலும் 06.03.2026 முதல் மீன ராசிக்கு பெயர்ச்சி ஆவது உங்களின் மனவலிமையை உறுதி செய்வார். ஆன்மீக வழிபாடுகளும், ஆன்மீக யாத்திரையும் சென்று வருவீர்கள். அதிகபடியான தான தர்மம் மூலம் உங்களின் கர்ம வினைகளை குறைத்து கொள்ளும் வாய்ப்பை பெற்று தருவார். சனி கொடுத்தால் யார் தடுப்பார்… என்பது போல நினைத்ததை நினைத்தபடி செயல்படுத்துவீர்கள். உறுதி தன்மையுடனும், முழுமையான நம்பிக்கையுடனும் செயல்படுவீர்கள்.


ஆரம்பத்தில் விரைய சனியை குரு பார்வையால் அதிலிருந்து உங்களை காப்பாற்றினார். இனி வரும் 26.05.2026 முதல் கடகத்திற்கு குரு பெயர்ச்சியாகி ராசியை பார்ப்பது உங்களின் ஜென்ம சனி மேலும் பலம் பெறும் வாய்ப்பாக அமையும். குரு பார்வை கோடி நன்மை என்பது போல உங்களுக்கு சகல விதமான நற்பலன்களும் கிடைக்க பெறுவீர்கள். உச்ச வீட்டில் குரு அமர்ந்து ராசியை பார்ப்பதால் எல்லாம் சிறப்பாக அமையும்.


வரும் 13.11.2026 முதல் ராகு லாபஸ்தானத்திலும் கேது பஞ்சம ஸ்தானத்தில் குருவோடு இணைவும் பெறுவதும் மிக சிறப்பான பலன்களை பெறுவீர்கள். ஆன்மீக சேவையை தொடர்ந்து செய்து மேலும் நன்மையை பெறுவீர்கள் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி முன்னேற்றம் காண்பீர்கள்.


அதிர்ஷ்ட நிறங்கள்:  

மஞ்சள், ஓரஞ்சு, வெண்மை.


அதிர்ஷ்ட திசைகள்: 

வடக்கு, வட கிழக்கு, தெற்கு,


அதிர்ஷ்ட எண்கள்:

3, 1, 7.


அதிர்ஷ்ட மாதம்:

ஜனவரி, மார்ச், ஓகஸ்ட், நவம்பர்.


பரிகாரங்கள்:

ஞாயிறு மாலை ராகு காலத்தில் தொடர்ந்து பைரவருக்கு நல்லெண்ணெய் தீபமிட்டு நவகிரக வழிபாடு செய்து புளி அன்னம் தானம் செய்து வர சகல காரியமும் அனுகூலமாகவும், வெற்றியும் தரும்.




No comments:

Post a Comment

Post Top Ad