ஆங்கில புத்தாண்டு ராசி பலன் 2024 - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Monday, January 1, 2024

ஆங்கில புத்தாண்டு ராசி பலன் 2024

 




இந்த ஆங்கிலப் புத்தாண்டான 2024 கன்னி லக்னத்தில் பிறக்கிறது. அதோடு வருடம் பிறக்கும் சமயத்தில் உள்ள கிரஹ நிலைகளையும், நிகழ இருக்கும் கிரஹ மாற்றங்களையும் கணக்கிடும்போது இந்த ஆண்டு பொதுவில் பல நல்ல மாற்றங்கள் நிகழக்கூடிய ஆண்டாக இருக்கும். 


அதேசமயம், உலக அளவில் இயற்கை சீற்றங்களால் பாதிப்புகள், பெரிய தலைவர்களின் உடல்நலத்தில் கவனம், இந்திய அரசியலில் குறிப்பிடத்தக்க மாற்றம், அறிவியலில் புதிய கண்டுபிடிப்புகள், மருத்துவத்தில் இந்தியாவின் மதிப்பு கூடுதல், பிரபலங்களின் உடல்நலத்தில் பாதிப்புகள், வலைதள வளர்ச்சி என்று அனைத்திலும் ஏற்றம், மாற்றம், எச்சரிக்கை இருக்கும். பொதுவாக இந்த ஆண்டு முழுக்க எல்லோருமே பிள்ளையாரையும், பெரிய பெரிய மகான்களையும் கும்பிடுவது நல்லது. இனி ஒவ்வொரு ராசிக்கும் என்ன பலன்கள் என்று பார்ப்போம்.


மேஷம் : வருடம் தொடங்கும் சமயத்தில் உங்கள் ராசியான மேஷத்தில் குரு, ஆறாமிடத்தில் கேது, எட்டாம் இடத்தில் புதன் சுக்ரன் சேர்க்கை, ஒன்பதாம் இடத்தில் சூரியன் செவ்வாய், பதினோராம் இடத்தில் சனி, பன்னிரண்டாம் இடத்தில் ராகு என்ற கோசார அமைப்பு காணப்படுகிறது. இதன் அடிப்படையிலும் அதன் பின் இந்த ஆண்டில் ஏற்படக்கூடிய கிரஹ மாற்றங்களின் அடிப்படையிலும் இது உங்களுக்கு ஏற்றமான ஆண்டாக இருக்கும். 


அலுவலகத்தில் இதுவரை அனுபவித்த சங்கடங்கள் நீங்கி, சட்டென்று பலவிதத்திலும் நன்மைகள் ஏற்படத் தொடங்கும். யாரோ செய்த தவறுக்கு நீங்கள் வீண்பழி ஏற்ற நிலை மாறும். மேலதிகாரிகளால் உங்கள் திறமைகள் உணரப்படும். இழந்த பெருமைகள் திரும்பக் கிடைக்கும். இதுவரை வேலை தேடுவதே வேலையாக இருந்தவர்களுக்கு இந்த ஆண்டு நிச்சயம் வேலைவாய்ப்பு கிட்டும். 


தடைப்பட்ட ஊதிய உயர்வு, இடமாற்றம், பதவி உயர்வுகள் கைகூடும். மனையில் மகிழ்ச்சி மலரும். வாழ்க்கைத் துணையுடன் அன்யோன்யம் அதிகரிக்கும். சுபகாரியங்கள் சுமுகமாகக் கைகூடும். வீடு, மனை வாங்கும் யோகம் உண்டு. விலை உயர்ந்த ஆபரணங்களை இரவல் தரவோ, பெறவோ வேண்டாம்.வாரிசுகளிடம் வீண் கடுமை வேண்டாம். செய்யும் தொழிலில் சீரான வளர்ச்சி ஏற்படும். 


புதிய முயற்சிகளில் அவசரம் கூடாது. வங்கிக் கடன்களை முறையாக திருப்பிச் செலுத்துவது முக்கியம். அயல்நாட்டு வர்த்தகத்தில் சட்டத்தை முழுமையாகக் கடைபிடியுங்கள். அரசியலில் இருப்பவர்களுக்கு திடீர் பதவி, பெருமைகள் கிடைக்கும். அதேசமயம் வார்த்தைகளில் நிதானம் முக்கியம். யாருக்காகவும் ஜாமீன் தரவேண்டாம்.அரசாங்கப் பணிகளில் இருப்பவர்கள் நிதானத்தைக் கடைபிடியுங்கள். 


ஏற்றம் வரும் சமயத்தில் கர்வத்தை சுமப்பதைத் தவிருங்கள். சினிமா, நாடகம், கலைத்துறையில் இருப்பவர்களுக்கு வாய்ப்புகள் அடுத்தடுத்து வரத்தொடங்கும். இந்த சமயத்தில் சஞ்சலம் சபலம் தவிர்ப்பது முக்கியம். படிப்பில் முழு கவனம் செலுத்துவது மாணவர்களுக்கு முக்கியம். அவசரமும் அலட்சியமும் வேண்டவே வேண்டாம். 


ஆரோக்யத்தில் நரம்பு, கண்கள், அடிவயிறு பிரச்னைகள் வரலாம். வாகனத்தை ஓட்டும்போது நிதானம் முக்கியம். எப்போதும் விநாயகரைக் கும்பிடுவது வருடம் முழுக்க நன்மைகளைத் தரும்.


ரிஷபம்: ஆண்டு ஆரம்பமாகும் நாளில் உங்கள் ராசிக்குப் பன்னிரண்டாம் இடத்தில் குரு, ஐந்தாமிடத்தில கேது, ஏழாம் இடத்தில் புதன் சுக்ரன் சேர்க்கை, எட்டாம் இடத்தில் சூரியன் செவ்வாய், பத்தாம் இடத்தில் சனி, பதினோராம் இடத்தில் ராகு என்ற கிரஹ நிலை அமைப்பு காணப்படுகிறது. இந்த அமைப்பின் அடிப்படையிலும், இந்த வருடத்தில் ஏற்படக்கூடிய கோசார மாற்றங்களின் அடிப்படையிலும் இது உங்கள் முயற்சிகளுக்குப் பலன் தரும் வருடமாக இருக்கும். 


அலுவலகத்தில் உங்கள் உழைப்புக்கு ஏற்ற உயர்வுகள் உருவாகும். எந்தச் செயலையும் திட்டமிட்டு நேரம்தவறாமல் செய்வது நல்லது. பொறுப்புகளைப் புலம்ப வேண்டாம். இடமாற்றம், பதவி மாற்றம் வந்தால் தவிர்க்காமல் ஏற்றுக்கொள்ளுங்கள். மேலதிகாரிகளிடம் வாக்குவாதம் வேண்டாம்.புறம் பேசுவோரிடம் எச்சரிக்கையாக இருங்கள். 


குடும்பத்தில் இனிய சூழல் உருவாகும். உறவுகளிடையே இருந்த மனக்கசப்புகள் நீங்கும். சுபகாரியத்தடைகள் தெய்வ வழிபாட்டால் நீங்கும். வீடு, வாகனச் சேர்க்கையில் நிதானம் அவசியம். தம்பதியர் உடல்நலத்தில் பரஸ்பரம் அக்கறை அவசியம். பூர்வீக சொத்து சார்ந்த வழக்குகள் சாதகமாகத் தீர்வாகும். குடும்ப ரகசியங்கள் எதையும் பொது இடத்தில் பகிரவேண்டாம். நீங்கள் செய்யும் வர்த்தகத்தில் உங்கள் உழைப்புக்கு ஏற்ப லாபம் வரத்தொடங்கும். 


முதலீடுகள் எதையும் யோசித்து செய்யுங்கள். அயல்நாட்டு வர்த்தகத்தில் ஒப்பந்தப் பத்திரங்களை பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள். அரசியல் சார்ந்தவர்களுக்கு நிதானமே நிலையான ஏற்றம் தரும். அனுபவம் மிக்கவர்கள் ஆலோசனைகளை அவசியம் கேளுங்கள். அரசாங்க உத்தியோகம் செய்பவர்களுக்கு உயரதிகாரிகளின் ஆதரவு அதிகரிக்கும். எந்த விஷயத்திலும் நிதானமும் நேர்மையும் தவறாமல் இருப்பது முக்கியம். எதிர்பாலரிடம் எல்லை வகுத்துப் பழகுங்கள். 


சினிமா, மியூசிக், நாடகம், கலைத்துறையினரின் முயற்சிகள் பலிதமாகும். வாய்ப்புகள் தேடி வரும்போது வார்த்தைகளில் நிதானம் முக்கியம். யாரையும் எடுத்தெறிந்து பேசவேண்டாம். மாணவர்கள் சோம்பல் தவிர்ப்பது அவசியம். படித்ததை ஒருமுறைக்கு இருமுறை எழுதிப் பாருங்கள். உடல்நலத்தில் ரத்த அழுத்த மாற்றம் ,டிப்ரஷன், தூக்கமின்மை வரலாம். உணவை முறைப்படுத்துங்கள். பயணத்தில் வித்தைகாட்டல் கூடாது. எப்போதும் பெருமாள் வழிபாடு, பெருமைகள் சேர்க்கும்.


  இந்த ஆங்கிலப் புத்தாண்டின் தொடக்கத்தில் உங்கள் ராசிக்குப் பதினோராம் இடத்தில் குரு, நான்காம் இடத்தில் கேது, ஆறாம் இடத்தில் புதன் சுக்ரன் சேர்க்கை, ஏழாமிடத்தில் சூரியன் செவ்வாய் சேர்க்கை, ஒன்பதாம் இடத்தில் சனி, பத்தாம் இடத்தில் ராகு என்ற கிரஹநிலை அமைப்பு காணப்படுகிறது. இந்த அமைப்பு மற்றும் இந்த வருடத்தில் ஏற்பட உள்ள கிரஹநிலை மாற்றங்களின் அடிப்படையில் இந்த ஆண்டு, உங்கள் அமைதிக்குப் பரிசாக ஆனந்தத்தைத் தரக்கூடிய வருடமாக இருக்கும். அலுவலகத்தில் உங்கள் முயற்சிகளில் முடக்கம் கூடாது. மேலதிகாரிகளுடன் வீண் தர்க்கம் வேண்டாம். 


உடன் இருப்போர் குறைகளை பெரிதுபடுத்திப் பேசுவது கூடாது. ஆண்டின் தொடக்கத்தில் பொறுமையாக இருந்தால் படிப்படியாக பதவி,பொறுப்பு உயர்வுகள் வரும். புதிய வேலைக்காக காத்திருப்போர் நேர்வழியில் முயற்சிப்பதே நல்லது. வீட்டில் விட்டுக்கொடுத்துப் போவது முக்கியம். தம்பதியர் இடையே மூன்றாம் நபர் தலையீட்டை அனுமதிக்க வேண்டாம். பெற்றோர் வார்த்தைகளுக்கு மதிப்பு கொடுங்கள். இளம்வயதினர் திடீர் முடிவுகளை எடுப்பதைவிட, குடும்பத்தினருடன் மனம்விட்டுப் பேசுவதே நல்லது. பொது இடங்களில் வீண் ஆடம்பரங்களைத் தவிருங்கள். 


