EMIS சார்ந்த அத்தனை விஷயங்களும் தெரிந்த BRTE எனும் ஆசிரியர் பயிற்றுநர்களை பயன்படுத்தலாமே*!!!!!
சமீப காலங்களில் தொடக்கப் பள்ளி சார்ந்த இடைநிலை ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் என்று ஒரு திட்டம் சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறது.
அதே வேளையில் தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்களின் பணி சுமை என்பது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. EMIS சார்ந்து பணிகள் மிகவும் அதிகம் .
BRTE என்று சொல்லப்படும் ஆசிரியர் பயிற்றுநர்கள் மாநில அளவில் தொடக்கக் கல்வித் துறைக்கு வரும் அத்தனை விஷயங்களிலும் கற்று தேர்ந்தவர்கள்
மேலும் நடைமுறையில் நடந்து கொண்டிருக்கும் எந்த விதமான திட்டங்கள் பயிற்சிகள் என்றாலும் நுட்பமாக கற்றவர்கள்.
எண்ணும் எழுத்தும் பயிற்சி கட்டகத்தையே சிறப்பாக வடிவமைத்து கடந்த ஓராண்டாக அத்துணை பயிற்சி செய்யும் ஒருங்கிணைத்து சிறப்பாக நடத்தியவர்கள்
மேலும் EMIS சார்ந்த எல்லாவிதமான பணியையும் அறிந்தவர்கள்.
ஆக தொடக்கக் கல்வித்துறையின் மிகப்பெரிய தூண்களாக விளங்கிக் கொண்டிருக்கும் ஆசிரியர் பயிற்றுநர்களின் திறமைகள் முழுமையாக பயன்படுத்தாமல் இருக்கிறது என்பதை யாரும் மறுக்க முடியாது.
ஆகவே BRTE என்று சொல்லப்படும் ஆசிரியர் பயிற்றுநர்களை மாநில அளவில் ஒவ்வொரு CRC எனப்படும் குறு வள மையத்திற்கும் EMIS ஒருங்கிணைப்பாளர்களாக நியமித்தால் வேலையும் எளிமையாக முடியும் வேகமாகவும் முடியும் தவிர அரசு எதிர்பார்க்கும் தரத்தில் எல்லாம் இருக்கும்.
தொடக்கக் கல்வித் துறையில் இருக்கும் ஆசிரியர்களை கல்வி பணியை மட்டும் செய்ய வைத்து BRTE எனும் ஆசிரியர் பயிற்றுநர்களை EMIS, இல்லம் தேடி கல்வி, NILP போன்ற அத்தனை விஷயங்களிலும் நுட்பமாக தெரிந்த இவர்களை பயன்படுத்தினால் கல்வியின் தரமும் உயரும். கூடுதலாக ஆசிரியர் பயிற்றுநர்களின் திறமையும் சரியாக பயன்படுத்திய நிலையையும் உருவாக்க முடியும்.
ஆசிரியர் பயிற்றுநர்கள் அத்தனை பேரும் CRC அளவில் ஒருங்கிணைப்பாளர்களாக கல்விப் பணி அல்லது இதர பணிகளை செய்ய தயாராக தான் உள்ளனர் ஆனால் அவர்களின் திறமை பயன்படுத்தப்படாமல் வீணடிக்கப்படுகிறது.
ஆகவே மாண்புமிகு கல்வியாள பெருமக்களே தொடக்கக் கல்வித் துறையில் தலைமை ஆசிரியர்களின் பணி சுமையை குறைக்க ஆவண செய்யுங்கள்.
BRTE களை CRC அளவில் கல்விப் பணி அல்லாத இதர விஷயங்களில் ஒருங்கிணைப்பாளர்களாக நியமித்து தொடக்கக் கல்வித் துறையில் ஏற்றம் பெற வழி வகுப்பீர்கள் என்று நம்புகிறோம்🙏
No comments:
Post a Comment