தமிழ்நாடு ஊரகப் பகுதிகளில் (சென்னை மாவட்டம் தவிர்த்து) ஒன்பதாம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு தமிழ்நாடு ஊரகத் திறனாய்வுத் தேர்வு அரசு தேர்வு இயக்ககத்தால் 06.12.2025 (சனிக்கிழமை) அன்று நடைபெற்றது.
www.dge.tn.gov.in இத்தேர்வினை மொத்தம் 104,145 மாணாக்கர்கள் எழுதியுள்ளனர். தற்போது தேர்வெழுதிய மாணக்கர்களின் மதிப்பெண் விவரங்கள் அரசுத் தேர்வுகள் இணையதளத்தில் 20.01.2026 அன்று வெளியிடப்பட்டுள்ளது.
மேலும், மாணவர் விவரங்களாகிய பெயரில் உள்ள எழுத்துக்கள். பிறந்த தேதி, பாலினம் ஆகியவற்றில் திருத்தங்கள் ஏதேனும் இருப்பின் உரிய ஆதாரங்களுடன் தேர்வு கூட நுழைவுச் சீட்டினை இணைத்து dgedsection@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 27.012026 க்குள் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

No comments:
Post a Comment