ஆசிரியர்கள் மகிழ்ச்சியே திராவிடமாடல் அரசின் மகிழ்ச்சி - பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திரு அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களின் பதிவு
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்களின் அறிவுறுத்தலின்படி ஆசிரியர்களின் நலன்காக்கும் அரசாகச் செயல்படும் #திராவிடமாடல் அரசின் வரலாற்றுச் சிறப்புவாய்ந்த அரசாணையாக,
பல லட்சக்கணக்கான ஆசிரியர்களுக்கும், ஆசிரியர் கனவுகளோடு காத்திருக்கும் தேர்வர்களுக்கும் பலனளிக்கும் வகையில் இனிவரும் ஆசிரியர் தகுதித் தேர்வுகளில் தகுதி மதிப்பெண்களை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பிரிவினருக்கு 55 சதவீதத்திலிருந்து 40 சதவீதமாகவும்,
பிற்படுத்தப்பட்டோர் - மிகவும் பிற்படுத்தப்பட்டோர் ஆகிய பிரிவினருக்கு 55 சதவீதத்திலிருந்து, 50 சதவீதமாகவும் மாற்றி அரசாணை வெளியிடப்படுகிறது.
இதன் மூலம் ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு நம் முதலமைச்சர் என்றுமே உறுதுணையாக இருப்பார் என்பதையும், இது சமூகநீதி காக்கும் அரசு என்பதையும் மீண்டும் ஒருமுறை நிரூபித்து காட்டியிருக்கின்றோம்.
ஆசிரியர்கள் மகிழ்ச்சியே திராவிடமாடல் அரசின் மகிழ்ச்சி!


No comments:
Post a Comment