சம வேலைக்கு சம ஊதியம் கேட்டு இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் கடந்த மாதம் 26ம் தேதி முதல் கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது
25வது நாளாக நேற்றும் ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர் ஏழாவது சம்பளக் குழுவில் பாதிக்கப்பட்ட 12 இன்கிரிமெண்டில் ஆறு இன்கிரிமென்ட் வழங்குவது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டால் போராட்டத்தை கைவிடுவதாக போராடிவரும் ஆசிரியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்
இந்நிலையில் இரண்டு இன்கிரிமென்ட் அல்லது அதிகபட்சம் ரூபாய் 2000 வரை ஸ்பெஷல் பேர் என்ற வகையில் சம்பளத்தில் உயர்வு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது
இது தொடர்பாக அறிவிப்பை நடப்பு சட்டசபை கூட்டத் தொடரில் முதலமைச்சர் அவர்கள் 110 விதியின் கீழ் அறிவிக்க வாய்ப்புள்ளதாக கோட்டை வட்டாரத்தில் பேசப்படுகிறது
இதற்கிடையே பள்ளிக்கல்வித்துறை வளர்ச்சி திட்டங்கள் அறிவிப்புகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் சென்னை எழும்பூர் கன்னிமரா நூலகத்தில் நேற்று மாலை நடந்தது


No comments:
Post a Comment