அநாவசியக் கடன்கள் வாங்கவேண்டாம். செய்யும் தொழில் சீரான வளர்ச்சிபெறும். உங்கள் மீது உண்மையான அக்கறை உள்ளவர்கள் ஆலோசனைகளை அவசியம் கேளுங்கள். வெளிநாட்டு வர்த்தகத்தில் தரத்தில் கவனம் முக்கியம். 


கடன் அட்டைகளை கவனமாகப் பயன்படுத்துங்கள். அரசியலில் இருப்பவர்கள் அகலக்கால் வைப்பது கூடாது. மேலிடத்தின் அனுமதி இல்லாமல் எந்தச் செயலையும் செய்யவேண்டாம். பிறருக்காக வக்காலத்து வாங்குவதைத் தவிருங்கள். அரசுப்பணிகளில் இருப்பவர்களுக்கு ஏற்றத்தின் அளவுகோல் அதிகரிக்கும். புறம்பேசுவது, கேட்பதைத் தவிருங்கள். யாருடைய தனிப்பட்ட விஷயத்திலும் நீங்கள் தலையிட வேண்டாம். கலை படைப்புத் துறையினருக்கு முயற்சிகள் பலிதமாகும். 


பலகாலக் கனவுகள் நனவாகும். மாணவர்களுக்கு சீரான உயர்வுகள் கிட்டும். பெற்றோர், ஆசிரியர் ஆலோசனைகளை அவசியம் கேளுங்கள். ஆரோக்யத்தில் அக்கறை தேவைப்படும் ஆண்டு. உடற்பயிற்சி, மனப்பயிற்சி செய்வோர்க்கு உடல்நலம் சீராக இருக்கும். காது, மூக்கு, தொண்டை, அஜீரணப் பிரச்னைகள் வரலாம். வாகனத்தில் சிறுபழுது இருந்தாலும் உடனே கவனிப்பது நல்லது. மனதுக்குப் பிடித்த மகான்களைக் கும்பிடுவது, மகிழ்ச்சியை அதிகரிக்கச் செய்யும்.


மிதுனம்: இந்த ஆங்கிலப் புத்தாண்டின் தொடக்கத்தில் உங்கள் ராசிக்குப் பதினோராம் இடத்தில் குரு, நான்காம் இடத்தில் கேது, ஆறாம் இடத்தில் புதன் சுக்ரன் சேர்க்கை, ஏழாமிடத்தில் சூரியன் செவ்வாய் சேர்க்கை, ஒன்பதாம் இடத்தில் சனி, பத்தாம் இடத்தில் ராகு என்ற கிரஹநிலை அமைப்பு காணப்படுகிறது. 


இந்த அமைப்பு மற்றும் இந்த வருடத்தில் ஏற்பட உள்ள கிரஹநிலை மாற்றங்களின் அடிப்படையில் இந்த ஆண்டு, உங்கள் அமைதிக்குப் பரிசாக ஆனந்தத்தைத் தரக்கூடிய வருடமாக இருக்கும். அலுவலகத்தில் உங்கள் முயற்சிகளில் முடக்கம் கூடாது. மேலதிகாரிகளுடன் வீண் தர்க்கம் வேண்டாம். 


உடன் இருப்போர் குறைகளை பெரிதுபடுத்திப் பேசுவது கூடாது. ஆண்டின் தொடக்கத்தில் பொறுமையாக இருந்தால் படிப்படியாக பதவி,பொறுப்பு உயர்வுகள் வரும். புதிய வேலைக்காக காத்திருப்போர் நேர்வழியில் முயற்சிப்பதே நல்லது. வீட்டில் விட்டுக்கொடுத்துப் போவது முக்கியம். தம்பதியர் இடையே மூன்றாம் நபர் தலையீட்டை அனுமதிக்க வேண்டாம். பெற்றோர் வார்த்தைகளுக்கு மதிப்பு கொடுங்கள். 


இளம்வயதினர் திடீர் முடிவுகளை எடுப்பதைவிட, குடும்பத்தினருடன் மனம்விட்டுப் பேசுவதே நல்லது. பொது இடங்களில் வீண் ஆடம்பரங்களைத் தவிருங்கள். அநாவசியக் கடன்கள் வாங்கவேண்டாம். செய்யும் தொழில் சீரான வளர்ச்சிபெறும். உங்கள் மீது உண்மையான அக்கறை உள்ளவர்கள் ஆலோசனைகளை அவசியம் கேளுங்கள். வெளிநாட்டு வர்த்தகத்தில் தரத்தில் கவனம் முக்கியம். 


கடன் அட்டைகளை கவனமாகப் பயன்படுத்துங்கள். அரசியலில் இருப்பவர்கள் அகலக்கால் வைப்பது கூடாது. மேலிடத்தின் அனுமதி இல்லாமல் எந்தச் செயலையும் செய்யவேண்டாம். பிறருக்காக வக்காலத்து வாங்குவதைத் தவிருங்கள். அரசுப்பணிகளில் இருப்பவர்களுக்கு ஏற்றத்தின் அளவுகோல் அதிகரிக்கும். புறம்பேசுவது, கேட்பதைத் தவிருங்கள். யாருடைய தனிப்பட்ட விஷயத்திலும் நீங்கள் தலையிட வேண்டாம். கலை படைப்புத் துறையினருக்கு முயற்சிகள் பலிதமாகும். பலகாலக் கனவுகள் நனவாகும். மாணவர்களுக்கு சீரான உயர்வுகள் கிட்டும். 


பெற்றோர், ஆசிரியர் ஆலோசனைகளை அவசியம் கேளுங்கள். ஆரோக்யத்தில் அக்கறை தேவைப்படும் ஆண்டு. உடற்பயிற்சி, மனப்பயிற்சி செய்வோர்க்கு உடல்நலம் சீராக இருக்கும். காது, மூக்கு, தொண்டை, அஜீரணப் பிரச்னைகள் வரலாம். வாகனத்தில் சிறுபழுது இருந்தாலும் உடனே கவனிப்பது நல்லது. மனதுக்குப் பிடித்த மகான்களைக் கும்பிடுவது, மகிழ்ச்சியை அதிகரிக்கச் செய்யும்.


  இந்த வருடத்தின் தொடக்க நாளில் உங்கள் ராசிக்குப் பத்தாம் இடத்தில் குரு, மூன்றாம் இடத்தில் கேது, ஐந்தாம் இடத்தில் புதன் சுக்ரன் சேர்க்கை, ஆறாம் இடத்தில் சூரியன், செவ்வாய், எட்டாம் இடத்தில் சனி, ஒன்பதாம் இடத்தில் ராகு என்ற கிரஹ நிலை அமைப்பு காணப்படுகிறது. 


இதன் அடிப்படையிலும் இந்த ஆண்டில் நிகழக்கூடிய கிரஹநிலை மாற்றங்களின் அடிப்படையிலும் இந்த வருடம் உங்களுக்கு வசந்தத்தை வரவேற்கும் வருடமாக இருக்கும். அதேசமயம் எதிலும் சோம்பல் இல்லாத முயற்சிகள் முக்கியம். அலுவலகத்தில் அவசரமும் அலட்சியமும் கூடாது. மேலதிகாரிகள் அனுமதி இல்லாத எந்தச் செயலையும் செயல்படுத்த வேண்டாம். உங்கள் பொறுப்பு உணர்ந்து செயல்பட்டால், உன்னதமான எதிர்காலம் உருவாகும். 


புதிய வாய்ப்புகள் சிலருக்குத் தேடிவரும். அதில் வறட்டு கௌரவம் பார்க்க வேண்டாம். குடும்பத்தில் நிம்மதியான சூழல் நிலவும். தம்பதியருக்குள் அன்யோன்யம் உருவாகும். பிள்ளைகளால் பெருமை ஏற்படும். ஆடை, ஆபரண சேர்க்கை ஏற்படும். பழைய கடன்கள் சுலபமாக பைசலாகும். யாருடைய தனிப்பட்ட விஷயத்திலும் நீங்கள் தலையிட வேண்டாம். விசேஷங்கள் நிச்சயம் கைகூடி வரும். 


வாரிசுகளிடம் அன்பான கண்டிப்பே நல்லது, வீண் அதிகாரம் வேண்டாம். செய்கிற தொழில் எதுவானாலும் அதில் நேரடி கவனமும் நேர்மையும் முக்கியம். யாருக்காகவும் தெரியாத தொழிலில் இறங்க வேண்டாம். பங்குவர்த்தகம், சூதாட்டம், பந்தயங்களில் முதலீடு தவிருங்கள். அரசியலில் இருப்பவர்களுக்கு ஆதரவைத் தக்கவைத்துக்கொள்ள அமைதியான செயல்கள் முக்கியம். யாருடைய தவறான வழிகாட்டலுக்கும் தலையசைக்க வேண்டாம். 


அரசுத் துறையில் உள்ளவர்களுக்கு நன்மைகள் தொடர்ச்சியாக வரும்.பணி சார்ந்த பயணங்களில் கோப்புகளை பத்திரமாக வைத்துக்கொள்ளுங்கள். பிறர் மெச்சுவதற்காக ரகசியம் எதையும் பகிர வேண்டாம். கலைபடைப்புத் துறையினருக்கு அரசுவழி பாராட்டு, பெருமைகள் கிட்ட வாய்ப்பு உண்டு. 


மாணவர்கள் மறதியை மறக்க எதையும் அர்த்தம் உணர்ந்து படிப்பது அவசியம். இரவுநேரப் பயணங்களில் இருட்டான இடங்களில் தனியே இறங்க வேண்டாம். ஆரோக்யத்தில் தோள்பட்டைவலி, முதுகுத்தண்டுவட உபாதை, தூக்கமின்மை பிரச்னைகள் வரலாம். எப்போதும் நரசிம்மரைக் கும்பிடுங்கள். நல்லவை அதிகரிக்கும்.


கடகம் : இந்த வருடத்தின் தொடக்க நாளில் உங்கள் ராசிக்குப் பத்தாம் இடத்தில் குரு, மூன்றாம் இடத்தில் கேது, ஐந்தாம் இடத்தில் புதன் சுக்ரன் சேர்க்கை, ஆறாம் இடத்தில் சூரியன், செவ்வாய், எட்டாம் இடத்தில் சனி, ஒன்பதாம் இடத்தில் ராகு என்ற கிரஹ நிலை அமைப்பு காணப்படுகிறது. இதன் அடிப்படையிலும் இந்த ஆண்டில் நிகழக்கூடிய கிரஹநிலை மாற்றங்களின் அடிப்படையிலும் இந்த வருடம் உங்களுக்கு வசந்தத்தை வரவேற்கும் வருடமாக இருக்கும். அதேசமயம் எதிலும் சோம்பல் இல்லாத முயற்சிகள் முக்கியம். 


அலுவலகத்தில் அவசரமும் அலட்சியமும் கூடாது. மேலதிகாரிகள் அனுமதி இல்லாத எந்தச் செயலையும் செயல்படுத்த வேண்டாம். உங்கள் பொறுப்பு உணர்ந்து செயல்பட்டால், உன்னதமான எதிர்காலம் உருவாகும். புதிய வாய்ப்புகள் சிலருக்குத் தேடிவரும். அதில் வறட்டு கௌரவம் பார்க்க வேண்டாம். குடும்பத்தில் நிம்மதியான சூழல் நிலவும். தம்பதியருக்குள் அன்யோன்யம் உருவாகும். 


பிள்ளைகளால் பெருமை ஏற்படும். ஆடை, ஆபரண சேர்க்கை ஏற்படும். பழைய கடன்கள் சுலபமாக பைசலாகும். யாருடைய தனிப்பட்ட விஷயத்திலும் நீங்கள் தலையிட வேண்டாம். விசேஷங்கள் நிச்சயம் கைகூடி வரும். வாரிசுகளிடம் அன்பான கண்டிப்பே நல்லது, வீண் அதிகாரம் வேண்டாம். செய்கிற தொழில் எதுவானாலும் அதில் நேரடி கவனமும் நேர்மையும் முக்கியம். 


யாருக்காகவும் தெரியாத தொழிலில் இறங்க வேண்டாம். பங்குவர்த்தகம், சூதாட்டம், பந்தயங்களில் முதலீடு தவிருங்கள். அரசியலில் இருப்பவர்களுக்கு ஆதரவைத் தக்கவைத்துக்கொள்ள அமைதியான செயல்கள் முக்கியம். யாருடைய தவறான வழிகாட்டலுக்கும் தலையசைக்க வேண்டாம். அரசுத் துறையில் உள்ளவர்களுக்கு நன்மைகள் தொடர்ச்சியாக வரும்.பணி சார்ந்த பயணங்களில் கோப்புகளை பத்திரமாக வைத்துக்கொள்ளுங்கள். பிறர் மெச்சுவதற்காக ரகசியம் எதையும் பகிர வேண்டாம். 


கலைபடைப்புத் துறையினருக்கு அரசுவழி பாராட்டு, பெருமைகள் கிட்ட வாய்ப்பு உண்டு. மாணவர்கள் மறதியை மறக்க எதையும் அர்த்தம் உணர்ந்து படிப்பது அவசியம். இரவுநேரப் பயணங்களில் இருட்டான இடங்களில் தனியே இறங்க வேண்டாம். ஆரோக்யத்தில் தோள்பட்டைவலி, முதுகுத்தண்டுவட உபாதை, தூக்கமின்மை பிரச்னைகள் வரலாம். எப்போதும் நரசிம்மரைக் கும்பிடுங்கள். நல்லவை அதிகரிக்கும்.


  இந்த ஆங்கிலப் புத்தாண்டின் தொடக்கத்தில் உங்கள் ராசிக்கு ஒன்பதாம் இடத்தில் குரு, இரண்டாம் இடத்தில் கேது, நான்காம் இடத்தில் புதன் சுக்ரன் சேர்க்கை, ஐந்தாம் இடத்தில் சூரியன் செவ்வாய், ஏழாம் இடத்தில் சனி, எட்டாம் இடத்தில் ராகு என்ற கோள்சார அமைப்பு காணப்படுகிறது. 


இந்த அடிப்படையிலும் இந்த ஆண்டில் நிகழ உள்ள கிரஹ மாற்றங்களின் அடிப்படையிலும் இந்த ஆண்டு உங்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கக்கூடிய ஆண்டாக இருக்கும். அதேசமயம் தடைகள் எதையும் முழு முயற்சிகளால் முறியடிப்பது நல்லது. அலுவலகத்தில் உங்கள் திறமை உரியவர்களால் உணரப்படும். 


அதேசமயம், பதவி, இடமாற்ற உயர்வுகள் சற்றே தாமதமாகலாம். திட்டமிட்டு, நேரம் தவறாமல் உழைத்தால் அந்த உயர்வுகளை சீக்கிரமே பெறலாம். மேலதிகாரிகளுடன் வீண் தர்க்கம் தவிருங்க. சக ஊழியர்கள் ஆதரவு மனமகிழ்ச்சி தரும். குடும்பத்தில் கசப்பான சூழல் மறைந்து, வசந்தகாலம் வரத்தொடங்கும். அதை உங்கள் வீண் வாதத்தால் விரட்டிவிட வேண்டாம். வாழ்க்கைத் துணையுடன் வாக்குவாதம் தவிருங்கள். குடும்பத்தில் அந்நியர் தலையீட்டை அனுமதிக்க வேண்டாம். கொடுக்கல், வாங்கலை உடனுக்கு உடன் குறித்து வையுங்கள். 


சுபகாரியங்கள் சுலபமாகக் கைகூடும். ஆடம்பரம் வீண் கேளிக்கை தவிருங்கள். செய்யும் தொழில் எதுவாக இருந்தாலும் அதில் வளர்ச்சி விகிதம் அதிகரிக்கும். ஏற்றுமதி வர்த்தகத்தில் இடைத்தரகர்களை நம்ப வேண்டாம். வர்த்தக முயற்சிகளில் சட்டத்தை மதிப்பது முக்கியம். அரசுப்பணி செய்பவர்களுக்கு துணிவை விட பணிவே நல்லது. வருடக் கடைசியில் உயர்வுகளுக்கு உத்தரவாதம் கிட்டும். 


அரசியல்துறையினர் முகஸ்துதி நபர்களை உடனே உதறுவது உத்தமம். பொது இடங்களில் வாக்குறுதி எதுவும் தரும் முன் ஒருமுறைக்கு இருமுறை யோசியுங்கள். கலை படைப்புத் துறையினருக்கு கணிசமான வாய்ப்புகள் வரும்.எதிர்பாலருடன் எல்லை வகுத்துப் பழகுங்கள். மாணவர்களுக்கு மதிப்பெண் உயரும். சிலருக்கு படிக்கும் காலத்திலேயே பணி உத்தரவாதம் கிடைக்கும். 


உடல்நலத்தில் அடிவயிறு, மூட்டுகள், தலைவலி, ரத்த அழுத்த மாற்றப் பிரச்னைகள் வரலாம். வாகனத்தில் செல்லும்போது கவனச் சிதறல் கூடாது. வருடம் முழுக்க, துர்க்கையைக் கும்பிடுங்கள். வாழ்க்கை துளிர்க்கும்.


சிம்மம்: இந்த ஆங்கிலப் புத்தாண்டின் தொடக்கத்தில் உங்கள் ராசிக்கு ஒன்பதாம் இடத்தில் குரு, இரண்டாம் இடத்தில் கேது, நான்காம் இடத்தில் புதன் சுக்ரன் சேர்க்கை, ஐந்தாம் இடத்தில் சூரியன் செவ்வாய், ஏழாம் இடத்தில் சனி, எட்டாம் இடத்தில் ராகு என்ற கோள்சார அமைப்பு காணப்படுகிறது. 


இந்த அடிப்படையிலும் இந்த ஆண்டில் நிகழ உள்ள கிரஹ மாற்றங்களின் அடிப்படையிலும் இந்த ஆண்டு உங்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கக்கூடிய ஆண்டாக இருக்கும். அதேசமயம் தடைகள் எதையும் முழு முயற்சிகளால் முறியடிப்பது நல்லது. அலுவலகத்தில் உங்கள் திறமை உரியவர்களால் உணரப்படும். அதேசமயம், பதவி, இடமாற்ற உயர்வுகள் சற்றே தாமதமாகலாம். 


திட்டமிட்டு, நேரம் தவறாமல் உழைத்தால் அந்த உயர்வுகளை சீக்கிரமே பெறலாம். மேலதிகாரிகளுடன் வீண் தர்க்கம் தவிருங்க. சக ஊழியர்கள் ஆதரவு மனமகிழ்ச்சி தரும். குடும்பத்தில் கசப்பான சூழல் மறைந்து, வசந்தகாலம் வரத்தொடங்கும். அதை உங்கள் வீண் வாதத்தால் விரட்டிவிட வேண்டாம். வாழ்க்கைத் துணையுடன் வாக்குவாதம் தவிருங்கள். குடும்பத்தில் அந்நியர் தலையீட்டை அனுமதிக்க வேண்டாம். கொடுக்கல், வாங்கலை உடனுக்கு உடன் குறித்து வையுங்கள். 


சுபகாரியங்கள் சுலபமாகக் கைகூடும். ஆடம்பரம் வீண் கேளிக்கை தவிருங்கள். செய்யும் தொழில் எதுவாக இருந்தாலும் அதில் வளர்ச்சி விகிதம் அதிகரிக்கும். ஏற்றுமதி வர்த்தகத்தில் இடைத்தரகர்களை நம்ப வேண்டாம். வர்த்தக முயற்சிகளில் சட்டத்தை மதிப்பது முக்கியம். அரசுப்பணி செய்பவர்களுக்கு துணிவை விட பணிவே நல்லது. வருடக் கடைசியில் உயர்வுகளுக்கு உத்தரவாதம் கிட்டும். 


அரசியல்துறையினர் முகஸ்துதி நபர்களை உடனே உதறுவது உத்தமம். பொது இடங்களில் வாக்குறுதி எதுவும் தரும் முன் ஒருமுறைக்கு இருமுறை யோசியுங்கள். கலை படைப்புத் துறையினருக்கு கணிசமான வாய்ப்புகள் வரும்.எதிர்பாலருடன் எல்லை வகுத்துப் பழகுங்கள். மாணவர்களுக்கு மதிப்பெண் உயரும். 


சிலருக்கு படிக்கும் காலத்திலேயே பணி உத்தரவாதம் கிடைக்கும். உடல்நலத்தில் அடிவயிறு, மூட்டுகள், தலைவலி, ரத்த அழுத்த மாற்றப் பிரச்னைகள் வரலாம். வாகனத்தில் செல்லும்போது கவனச் சிதறல் கூடாது. வருடம் முழுக்க, துர்க்கையைக் கும்பிடுங்கள். வாழ்க்கை துளிர்க்கும்.


