அரசுப் பள்ளிகளில் 6 முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் மொழி மற்றும் கணிதத் திறன்களை மேம்படுத்தும் வகையில், கடந்த ஜூலை மாதம் முதல் நடைமுறைப்படுத்தப்பட்ட திறன் இயக்கப் பயிற்சி, தற்போது முழு ஆண்டுத் தேர்வு வரை நீட்டிக்கப்படுவதாக பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.
இது தொடர்பாக, பள்ளிக் கல்வி மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநரகங்கள் இணைந்து அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளன.
முக்கிய அம்சங்கள்:
- பயிற்சியின் நோக்கம்: நடப்பு கல்வியாண்டின் (2025-26) மானியக் கோரிக்கை அறிவிப்பின்படி, 6 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களின் மொழி மற்றும் கணிதத் திறனை மேம்படுத்துவதே இலக்கு.
- நீட்டிப்புக் காரணம்: ஆசிரியர்களின் தொடர் முயற்சியால் 68% மாணவர்கள் அடிப்படை கற்றல் விளைவுகளில் தேர்ச்சி பெற்றுள்ளனர். மீதமுள்ள மாணவர்களுக்குத் தொடர்ந்து பயிற்சி அளிக்கவும், தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்கவும் கூடுதல் கால அவகாசம் தேவைப்படுவதால் இந்த நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
மதிப்பீட்டு முறை:
- திறன் இயக்கப் பயிற்சியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து மாணவர்களும் மாதாந்திர திறன் மதிப்பீட்டில் பங்கேற்க வேண்டும்.
- முழு ஆண்டுத் தேர்வின்போது, தமிழ், ஆங்கிலம், மற்றும் கணிதப் பாடங்களுக்குத் திறன் பயிற்சிப் புத்தகத்தை அடிப்படையாகக் கொண்ட தனி வினாத்தாள் வழங்கப்படும்.
- அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களுக்கான கேள்விகள், முந்தைய வகுப்புகளில் இருந்து எளிமையானதாக இருக்கும்.
- அடுத்த கல்வி ஆண்டுக்கான ஏற்பாடு: திறன் பயிற்சி பெற்ற 6 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்கள், அடுத்த கல்வியாண்டில் வகுப்பு நிலை பாடங்களுக்குத் தயாராகும் வகையில், முதல் மாதம் பிரிட்ஜ் கோர்ஸ் (Bridge Course) நடத்தப்படும்.
தலைமையாசிரியர்கள் அனைவரும் இந்த வழிகாட்டுதல்களைப் பின்பற்றிச் செயல்பட வேண்டும் என சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment