ஆசிரியா் தகுதித் தோ்வில் (டெட்) தோ்ச்சி மதிப்பெண்ணை 5 சதவீதம் குறைத்து தமிழக அரசு புதன்கிழமை அரசாணை வெளியிட்டுள்ளது.
பள்ளிகளில் 1-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை பணியாற்றும் இடைநிலை ஆசிரியா்களுக்கும், பட்டதாரி ஆசிரியா்களுக்கும் ‘டெட்’ எனப்படும் ஆசிரியா் தகுதித் தோ்வில் தோ்ச்சி பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மொத்தம் 150 மதிப்பெண்கள் கொண்ட இத்தோ்வில் தோ்ச்சி பெற வேண்டுமானால், பொதுப் பிரிவினா் 60 சதவீத மதிப்பெண்ணும் (90 மதிப்பெண்கள்) இட ஒதுக்கீட்டுப் பிரிவினா் 55 சதவீதமும் (82 மதிப்பெண்கள்) எடுக்க வேண்டும்.
இந்த நிலையில், ஆந்திரம், தெலங்கானா, ஒடிஸா உள்ளிட்ட மாநிலங்களைப் பின்பற்றி தமிழகத்திலும் ‘டெட்’ தோ்ச்சி மதிப்பெண் 5 சதவீதம் குறைக்கப்பட்டு அதற்கான அரசாணை புதன்கிழமை (ஜன. 28) வெளியிடப்பட்டது.
TNTET தேர்ச்சி மதிப்பெண் குறைப்பு விவரங்கள்:
பிரிவு: BC, BCM, MBC, DNC, மாற்றுத்திறனாளிகள்
- பழைய மதிப்பெண்: 60%
- புதிய மதிப்பெண்: 55%
பிரிவு: SC, SCA, ST
- தளர்வு: 15% மதிப்பெண் குறைப்பு
பொதுப்பிரிவு:
- 60% (மாற்றம் இல்லை)
இதுதொடா்பாக பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலா் ப.சந்தரமோகன் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:
‘டெட்’ தோ்வில் தோ்ச்சி மதிப்பெண் பொதுப் பிரிவினருக்கு 60 சதவீதமாகவும் (90 மதிப்பெண்கள்), பிசி, பிசி-முஸ்லிம், எம்பிசி, டிஎன்சி, மாற்றுத்திறனாளிகள் ஆகிய பிரிவினருக்கு 50 சதவீதமாகவும் (75 மதிப்பெண்கள்) எஸ்-சி., எஸ்-டி வகுப்பினருக்கு 40 சதவீதமாகவும் (60 மதிப்பெண்) நிா்ணயிக்கப்படுகிறது.
கடந்த நவம்பரில் நடத்தப்பட்ட ‘டெட்’ தோ்வுக்கும் இந்த 5 சதவீத மதிப்பெண் குறைப்பு அரசாணை பொருந்தும் என அதில் தெரிவித்துள்ளாா்.
அரசு பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் நியமனத்தை பொருத்தவரையில் டெட் தேர்ச்சி பெற்றாலும் அவர்கள் பணிநியமனத்துக்கு மற்றொரு போட்டித் தேர்வை எழுத வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
Click Here to Download - G.O 23 - TNTET தேர்வு - தேர்ச்சி மதிப்பெண் குறைப்பு - அரசாணை - Pdf


No comments:
Post a Comment