  இந்த ஆண்டின் ஆரம்பத்தில் உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் குரு, ஜன்ம ராசியில் கேது, மூன்றாம் இடத்தில் புதன் சுக்கிரன், நான்காம் இடத்தில் சூரியன் செவ்வாய், ஆறாம் இடத்தில் சனி, ஏழாம் இடத்தில் ராகு என்ற கிரஹ நிலை அமைப்பு காணப்படுகிறது. 


இந்த கிரஹநிலை அமைப்பின்படியும், ஆண்டு முழுக்க நடக்க உள்ள கிரஹநிலை மாற்றங்களின் அடிப்படையிலும் இந்த ஆண்டு உங்களுக்கு முயற்சிகளுக்கு ஏற்ப முன்னேற்றத்தைத் தரக்கூடியதாக இருக்கும். எந்த சமயத்திலும் வீண் அதிகாரமும் வெட்டிக் கோபமும் கூடாது. பணியிடத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். 


அதேசமயம் பொறுப்புகளில் முழுகவனம் முக்கியம். உங்கள் தனிப்பட்ட பணிகள் எதையும் பிறரை நம்பி ஒப்படைக்க வேண்டாம். மேலதிகாரிகள் ஆதரவு அதிகரிக்கும். சக ஊழியர்களில் எவரையும் உதாசீனப்படுத்த வேண்டாம். ஆண்டின் இறுதியில் ஏற்றத்தின் அளவுகோல் அதிகரிக்கும். 


வீட்டில் நிம்மதி நிலவத்தொடங்கும். அது நிலைக்க உங்க வார்த்தைகளில் நிதானமும், செயல்களில் விட்டுக்கொடுத்தலும் அவசியம். மூன்றாம் நபர் முன்னிலையில் குடும்ப உறுப்பினர்கள் எவரையும் அலட்சியப்படுத்த வேண்டாம். வாகனம், வீடு மாற்ற வாய்ப்பு உண்டு. பெற்றோர் ஆலோசனைக்கு முக்கியத்துவம் கொடுங்கள். பணவரவு சீராக இருக்கும். நீங்கள் செய்யும் தொழிலில் நிதானத்துக்கு முக்கியத்துவம் கொடுங்கள். 


யாருடைய கட்டாயத்தாலும் சட்டப்புறம்புக்கு இடம்தரவேண்டாம். புதிய தொழில் முயற்சிகளை அனுபவம் மிக்கவர்கள் ஆலோசனை கேட்டுச் செய்யுங்கள். அரசியல்சார்ந்தவர்களின் பெருமை மேலிடத்தால் உணரப்படும். அதேசமயம் உடனிருப்போர் சூழ்ச்சியால் நீங்கள் தலைகுனிய நேரிடலாம், கவனம் முக்கியம். 


யாரிடமும் வீண் தர்க்கம் வேண்டாம். அரசுத்துறையினர், அலுவலக ஃபைல்களை பத்திரமாக வைத்துக்கொள்ளுங்கள். முக்கியமான எதையும் மேலிட அனுமதி இன்றி நகலெடுக்கவோ,பிறரிடம் பகிரவோ வேண்டாம். கலைஞர்கள், சினிமாத்துறையினர் போன்றோர்க்கு வாய்ப்புகள் முயற்சிக்கு ஏற்ப வரத்தொடங்கும். எந்த சமயத்திலும் முழுமையான கவனமும் திட்டமிடலும் முக்கியம். 


மாணவர்கள், தினமும் அதிகாலையில் எழுந்து படிப்பது நல்லது. அயல்நாட்டுக் கல்வியில் அவசரம் வேண்டாம். உடல்நலத்தில் கழிவு உறுப்பு உபாதை, அஜீரணம், தொற்றுப் பிரச்னைகள் வரலாம். வாகனத்தில் வேகம் அறவே கூடாது. ஸ்ரீரங்கநாதரைக் கும்பிடுங்கள். வருடம் வசந்தமாகும்.


கன்னி: இந்த ஆண்டின் ஆரம்பத்தில் உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் குரு, ஜன்ம ராசியில் கேது, மூன்றாம் இடத்தில் புதன் சுக்கிரன், நான்காம் இடத்தில் சூரியன் செவ்வாய், ஆறாம் இடத்தில் சனி, ஏழாம் இடத்தில் ராகு என்ற கிரஹ நிலை அமைப்பு காணப்படுகிறது. 


இந்த கிரஹநிலை அமைப்பின்படியும், ஆண்டு முழுக்க நடக்க உள்ள கிரஹநிலை மாற்றங்களின் அடிப்படையிலும் இந்த ஆண்டு உங்களுக்கு முயற்சிகளுக்கு ஏற்ப முன்னேற்றத்தைத் தரக்கூடியதாக இருக்கும். எந்த சமயத்திலும் வீண் அதிகாரமும் வெட்டிக் கோபமும் கூடாது. பணியிடத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். அதேசமயம் பொறுப்புகளில் முழுகவனம் முக்கியம். உங்கள் தனிப்பட்ட பணிகள் எதையும் பிறரை நம்பி ஒப்படைக்க வேண்டாம். மேலதிகாரிகள் ஆதரவு அதிகரிக்கும். சக ஊழியர்களில் எவரையும் உதாசீனப்படுத்த வேண்டாம். 


ஆண்டின் இறுதியில் ஏற்றத்தின் அளவுகோல் அதிகரிக்கும். வீட்டில் நிம்மதி நிலவத்தொடங்கும். அது நிலைக்க உங்க வார்த்தைகளில் நிதானமும், செயல்களில் விட்டுக்கொடுத்தலும் அவசியம். மூன்றாம் நபர் முன்னிலையில் குடும்ப உறுப்பினர்கள் எவரையும் அலட்சியப்படுத்த வேண்டாம். வாகனம், வீடு மாற்ற வாய்ப்பு உண்டு. 


பெற்றோர் ஆலோசனைக்கு முக்கியத்துவம் கொடுங்கள். பணவரவு சீராக இருக்கும். நீங்கள் செய்யும் தொழிலில் நிதானத்துக்கு முக்கியத்துவம் கொடுங்கள். யாருடைய கட்டாயத்தாலும் சட்டப்புறம்புக்கு இடம்தரவேண்டாம். 


புதிய தொழில் முயற்சிகளை அனுபவம் மிக்கவர்கள் ஆலோசனை கேட்டுச் செய்யுங்கள். அரசியல்சார்ந்தவர்களின் பெருமை மேலிடத்தால் உணரப்படும். அதேசமயம் உடனிருப்போர் சூழ்ச்சியால் நீங்கள் தலைகுனிய நேரிடலாம், கவனம் முக்கியம். 


யாரிடமும் வீண் தர்க்கம் வேண்டாம். அரசுத்துறையினர், அலுவலக ஃபைல்களை பத்திரமாக வைத்துக்கொள்ளுங்கள். முக்கியமான எதையும் மேலிட அனுமதி இன்றி நகலெடுக்கவோ,பிறரிடம் பகிரவோ வேண்டாம். கலைஞர்கள், சினிமாத்துறையினர் போன்றோர்க்கு வாய்ப்புகள் முயற்சிக்கு ஏற்ப வரத்தொடங்கும். 


எந்த சமயத்திலும் முழுமையான கவனமும் திட்டமிடலும் முக்கியம். மாணவர்கள், தினமும் அதிகாலையில் எழுந்து படிப்பது நல்லது. அயல்நாட்டுக் கல்வியில் அவசரம் வேண்டாம். உடல்நலத்தில் கழிவு உறுப்பு உபாதை, அஜீரணம், தொற்றுப் பிரச்னைகள் வரலாம். வாகனத்தில் வேகம் அறவே கூடாது. ஸ்ரீரங்கநாதரைக் கும்பிடுங்கள். வருடம் வசந்தமாகும்.


  இந்த ஆங்கிலப் புத்தாண்டின் ஆரம்பத்தில் உங்கள் ராசிக்கு ஏழாம் இடத்தில் குரு, பன்னிரண்டாம் இடத்தில் கேது, இரண்டாம் இடத்தில் புதன் சுக்ரன் சேர்க்கை, மூன்றாம் இடத்தில் சூரியன் செவ்வாய், ஐந்தாம் இடத்தில் சனி, ஆறாம் இடத்தில் ராகு என்ற கிரஹநிலை அமைப்பு காணப்படுகிறது. இதன் அடிப்படையிலும், இந்த ஆண்டில் நிகழ இருக்கிற கிரஹநிலை மாற்றங்களின் அடிப்படையிலும் இந்த ஆண்டு உங்களுக்கு பொறுமைக்குப் பரிசாக பெருமைகளைத் தரக்கூடியதாக இருக்கும். 


எந்த சமயத்திலும் நிதானத்தைக் கடைபிடிப்பவர்களுக்கு நிம்மதி, நிரந்தரமாகும். அலுவலகத்தில் அனுகூலமான சூழல் நிலவும். உடனிருப்போர் ஆதரவு ஊக்கம் தரும். மேலதிகாரிகளிடம் பேசும்போது பணிவே நல்லது. அனுபவம் மிக்கவர்கள் ஆலோசனைகளை அவசியம் கேளுங்கள். இடமாற்றம், பதவி மாற்றம் வந்தால் தவிர்க்காமல் ஏற்பது நல்லது. பணத்தைக் கையாளும் பொறுப்பில் கவனச்சிதறல் கூடாது. 


வீட்டில் விசேஷங்கள் வரத்தொடங்கும். விலகி இருந்த நட்பும் உறவும் வீடுதேடி வரும். யாரிடமும் கடுஞ்சொல் பேசவேண்டாம். குழந்தைகளால் பெருமை சேரும். வாழ்க்கைத்துணையுடன் விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. ஆடை, ஆபரணம் சேரும். வரவை சேமிக்கப் பழகுங்கள். செய்யும் தொழிலில் ஆதாயம் அதிகரிக்கும். 


உங்கள் உழைப்பில் சுணக்கம் கூடவே கூடாது. தெரியாத தொழிலில் புதிய முதலீடுகள் வேண்டாம். கூட்டுத் தொழிலில் மாற்றங்கள் வரும். பத்திரங்களை பத்திரமாக வையுங்கள். அரசியல்சார்ந்தோர்க்கு அனுகூலக்காற்று வீசும். சிலருக்கு பதவி, பாராட்டுகள் கிட்ட வாய்ப்பு உண்டு. மேலிடத்தின் வார்த்தைகளுக்கு மதிப்பளியுங்கள். அரசுத்துறையில் இருப்போர் உயர்வுகளைத் தக்கவைத்துக் கொள்ள உழைப்பில் சுணங்காமல் இருப்பது முக்கியம். எதையும் திட்டமிட்டு நேரம்தவறாமல் செய்தால், உயர்வுகளுக்கு உத்தரவாதம் உண்டு. 


சினிமா, நாடகம், கலைத்துறை சார்ந்தவர்களுக்கு முயற்சிகள் பலன் தரும். உடனிருக்கும் யாரிடமும் படைப்பு ரகசியம் பகிர வேண்டாம். மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர் அறிவுரைகளை அவசியம் கேளுங்கள். சக மாணவர்களுடன் போட்டி இருக்கலாம்,பொறாமை வேண்டாம். இரவில் அதிகநேரம் விழித்திருப்பதைத் தவிருங்கள். உடல்நலத்தில் அல்சர், அலர்ஜி, ஒற்றைத் தலைவலி, உணவு எதுக்களிப்பு உபாதைகள் வரலாம். இயன்றவரை இரவுநேரப் பயணம் தவிருங்கள். துர்க்கையைத் துதியுங்கள். துன்பங்கள் விலகி ஓடும்.


துலாம்: இந்த ஆங்கிலப் புத்தாண்டின் ஆரம்பத்தில் உங்கள் ராசிக்கு ஏழாம் இடத்தில் குரு, பன்னிரண்டாம் இடத்தில் கேது, இரண்டாம் இடத்தில் புதன் சுக்ரன் சேர்க்கை, மூன்றாம் இடத்தில் சூரியன் செவ்வாய், ஐந்தாம் இடத்தில் சனி, ஆறாம் இடத்தில் ராகு என்ற கிரஹநிலை அமைப்பு காணப்படுகிறது. இதன் அடிப்படையிலும், இந்த ஆண்டில் நிகழ இருக்கிற கிரஹநிலை மாற்றங்களின் அடிப்படையிலும் இந்த ஆண்டு உங்களுக்கு பொறுமைக்குப் பரிசாக பெருமைகளைத் தரக்கூடியதாக இருக்கும். எந்த சமயத்திலும் நிதானத்தைக் கடைபிடிப்பவர்களுக்கு நிம்மதி, நிரந்தரமாகும். 


அலுவலகத்தில் அனுகூலமான சூழல் நிலவும். உடனிருப்போர் ஆதரவு ஊக்கம் தரும். மேலதிகாரிகளிடம் பேசும்போது பணிவே நல்லது. அனுபவம் மிக்கவர்கள் ஆலோசனைகளை அவசியம் கேளுங்கள். இடமாற்றம், பதவி மாற்றம் வந்தால் தவிர்க்காமல் ஏற்பது நல்லது. பணத்தைக் கையாளும் பொறுப்பில் கவனச்சிதறல் கூடாது. வீட்டில் விசேஷங்கள் வரத்தொடங்கும். விலகி இருந்த நட்பும் உறவும் வீடுதேடி வரும். யாரிடமும் கடுஞ்சொல் பேசவேண்டாம். 


குழந்தைகளால் பெருமை சேரும். வாழ்க்கைத்துணையுடன் விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. ஆடை, ஆபரணம் சேரும். வரவை சேமிக்கப் பழகுங்கள். செய்யும் தொழிலில் ஆதாயம் அதிகரிக்கும். உங்கள் உழைப்பில் சுணக்கம் கூடவே கூடாது. தெரியாத தொழிலில் புதிய முதலீடுகள் வேண்டாம். கூட்டுத் தொழிலில் மாற்றங்கள் வரும். பத்திரங்களை பத்திரமாக வையுங்கள். அரசியல்சார்ந்தோர்க்கு அனுகூலக்காற்று வீசும். சிலருக்கு பதவி, பாராட்டுகள் கிட்ட வாய்ப்பு உண்டு. 


மேலிடத்தின் வார்த்தைகளுக்கு மதிப்பளியுங்கள். அரசுத்துறையில் இருப்போர் உயர்வுகளைத் தக்கவைத்துக் கொள்ள உழைப்பில் சுணங்காமல் இருப்பது முக்கியம். எதையும் திட்டமிட்டு நேரம்தவறாமல் செய்தால், உயர்வுகளுக்கு உத்தரவாதம் உண்டு. சினிமா, நாடகம், கலைத்துறை சார்ந்தவர்களுக்கு முயற்சிகள் பலன் தரும். 


உடனிருக்கும் யாரிடமும் படைப்பு ரகசியம் பகிர வேண்டாம். மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர் அறிவுரைகளை அவசியம் கேளுங்கள். சக மாணவர்களுடன் போட்டி இருக்கலாம்,பொறாமை வேண்டாம். இரவில் அதிகநேரம் விழித்திருப்பதைத் தவிருங்கள். உடல்நலத்தில் அல்சர், அலர்ஜி, ஒற்றைத் தலைவலி, உணவு எதுக்களிப்பு உபாதைகள் வரலாம். இயன்றவரை இரவுநேரப் பயணம் தவிருங்கள். துர்க்கையைத் துதியுங்கள். துன்பங்கள் விலகி ஓடும்.


 இந்த ஆங்கில ஆண்டின் ஆரம்பத்தில் உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் குரு, பதினோராம் இடத்தில் கேது, உங்கள் ஜன்மராசியில் புதன் சுக்ரன் சேர்க்கை, இரண்டாம் இடத்தில் சூரியன் செவ்வாய், நான்காம் இடத்தில் சனி, ஐந்தாம் இடத்தில் ராகு என்ற கோசார அமைப்பு காணப்படுகிறது. இந்த அமைப்பின் காரணமாகவும், இந்த ஆண்டில் அமையக்கூடிய கிரஹநிலைகளின் அமைப்பின்படியும் இது உங்களுக்கு உயர்வுகளும் உன்னதமும் கிட்டக்கூடிய ஆண்டாக இருக்கும். 


அதேசமயம், பொறுப்பு உணர்வு மிகமிக முக்கியம். அலுவலகத்தில் தலைகனம் தவிர்த்து தன்னம்பிக்கையோடு செயல்படுங்கள். எதிர்பாராத இடமாற்றம் வந்தால், தவிர்க்க வேண்டாம். சிலருக்கு வெளியூர், வெளிநாடு பயண வாய்ப்பு வரலாம். பணியிட விஷயங்களை பிறரிடம் பேசுவதைத் தவிருங்கள். இல்லத்தில் இனிய சூழல் நிலவும். உறவுகளிடையே உங்கள் பேச்சுக்கு மரியாதை அதிகரிக்கும். 


வாழ்க்கைத் துணையுடன் வீண் வாக்குவாதம் கூடாது. தேவையற்ற ஆடம்பரக் கடன்களைத் தவிருங்கள். பூர்வீக சொத்து சேரும். சகோதர உறவுகளால் ஆதாயம் உண்டு. சுபகாரியங்கள் ஈடேற குலதெய்வ வழிபாடு முக்கியம். இளம் வயதினர் பெற்றோருடன் மனம்விட்டுப் பேசுங்கள். ஆபரணங்களை ஆடம்பரத்திற்காக அணிய வேண்டாம். 


செய்யும் வர்த்தகத்தில் உழைப்பே உயர்வுதரும். யாருடைய கட்டாயத்திற்காகவும் பரம்பரைத் தொழிலில் மாற்றங்கள் எதுவும் செய்யும் முன் யோசியுங்கள். கூட்டுத் தொழிலில் நிதானம் முக்கியம். அரசியல் சார்ந்தவர்களுக்கு சீரான போக்கு நிலவும். ஆதரவைத் தக்கவைத்துக் கொள்ள அடக்கமும் அமைதியும் அவசியம். பிறருக்கு ஜாமீன் தருவதைத் தவிருங்கள். அரசுத்துறையில் உள்ளவர்கள் பணியிடத்தில் வீண் பேச்சு, அரட்டையடிப்பதைத் தவிருங்கள். அனுபவசாலிகளின் ஆலோசனைகளை அவசியம் கேளுங்கள். 


கலைஞர்கள், சினிமா, டிராமா துறையினர் முயற்சிகளில் முடங்குவது கூடாது. பொது இடங்களில் பேசும்போது வார்த்தைகளில் நிதானம் முக்கியம். மாணவர்கள் அனுதினமும் அன்றன்றைய பாடங்களை வாசிப்பது அவசியம். படிப்பில் தளரா முயற்சியே தலை நிமிரச் செய்யும். ஆரோக்யம் சீராக இருக்க சிறுசிறு உடற்பயிற்சிகளாவது அவசியம். தலைவலி, கண்கள், அடிவயிறு, முதுகு உபாதைகள் வரலாம். இரவுப் பயணத்தில் இடைவழியில் இறங்குவதைத் தவிருங்கள். முருகப்பெருமானை கும்பிடுங்கள். முன்னேற்றம் வரும்.


விருச்சிகம் : இந்த ஆங்கில ஆண்டின் ஆரம்பத்தில் உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் குரு, பதினோராம் இடத்தில் கேது, உங்கள் ஜன்மராசியில் புதன் சுக்ரன் சேர்க்கை, இரண்டாம் இடத்தில் சூரியன் செவ்வாய், நான்காம் இடத்தில் சனி, ஐந்தாம் இடத்தில் ராகு என்ற கோசார அமைப்பு காணப்படுகிறது. 


இந்த அமைப்பின் காரணமாகவும், இந்த ஆண்டில் அமையக்கூடிய கிரஹநிலைகளின் அமைப்பின்படியும் இது உங்களுக்கு உயர்வுகளும் உன்னதமும் கிட்டக்கூடிய ஆண்டாக இருக்கும். அதேசமயம், பொறுப்பு உணர்வு மிகமிக முக்கியம். 


அலுவலகத்தில் தலைகனம் தவிர்த்து தன்னம்பிக்கையோடு செயல்படுங்கள். எதிர்பாராத இடமாற்றம் வந்தால், தவிர்க்க வேண்டாம். சிலருக்கு வெளியூர், வெளிநாடு பயண வாய்ப்பு வரலாம். பணியிட விஷயங்களை பிறரிடம் பேசுவதைத் தவிருங்கள். 


இல்லத்தில் இனிய சூழல் நிலவும். உறவுகளிடையே உங்கள் பேச்சுக்கு மரியாதை அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையுடன் வீண் வாக்குவாதம் கூடாது. தேவையற்ற ஆடம்பரக் கடன்களைத் தவிருங்கள். பூர்வீக சொத்து சேரும். சகோதர உறவுகளால் ஆதாயம் உண்டு. சுபகாரியங்கள் ஈடேற குலதெய்வ வழிபாடு முக்கியம். இளம் வயதினர் பெற்றோருடன் மனம்விட்டுப் பேசுங்கள். ஆபரணங்களை ஆடம்பரத்திற்காக அணிய வேண்டாம். 


