"மாணவர் Attendance" எடுத்து வருகையை பதிவு செய்த அமைச்சர் - Asiriyar.Net

Tuesday, June 13, 2023

"மாணவர் Attendance" எடுத்து வருகையை பதிவு செய்த அமைச்சர்

 



கோடை விடுமுறை முடிந்து தமிழகத்தில் இன்று ( ஜூன்12) பள்ளிகள் திறக்கப்பட்டன. முதல் கட்டமாக 6 முதல் 12 ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகள் இன்று ஆர்வமாக செல்வதை காண முடிந்தது.பள்ளிகள் திறப்பையொட்டி, சென்னை விருகம்பாக்கம் அரசு மகளிர் பள்ளிக்கு கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் சென்றார்.


மாணவர்களை வரவேற்ற அமைச்சர் அட்டண்டன்ஸ் ரிஜிஸ்ட்டரில் உள்ள பெயர்களை வாசித்து வருகையை அவரே பதிவு செய்தார். மாணவிகள் ' யெஸ் சார் ' என்றனர். தொடர்ந்து அமைச்சர் மகேஷ் நிருபர்களிடம் பேசுகையில்; தமிழ்நடுநிலைப்பள்ளிகள் 8,340 , உயர்நிலைப்பள்ளிகள் 3,547, மேல்நிலைப்பள்ளிகள் 4,721 , தனியார் பள்ளிகள் 14,108 என அனைத்து பள்ளிகளிலும் 46, 22, 324 மாணவர்களும், தனியார் பள்ளிகள் 24 லட்சம் மாணவர்களும் வருவர் என எதிர்பாக்கின்றோம். பள்ளி திறக்கும் இந்நேரத்தில் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், கல்வித்துறை அதிகாரிகளுக்கும் வாழ்த்துக்களை தெரிவிக்கிறோம்.


கடந்த ஆண்டை விட வரும் ஆண்டில் அதிக தேர்ச்சி விகிதம் வழங்க வேண்டும். இவ்வாறு அமைச்சர் மகேஷ் தெரிவித்தார். வரும் 14 ம் தேதி ஒன்று முதல் 5 ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் திறக்கப்படவுள்ளன.


No comments:

Post a Comment

Post Top Ad