புதுச்சேரி முதல்வரின் வீட்டை முற்றுகையிட்ட அரசுப்பள்ளி ஆசிரியர்கள் - Asiriyar.Net

Monday, June 26, 2023

புதுச்சேரி முதல்வரின் வீட்டை முற்றுகையிட்ட அரசுப்பள்ளி ஆசிரியர்கள்

 



பணிமூப்பு அடிப்படையில் பணியிட மாற்றம் செய்யக்கோரி புதுச்சேரி முதல்வரின் வீட்டை ஆசிரியர்கள் முற்றுகையிட்டனர். புதுச்சேரியில் இருந்து கடந்த 2019ல் 124 தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் காரைக்காலுக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர். அவர்களுக்கு கடந்த டிசம்பரில் புதுச்சேரிக்கு இடமாற்றம் வழங்கப்பட்டது. 


இந்த இடமாறுதல் உத்தரவுக்கு நீதிமன்றம் தடை விதித்ததுடன் புதிய ஆசிரியர் பணியிட கொள்கை உருவாக்கவும் உத்தரவிட்டது.புதுச்சேரில் மாநிலத்தில் ஆசிரியர் பணிக்கு சேர்பவர்கள் காரைக்காலில் 4 ஆண்டுகள் கண்டிப்பாக பணியாற்ற வேண்டும். 


ஆனால் காரைக்காலில் இதுவரை பணியாற்றாத 55 வயதுக்கு உட்பட்ட ஆசிரியர்கள் மற்றும் குறைந்த மாதங்கள் மட்டும் பணியாற்றிய ஆசிரியர்களை காரைக்காலுக்கு இடமாற்றம் செய்துவிட்டு, அங்கு பணியாற்றி கொண்டிருக்கும் 124 ஆசிரியர்களை புதுவைக்கு இடமாற்றம் செய்ய கல்வித்துறை நடவடிக்ைக எடுத்துள்ளது. 


இதனால் அதிர்ச்சி அடைந்த மூத்த ஆசிரியர்கள், 200க்கும் மேற்பட்டோர், முதல்வர் ரங்கசாமியின் வீட்டை நேற்று காலை முற்றுகையிட்டனர். பின்னர் ரங்கசாமியை சந்தித்து பணிமூப்பு அடிப்படையில் பணியிட மாற்றம் செய்ய கோரிக்கை வைத்தனர். இதற்கு முதல்வர் ரங்கசாமி, கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயத்தை சந்தித்து உங்கள் குறைகளை கூறுங்கள் என்று கூறி அனுப்பினார். இதனால் பெரும் ஏமாற்றத்துடன் திரும்பினர்.


No comments:

Post a Comment

Post Top Ad