செய்யும் வர்த்தகத்தில் உழைப்பே உயர்வுதரும். யாருடைய கட்டாயத்திற்காகவும் பரம்பரைத் தொழிலில் மாற்றங்கள் எதுவும் செய்யும் முன் யோசியுங்கள். கூட்டுத் தொழிலில் நிதானம் முக்கியம். அரசியல் சார்ந்தவர்களுக்கு சீரான போக்கு நிலவும். ஆதரவைத் தக்கவைத்துக் கொள்ள அடக்கமும் அமைதியும் அவசியம். பிறருக்கு ஜாமீன் தருவதைத் தவிருங்கள். அரசுத்துறையில் உள்ளவர்கள் பணியிடத்தில் வீண் பேச்சு, அரட்டையடிப்பதைத் தவிருங்கள். 


அனுபவசாலிகளின் ஆலோசனைகளை அவசியம் கேளுங்கள். கலைஞர்கள், சினிமா, டிராமா துறையினர் முயற்சிகளில் முடங்குவது கூடாது. பொது இடங்களில் பேசும்போது வார்த்தைகளில் நிதானம் முக்கியம். மாணவர்கள் அனுதினமும் அன்றன்றைய பாடங்களை வாசிப்பது அவசியம். படிப்பில் தளரா முயற்சியே தலை நிமிரச் செய்யும். 


ஆரோக்யம் சீராக இருக்க சிறுசிறு உடற்பயிற்சிகளாவது அவசியம். தலைவலி, கண்கள், அடிவயிறு, முதுகு உபாதைகள் வரலாம். இரவுப் பயணத்தில் இடைவழியில் இறங்குவதைத் தவிருங்கள். முருகப்பெருமானை கும்பிடுங்கள். முன்னேற்றம் வரும்.


  இந்த ஆங்கில வருடத்தின் தொடக்கத்தில் உங்கள் ராசிக்கு ஐந்தாம் இடத்தில் குரு, பத்தாம் இடத்தில் கேது, பன்னிரண்டாம் இடத்தில் புதன் சுக்ரன் சேர்க்கை, உங்கள் ஜன்மராசியில் சூரியன் செவ்வாய், மூன்றாம் இடத்தில் சனி, நான்காம் இடத்தில் ராகு என்ற கிரஹ அமைப்பு காணப்படுகிறது.இந்த அமைப்பின்படியும், இந்த வருடத்தில் அமையக்கூடிய கிரஹ நிலைகளின் அடிப்படையிலும் இது உங்களுக்கு முன்னேற்றத்துக்கான முட்டுக்கட்டைகள் தகரக்கூடிய ஆண்டாக இருக்கும். 


அதேசமயம் எதிலும் நிதானமும் நேரடி கவனமும் முக்கியம். அலுவலகத்தில் ஏற்றமும் மாற்றமும் நிச்சயம் வரும். மேலதிகாரிகள் உங்கள் திறமை உணர்வார்கள். அதேசமயம் உடனிருப்போரால் வீண் பழிகள் வரலாம். எந்தச் செயலையும் யோசித்து, திட்டமிட்டு செய்யுங்கள். பணி தேடுவோர், நேர்வழிகளைப் பின்பற்றுங்கள். 


குடும்பத்தில் குதர்க்கப் பேச்சினைத் தவிர்ப்பது நல்லது. வாரிசுகளால் பெருமை உண்டாகும். வாழ்க்கைத் துணையுடன் மனம்விட்டுப் பேசுங்கள். குடும்பத்துப் பெரியவர்கள் உடல்நலத்தில் கவனம் செலுத்துங்கள். பணவரவை சேமிக்கப் பழகுங்கள். 


அசையும் அசையா சொத்து சேரும். யாரையும் நம்பி வீண் கடன்கள் தரவோ, பெறவோ வேண்டாம். உங்கள் வார்த்தைகள் மென்மையாக இருந்தால் வாழ்க்கையில் நன்மைகள் வரும். செய்யும் தொழில் எதுவானாலும் அதில் நிச்சயம் லாபம் வரும். அதேசமயத்தில் நேரடி கவனமும் நேர்மையான உழைப்பும் முக்கியம். ஒப்பந்தங்களை முழுமையாகப் படித்தபின் கையெழுத்திடுங்கள். 


நிலம் சார்ந்த தொழில்களில் நிதானமான வளர்ச்சியே ஏற்படும். பொறுமை அவசியம். அரசியலில் உள்ளவர்களுக்கு தலைமையின் பாராட்டு கிடைக்கும். உடன் இருப்பவர்கள் செயல்களால் நீங்கள் தலைகுனிய நேரிடலாம், கவனம் முக்கியம். அரசாங்கப் பணிபுரிபவர்களுக்கு நல்ல மாற்றங்கள் ஏற்படும். எண்ணம்போல இடமாற்றம், பதவிகள் கைகூடிவரும். 


கலை, படைப்பு, நடிப்பு, இசைத் துறையினர் முயற்சிகள் பலன் தரும். மூன்றாம் நபரை நம்பி படைப்புகளைப் பகிரவேண்டாம். மாணவர்கள் மறதி தலைதூக்காமல் இருக்க, படிப்பது எதையும் எழுதிப்பார்ப்பது நல்லது. ஆசிரியர் வழிகாட்டலை அவசியம் கேளுங்கள். உடல்நலத்தில் ரத்த அழுத்த மாற்றம், பரம்பரை நோய்கள்,பற்கள், மூட்டுகள் பிரச்னை வரலாம். வாகனப் பயணத்தில் போதுமான ஓய்வு முக்கியம். பைரவரைக் கும்பிடுங்கள். இந்த ஆண்டு இனிய ஆண்டாகும்.


தனுசு: இந்த ஆங்கில வருடத்தின் தொடக்கத்தில் உங்கள் ராசிக்கு ஐந்தாம் இடத்தில் குரு, பத்தாம் இடத்தில் கேது, பன்னிரண்டாம் இடத்தில் புதன் சுக்ரன் சேர்க்கை, உங்கள் ஜன்மராசியில் சூரியன் செவ்வாய், மூன்றாம் இடத்தில் சனி, நான்காம் இடத்தில் ராகு என்ற கிரஹ அமைப்பு காணப்படுகிறது.இந்த அமைப்பின்படியும், இந்த வருடத்தில் அமையக்கூடிய கிரஹ நிலைகளின் அடிப்படையிலும் இது உங்களுக்கு முன்னேற்றத்துக்கான முட்டுக்கட்டைகள் தகரக்கூடிய ஆண்டாக இருக்கும். 


அதேசமயம் எதிலும் நிதானமும் நேரடி கவனமும் முக்கியம். அலுவலகத்தில் ஏற்றமும் மாற்றமும் நிச்சயம் வரும். மேலதிகாரிகள் உங்கள் திறமை உணர்வார்கள். அதேசமயம் உடனிருப்போரால் வீண் பழிகள் வரலாம். எந்தச் செயலையும் யோசித்து, திட்டமிட்டு செய்யுங்கள். பணி தேடுவோர், நேர்வழிகளைப் பின்பற்றுங்கள். 


குடும்பத்தில் குதர்க்கப் பேச்சினைத் தவிர்ப்பது நல்லது. வாரிசுகளால் பெருமை உண்டாகும். வாழ்க்கைத் துணையுடன் மனம்விட்டுப் பேசுங்கள். குடும்பத்துப் பெரியவர்கள் உடல்நலத்தில் கவனம் செலுத்துங்கள். பணவரவை சேமிக்கப் பழகுங்கள். அசையும் அசையா சொத்து சேரும். யாரையும் நம்பி வீண் கடன்கள் தரவோ, பெறவோ வேண்டாம். உங்கள் வார்த்தைகள் மென்மையாக இருந்தால் வாழ்க்கையில் நன்மைகள் வரும். செய்யும் தொழில் எதுவானாலும் அதில் நிச்சயம் லாபம் வரும். அதேசமயத்தில் நேரடி கவனமும் நேர்மையான உழைப்பும் முக்கியம். ஒப்பந்தங்களை முழுமையாகப் படித்தபின் கையெழுத்திடுங்கள். 


நிலம் சார்ந்த தொழில்களில் நிதானமான வளர்ச்சியே ஏற்படும். பொறுமை அவசியம். அரசியலில் உள்ளவர்களுக்கு தலைமையின் பாராட்டு கிடைக்கும். உடன் இருப்பவர்கள் செயல்களால் நீங்கள் தலைகுனிய நேரிடலாம், கவனம் முக்கியம். அரசாங்கப் பணிபுரிபவர்களுக்கு நல்ல மாற்றங்கள் ஏற்படும். எண்ணம்போல இடமாற்றம், பதவிகள் கைகூடிவரும். கலை, படைப்பு, நடிப்பு, இசைத் துறையினர் முயற்சிகள் பலன் தரும். மூன்றாம் நபரை நம்பி படைப்புகளைப் பகிரவேண்டாம். 


மாணவர்கள் மறதி தலைதூக்காமல் இருக்க, படிப்பது எதையும் எழுதிப்பார்ப்பது நல்லது. ஆசிரியர் வழிகாட்டலை அவசியம் கேளுங்கள். உடல்நலத்தில் ரத்த அழுத்த மாற்றம், பரம்பரை நோய்கள்,பற்கள், மூட்டுகள் பிரச்னை வரலாம். வாகனப் பயணத்தில் போதுமான ஓய்வு முக்கியம். பைரவரைக் கும்பிடுங்கள். இந்த ஆண்டு இனிய ஆண்டாகும்.


  இந்த வருடத்தின் ஆரம்பத்தில் உங்கள் ராசிக்கு நான்காம் இடத்தில் குரு, ஒன்பதாம் இடத்தில் கேது, பதினோராம் இடத்தில் புதன் சுக்ரன் சேர்க்கை, பன்னிரண்டாம் இடத்தில் சூரியன் செவ்வாய், இரண்டாம் இடத்தில் சனி, மூன்றாம் இடத்தில் ராகு என்ற கிரஹநிலைகள் காணப்படுகிறது. இந்த அமைப்பு மற்றும் இந்த வருடத்தில் ஏற்படக்கூடிய கோசார மாற்றங்களின் அடிப்படையில் இந்த ஆங்கிலப் புத்தாண்டு உங்களுக்கு நன்மைகளைத் தரக்கூடியதாகவே இருக்கும். 


அதேசமயம் உங்கள் வார்த்தைகளே வாழ்க்கையைத் தீர்மானிக்கும் என்பதால், பேச்சில் நிதானம் முக்கியம். அலுவலகத்தில் திறமைக்கு உரிய பெருமைகளை நிச்சயம் பெறுவீர்கள். சக ஊழியர்களால் அனுகூலம் ஏற்படும். உங்கள் பொறுப்பை பிறரிடம் ஒப்படைப்பதோ, பிறர் பொறுப்பை நீங்கள் செய்வதோ கூடாது. மேலிடத்தின் அனுமதி பெறாத எதையும் நீங்களாக முயற்சிக்க வேண்டாம். 


