சென்னை மாநகர காவல்துறை சார்பில் "சிற்பி" என்ற புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இது மாணவர்களை போதைக்கு அடிமையாகாமல் நல்வழிப்படுத்தும் வகையில் தொடங்கப்பட்டது.
மேலும், இது சுமார் 4 கோடி ரூபாய் மதிப்பில் தொடங்கியது, இதனை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதலமைச்சர் தொடங்கிவைத்தார். இத்திட்டத்தின் கீழ் சென்னை மாநகராட்சி பகுதியில் 100 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு, ஒவ்வொரு பள்ளியில் இருந்தும் தலா 50 மாணவர்களுக்கு பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டன.
அறிவுரை
இந்நிலையில், இந்த திட்டத்தின் நிறைவு விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.
அதில் அவர், மாணவர்கள் பள்ளிப் படிப்போடு நிறுத்தாமல், கல்லூரி வரை சென்று உயர் கல்வி பயில வேண்டும் என்றார். மேலும், தரமான கல்வி தருவதில் தமிழ்நாடு 2வது இடத்தில் உள்ளது. அதனை முதலித்திற்கு கொண்டு வர வேண்டும் என்று கூறினார்.
தொடர்ந்து அவர், "படிப்பு மட்டுமே மாணவர்களிடமிருந்து பிரிக்க முடியாத சொத்து, எதைப் பத்தியும் கவலைப்படாமல் படிங்க நம்ம ஆட்சி இருக்கு, நான் இருக்கிறேன்” என்று கூறி மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
No comments:
Post a Comment