இடைநிலை ஆசிரியர்களின் ஊதியப் பிரச்னை தொடர்பான முடிவு மூவர் குழு அறிக்கையின் அடிப்படையில் எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில், போராட்டத்தில் உள்ள ஆசிரியர்கள் பள்ளிகளுக்கு திரும்பி கற்பித்தல் பணிகளில் ஈடுபட வேண்டும் என அமைச்சர் அன்பில் மகேஷ் கேட்டுக்கொண்டு உள்ளார்.
தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் அரசு பள்ளிகளில் சுமார் 35,000க்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் சுமார் 20,000 ஆசிரியர்கள் மே 31ஆம் தேதி 2009ஆம் ஆண்டுக்குப் பிறகு பணிகளில் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது.
இடைநிலை ஆசிரியர்களின் சம்பளம்
இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.8,370 அடிப்படை சம்பளம் வழங்கப்படும் நிலையில், அதற்குப் பின்னர், அதாவது 2009 ஆம் ஆண்டு ஜூன் 1 ஆம் தேதி முதல் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.5,200 அடிப்படை சம்பளம் மட்டுமே வழங்கப்படுகிறது. இதனால், ஒரே பதவியில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு இடையே சம்பளத்தில் பெரும் வித்தியாசம் காணப்படுகிறது.
இதனால், 2009 ஆம் ஆண்டுக்குப் பிறகு பணியில் சேர்ந்த சுமார் 20,000 இடைநிலை ஆசிரியர்கள், அவர்க்களுக்கு முன்னால் பணியில் சேர்ந்த ஆசிரியர்களுடன் ஒப்பிடுகையில் ஊதியம் குறைவாக வாங்கி வருகின்றனர். சம வேலைக்கு சம ஊதியம் வழங்க கோரி இடைநிலை ஆசிரியர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

No comments:
Post a Comment