பணிதேடுவோர்க்கு எண்ணம்போல் வாய்ப்புகள் வரும். எந்த சமயத்திலும் துணிவைவிட பணிவே நல்லது. குடும்பத்தில் நிம்மதி உருவாகும். அது நிலைப்பதை உங்கள் வார்த்தைகளே தீர்மானிக்கும். வாரிசுகள் வாழ்க்கையில் சுபகாரியங்கள் நடக்கும். தம்பதியர் பரஸ்பரம் மனம்விட்டுப் பேசுவது நல்லது. எந்த உறவையும் மனம் நோகச் செய்ய வேண்டாம். விட்டுக் கொடுப்பவர் கெட்டுப்போவதில்லை என்ற பழமொழியை மனதில் வைப்பது இல்லத்தில் நிம்மதியை நிரந்தரமாக்கும். 


எந்தத் தொழில் செய்தாலும் அதில் வளர்ச்சி விகிதம் அதிகரிக்கும். அயல்நாட்டு ஒப்பந்தங்கள் கைகூடும். இரும்பு, நெருப்பு சார்ந்த தொழில்களில் நிதானம் முக்கியம். அரசியலில் இருப்பவர்களுக்கு திடீர் வளர்ச்சி மகிழ்ச்சி தரும். அதேசமயம் வாக்குறுதிகளில் நிதானம் முக்கியம். பொது இடங்களில் பேசும்போது நிதானத்தைக் கடைபிடியுங்கள். அரசுத்துறை சார்ந்தவர்களுக்கு ஏற்றங்கள் எதிர்பார்ப்புகள் நிச்சயம் ஈடேறும். முகஸ்துதிபாடுவோரிடம் எச்சரிக்கையாக இருங்கள். 


கலைத்துறை சார்ந்தவர்கள், எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்களுக்கு அரசுவழி பாராட்டுகள் கிட்ட வாய்ப்பு உண்டு. சிற்றின்ப நாட்டம் தவிருங்கள். மாணவர்கள் மனம்போல் உயர்வு பெறலாம். உடல்நலத்தில் அடிவயிறு, கழிவு உறுப்பு, முதுகு, மூட்டு உபாதைகள் வரலாம். பயணத்தில் உடைமைகள் பத்திரம்.குலதெய்வத்தைக் கும்பிடுங்கள். சுபிட்சம் சேரும்.


மகரம்: இந்த வருடத்தின் ஆரம்பத்தில் உங்கள் ராசிக்கு நான்காம் இடத்தில் குரு, ஒன்பதாம் இடத்தில் கேது, பதினோராம் இடத்தில் புதன் சுக்ரன் சேர்க்கை, பன்னிரண்டாம் இடத்தில் சூரியன் செவ்வாய், இரண்டாம் இடத்தில் சனி, மூன்றாம் இடத்தில் ராகு என்ற கிரஹநிலைகள் காணப்படுகிறது. இந்த அமைப்பு மற்றும் இந்த வருடத்தில் ஏற்படக்கூடிய கோசார மாற்றங்களின் அடிப்படையில் இந்த ஆங்கிலப் புத்தாண்டு உங்களுக்கு நன்மைகளைத் தரக்கூடியதாகவே இருக்கும். 


அதேசமயம் உங்கள் வார்த்தைகளே வாழ்க்கையைத் தீர்மானிக்கும் என்பதால், பேச்சில் நிதானம் முக்கியம். அலுவலகத்தில் திறமைக்கு உரிய பெருமைகளை நிச்சயம் பெறுவீர்கள். சக ஊழியர்களால் அனுகூலம் ஏற்படும். உங்கள் பொறுப்பை பிறரிடம் ஒப்படைப்பதோ, பிறர் பொறுப்பை நீங்கள் செய்வதோ கூடாது. 


மேலிடத்தின் அனுமதி பெறாத எதையும் நீங்களாக முயற்சிக்க வேண்டாம். பணிதேடுவோர்க்கு எண்ணம்போல் வாய்ப்புகள் வரும். எந்த சமயத்திலும் துணிவைவிட பணிவே நல்லது. குடும்பத்தில் நிம்மதி உருவாகும். அது நிலைப்பதை உங்கள் வார்த்தைகளே தீர்மானிக்கும். வாரிசுகள் வாழ்க்கையில் சுபகாரியங்கள் நடக்கும். தம்பதியர் பரஸ்பரம் மனம்விட்டுப் பேசுவது நல்லது. 


எந்த உறவையும் மனம் நோகச் செய்ய வேண்டாம். விட்டுக் கொடுப்பவர் கெட்டுப்போவதில்லை என்ற பழமொழியை மனதில் வைப்பது இல்லத்தில் நிம்மதியை நிரந்தரமாக்கும். எந்தத் தொழில் செய்தாலும் அதில் வளர்ச்சி விகிதம் அதிகரிக்கும். அயல்நாட்டு ஒப்பந்தங்கள் கைகூடும். இரும்பு, நெருப்பு சார்ந்த தொழில்களில் நிதானம் முக்கியம். 


அரசியலில் இருப்பவர்களுக்கு திடீர் வளர்ச்சி மகிழ்ச்சி தரும். அதேசமயம் வாக்குறுதிகளில் நிதானம் முக்கியம். பொது இடங்களில் பேசும்போது நிதானத்தைக் கடைபிடியுங்கள். அரசுத்துறை சார்ந்தவர்களுக்கு ஏற்றங்கள் எதிர்பார்ப்புகள் நிச்சயம் ஈடேறும். முகஸ்துதிபாடுவோரிடம் எச்சரிக்கையாக இருங்கள். 


கலைத்துறை சார்ந்தவர்கள், எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்களுக்கு அரசுவழி பாராட்டுகள் கிட்ட வாய்ப்பு உண்டு. சிற்றின்ப நாட்டம் தவிருங்கள். மாணவர்கள் மனம்போல் உயர்வு பெறலாம். உடல்நலத்தில் அடிவயிறு, கழிவு உறுப்பு, முதுகு, மூட்டு உபாதைகள் வரலாம். பயணத்தில் உடைமைகள் பத்திரம்.குலதெய்வத்தைக் கும்பிடுங்கள். சுபிட்சம் சேரும்.


  இந்த வருடத்தின் தொடக்கத்தில் உங்கள் ராசிக்கு மூன்றாம் இடத்தில் குரு, எட்டாம் இடத்தில் கேது, பத்தாம் இடத்தில் புதன் சுக்ரன் சேர்க்கை, பதினோராம் இடத்தில் சூரியன் செவ்வாய், உங்கள் ஜன்ம ராசியான கும்பத்தில் சனி, இரண்டாம் இடத்தில் ராகு என்ற கோசார அமைப்பு காணப்படுகிறது. இந்த அமைப்பு மற்றும் இந்த வருடத்தில் ஏற்படக்கூடிய கிரஹநிலைகளின் அமைப்பின்படி உங்களுக்கு இந்த ஆண்டு உன்னதங்களையும் உயர்வுகளையும் தரக்கூடியதாக இருக்கும். 


அதேசமயம் எதிலும் தன்னம்பிக்கை மிகமிக முக்கியம். பணியிடத்தில் மேலதிகாரிகளால் பாராட்டப்படுவீர்கள். எதிர்பார்த்த மேன்மைகள் நிச்சயம் கைகூடும். அதேசமயம் உடனிருப்போர் விஷயங்களில் தலையிடவேண்டாம். யாரையும் புண்படுத்தும் வகையில் பேசுவது, செய்வது கூடாது. புதிய பணிகள் தாமதமானாலும் பெருமையானபடி கிட்டும். 


குடும்பத்தில் சந்தோஷங்கள் அதிகரிக்கும். இளம்வயதினருக்கு மனம்போல மாங்கல்யம் கைகூடும். தம்பதியரிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். சட்டென்று உணர்ச்சிவசப்படுவதைத் தவிர்ப்பது முக்கியம். உறவுகள் வருகையும் அதனால் உன்னதமும் உருவாகும். வரவு சீராக இருக்கும். ஆடை, ஆபரணம் சேரும். செய்யும் தொழிலில் நேரான உழைப்பு இருந்தால் சீரான லாபம் வரும். 


யாருக்காகவும் தெரியாத தொழிலில் முதலீடு செய்ய வேண்டாம். பங்குச் சந்தையில் திடீர் மாற்றம் வரலாம், நிதானம் முக்கியம். அயல்நாட்டு வர்த்தகம் நன்மை தரும். அரசியலில் இருப்பவர்கள் அமைதியே ஆனந்தம் என்றிருப்பது நல்லது. மேலிடத்தைக் கனவிலும் குறைசொல்ல வேண்டாம். 


புறம்கூறும் நட்பை உடனே உதறுங்கள்.அரசுப் பணிபுரிபவர்கள், பொறுமையாக இருப்பது நல்லது. எதிர்பார்க்கும் உயர்வுகள் தாமதமானாலும் வரும். வீண் புலம்பல் ஒருபோதும் வேண்டாம். சினிமா, நாடகம், கலைத்துறைனருக்கு கணிசமான வாய்ப்புகள் வரும். எதிர்பாலரிடம் எல்லை வகுத்துப் பழகுங்கள். 


மாணவர்களுக்கு மகத்தான யோகத்தைத் தரும் ஆண்டு. நட்புகள் விஷயத்தில் எச்சரிக்கையாக இருங்கள். ஆரோக்யத்தில் அக்கறை உள்ளவர்கள் தினமும் சிறிது நேரமாவது உடற்பயிற்சி செய்வது முக்கியம். நரம்புகள்,மூட்டுகள், முதுகுத் தண்டுவட உபாதைகள் வரலாம். ஏழுமலையானைக் கும்பிடுங்கள். ஏற்றம் உருவாகும்.


கும்பம்: இந்த வருடத்தின் தொடக்கத்தில் உங்கள் ராசிக்கு மூன்றாம் இடத்தில் குரு, எட்டாம் இடத்தில் கேது, பத்தாம் இடத்தில் புதன் சுக்ரன் சேர்க்கை, பதினோராம் இடத்தில் சூரியன் செவ்வாய், உங்கள் ஜன்ம ராசியான கும்பத்தில் சனி, இரண்டாம் இடத்தில் ராகு என்ற கோசார அமைப்பு காணப்படுகிறது. 


இந்த அமைப்பு மற்றும் இந்த வருடத்தில் ஏற்படக்கூடிய கிரஹநிலைகளின் அமைப்பின்படி உங்களுக்கு இந்த ஆண்டு உன்னதங்களையும் உயர்வுகளையும் தரக்கூடியதாக இருக்கும். அதேசமயம் எதிலும் தன்னம்பிக்கை மிகமிக முக்கியம். பணியிடத்தில் மேலதிகாரிகளால் பாராட்டப்படுவீர்கள். 


