தமிழக பள்ளிகளிலும் "தண்ணீர் இடைவேளை" - அமைச்சர் அன்பில் மகேஷ். - Asiriyar.Net

Tuesday, June 13, 2023

தமிழக பள்ளிகளிலும் "தண்ணீர் இடைவேளை" - அமைச்சர் அன்பில் மகேஷ்.

 



கேரளா போன்று தமிழக பள்ளிகளிலும் தண்ணீர் குடிக்க தனி இடைவேளைவிட நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். மேலும், இது குறித்து பேசிய அவர், கோடைவெயில் இன்னும் குறையாததால் வகுப்பறைகளில் மாணவர்களுக்கு குடிநீர் தர உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 


அதன்படி, அரசு பள்ளிகளில் ஒவ்வொரு இடைவேளையின் போதும் வாட்டர் பெல் அடிக்கப்படும். அப்போது அனைத்து மாணவர்களும் கண்டிப்பாக தண்ணீர் குடிக்க வேண்டும் என்பதை நடைமுறைப்படுத்த உள்ளனர். மேலும், இந்த திட்டம் சமூக ஆர்வலர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது


No comments:

Post a Comment

Post Top Ad