எதிர்பார்த்த மேன்மைகள் நிச்சயம் கைகூடும். அதேசமயம் உடனிருப்போர் விஷயங்களில் தலையிடவேண்டாம். யாரையும் புண்படுத்தும் வகையில் பேசுவது, செய்வது கூடாது. புதிய பணிகள் தாமதமானாலும் பெருமையானபடி கிட்டும். குடும்பத்தில் சந்தோஷங்கள் அதிகரிக்கும். இளம்வயதினருக்கு மனம்போல மாங்கல்யம் கைகூடும். தம்பதியரிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். சட்டென்று உணர்ச்சிவசப்படுவதைத் தவிர்ப்பது முக்கியம். உறவுகள் வருகையும் அதனால் உன்னதமும் உருவாகும். வரவு சீராக இருக்கும். ஆடை, ஆபரணம் சேரும். 


செய்யும் தொழிலில் நேரான உழைப்பு இருந்தால் சீரான லாபம் வரும். யாருக்காகவும் தெரியாத தொழிலில் முதலீடு செய்ய வேண்டாம். பங்குச் சந்தையில் திடீர் மாற்றம் வரலாம், நிதானம் முக்கியம். அயல்நாட்டு வர்த்தகம் நன்மை தரும். அரசியலில் இருப்பவர்கள் அமைதியே ஆனந்தம் என்றிருப்பது நல்லது. 


மேலிடத்தைக் கனவிலும் குறைசொல்ல வேண்டாம். புறம்கூறும் நட்பை உடனே உதறுங்கள்.அரசுப் பணிபுரிபவர்கள், பொறுமையாக இருப்பது நல்லது. எதிர்பார்க்கும் உயர்வுகள் தாமதமானாலும் வரும். வீண் புலம்பல் ஒருபோதும் வேண்டாம். 


சினிமா, நாடகம், கலைத்துறைனருக்கு கணிசமான வாய்ப்புகள் வரும். எதிர்பாலரிடம் எல்லை வகுத்துப் பழகுங்கள். மாணவர்களுக்கு மகத்தான யோகத்தைத் தரும் ஆண்டு. நட்புகள் விஷயத்தில் எச்சரிக்கையாக இருங்கள். ஆரோக்யத்தில் அக்கறை உள்ளவர்கள் தினமும் சிறிது நேரமாவது உடற்பயிற்சி செய்வது முக்கியம். நரம்புகள்,மூட்டுகள், முதுகுத் தண்டுவட உபாதைகள் வரலாம். ஏழுமலையானைக் கும்பிடுங்கள். ஏற்றம் உருவாகும்.


  இந்தப் புத்தாண்டின் ஆரம்பத்தில் உங்கள் ராசிக்கு இரண்டாம் இடத்தில் குரு, ஏழாம் இடத்தில் கேது, ஒன்பதாம் இடத்தில் புதன் சுக்ரன் சேர்க்கை, பத்தாம் இடத்தில் சூரியன், செவ்வாய், பன்னிரண்டாம் இடத்தில் சனி, உங்கள் ஜன்ம ராசியான மீனத்தில் ராகு என்ற கோள்சார நிலை காணப்படுகிறது. 


இந்த கிரஹ நிலையின்படியும் இந்த வருடத்தில் ஏற்படக்கூடிய கிரஹ நிலை மாற்றங்களின் அடிப்படையிலும் இந்த ஆங்கிலப் புத்தாண்டு உங்களுக்கு நன்மைகளை அதிக அளவில் தரக்கூடியதாக இருக்கும். அதேசமயம் சோம்பலும் புலம்பலும் இல்லா உழைப்பே அதற்குக் காரணமாக இருக்கும். அலுவலகத்தில் திறமைக்கு ஏற்ற பெருமை கிட்டும். 


அதேசமயம் தானுண்டு தன் வேலை உண்டு என்று இருப்பதே நன்மைதரும். மேலதிகாரிகளிடம் பேசும்போது நிதானம் முக்கியம். எல்லாம் தெரியும் என்ற எண்ணத்தைத் தவிருங்கள். பணத்தைக் கையாளும்பொறுப்பில் கவனம் மிகமிக முக்கியம். கோப்புகளை நிதானமாகக் கையாளுங்கள். குடும்பத்தில் நிம்மதி ஏற்படும். வாரிசுகளிடம் வீண்கடுமை வேண்டாம். 


வார்த்தைகளில் நிதானம் முக்கியம். சுபகாரியங்கள் கைகூடும்போது, வீண் ஆடம்பரம் தவிருங்கள். பூர்வீக சொத்தில் விட்டுக்கொடுப்பதே ஆதாயம். எந்தத் தொழில் செய்தாலும் அதில் உங்கள் உழைப்புக்கு ஏற்ற உயர்வு நிச்சயம் வரும். சட்டத்துக்குப் புறம்பான எதையும் கனவிலும் அனுமதிக்க வேண்டாம். அயல்நாட்டு வர்த்தகத்தில் தரக்கட்டுப்பாட்டை கவனிப்பது முக்கியம். ஒப்பந்தங்கள் கைகூடிவரும், முழுமையாகப் படித்துக் கையெழுத்திடுங்கள். கடன் அட்டைகளில் அலட்சியம் கூடாது. அரசியல் சார்ந்தவர்களுக்கு திடீர் பெருமைகள் கிட்டலாம். மேலிடத்தின் ஆதரவு மகிழ்ச்சி சேர்க்கும். 


அனுபவம் மிக்கவர்களை அலட்சியப்படுத்த வேண்டாம். அரசுப்பணிகளில் உள்ளவர்களுக்கு ஏற்றம் படிப்படியாக ஏற்படும். உடன் இருப்போர் குறைகளை பெரிதுபடுத்திப் பேசவேண்டாம். கோப்புகளில் கவனமாகக் கையெழுத்திடுங்கள். நாடகம், சினிமா, இசைத்துறையில் உள்ளவர்களுக்கு வாய்ப்புகள் தொடர்ச்சியாக வரும். பொறுப்பு உணர்வுடன் ஏற்றுச் செய்வது மிகப்பெரிய ஏற்றத்தைத் தரும். 


மாணவர்கள் சோம்பலை விரட்டினால், மதிப்பும் மதிப்பெண்களும் உயரும். அயல்நாட்டுக் கல்வி முயற்சிகள் கைகூடிவரும். உடல்நலத்தில் மன அழுத்தம் வராமல் இருக்க, தியானம் யோகா பலன் தரும். உணவை முறைப்படுத்துங்கள். அஜீரணம்,அல்சர் பாதிப்புகள் வரலாம். இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் முக்கியம். சிவன்,பார்வதியைக் கும்பிடுங்கள். இந்த வருடம் சிறப்பான வருடமாக இருக்கும்.


மீனம்: இந்தப் புத்தாண்டின் ஆரம்பத்தில் உங்கள் ராசிக்கு இரண்டாம் இடத்தில் குரு, ஏழாம் இடத்தில் கேது, ஒன்பதாம் இடத்தில் புதன் சுக்ரன் சேர்க்கை, பத்தாம் இடத்தில் சூரியன், செவ்வாய், பன்னிரண்டாம் இடத்தில் சனி, உங்கள் ஜன்ம ராசியான மீனத்தில் ராகு என்ற கோள்சார நிலை காணப்படுகிறது. 


இந்த கிரஹ நிலையின்படியும் இந்த வருடத்தில் ஏற்படக்கூடிய கிரஹ நிலை மாற்றங்களின் அடிப்படையிலும் இந்த ஆங்கிலப் புத்தாண்டு உங்களுக்கு நன்மைகளை அதிக அளவில் தரக்கூடியதாக இருக்கும். அதேசமயம் சோம்பலும் புலம்பலும் இல்லா உழைப்பே அதற்குக் காரணமாக இருக்கும். அலுவலகத்தில் திறமைக்கு ஏற்ற பெருமை கிட்டும். அதேசமயம் தானுண்டு தன் வேலை உண்டு என்று இருப்பதே நன்மைதரும். மேலதிகாரிகளிடம் பேசும்போது நிதானம் முக்கியம். 


எல்லாம் தெரியும் என்ற எண்ணத்தைத் தவிருங்கள். பணத்தைக் கையாளும்பொறுப்பில் கவனம் மிகமிக முக்கியம். கோப்புகளை நிதானமாகக் கையாளுங்கள். குடும்பத்தில் நிம்மதி ஏற்படும். வாரிசுகளிடம் வீண்கடுமை வேண்டாம். வார்த்தைகளில் நிதானம் முக்கியம். சுபகாரியங்கள் கைகூடும்போது, வீண் ஆடம்பரம் தவிருங்கள். 


பூர்வீக சொத்தில் விட்டுக்கொடுப்பதே ஆதாயம். எந்தத் தொழில் செய்தாலும் அதில் உங்கள் உழைப்புக்கு ஏற்ற உயர்வு நிச்சயம் வரும். சட்டத்துக்குப் புறம்பான எதையும் கனவிலும் அனுமதிக்க வேண்டாம். அயல்நாட்டு வர்த்தகத்தில் தரக்கட்டுப்பாட்டை கவனிப்பது முக்கியம். ஒப்பந்தங்கள் கைகூடிவரும், முழுமையாகப் படித்துக் கையெழுத்திடுங்கள். கடன் அட்டைகளில் அலட்சியம் கூடாது. 


அரசியல் சார்ந்தவர்களுக்கு திடீர் பெருமைகள் கிட்டலாம். மேலிடத்தின் ஆதரவு மகிழ்ச்சி சேர்க்கும். அனுபவம் மிக்கவர்களை அலட்சியப்படுத்த வேண்டாம். அரசுப்பணிகளில் உள்ளவர்களுக்கு ஏற்றம் படிப்படியாக ஏற்படும். உடன் இருப்போர் குறைகளை பெரிதுபடுத்திப் பேசவேண்டாம். கோப்புகளில் கவனமாகக் கையெழுத்திடுங்கள். 


நாடகம், சினிமா, இசைத்துறையில் உள்ளவர்களுக்கு வாய்ப்புகள் தொடர்ச்சியாக வரும். பொறுப்பு உணர்வுடன் ஏற்றுச் செய்வது மிகப்பெரிய ஏற்றத்தைத் தரும். மாணவர்கள் சோம்பலை விரட்டினால், மதிப்பும் மதிப்பெண்களும் உயரும். அயல்நாட்டுக் கல்வி முயற்சிகள் கைகூடிவரும். உடல்நலத்தில் மன அழுத்தம் வராமல் இருக்க, தியானம் யோகா பலன் தரும். 


உணவை முறைப்படுத்துங்கள். அஜீரணம்,அல்சர் பாதிப்புகள் வரலாம். இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் முக்கியம். சிவன்,பார்வதியைக் கும்பிடுங்கள். இந்த வருடம் சிறப்பான வருடமாக இருக்கும்.


Post Top Ad