பழைய ஓய்வூதியத் திட்டம்: ரகுராம் ராஜன் எதிா்ப்பு - Asiriyar.Net

Tuesday, March 7, 2023

பழைய ஓய்வூதியத் திட்டம்: ரகுராம் ராஜன் எதிா்ப்பு

 
பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் தொடங்க சில மாநில அரசுகள் திட்டமிட்டிருப்பது குறித்து விமா்சித்துள்ள ரிசா்வ் வங்கியின் முன்னாள் ஆளுநா் ரகுராம் ராஜன், ஓய்வூதியத்தாரா்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற குறைந்த செலவிலான மாற்று வழிகளை அரசு கண்டறிய வேண்டும் என்று வலியுறுத்தினாா்.


மேலும், நடப்பு சம்பளத்தின் அடிப்படையில் பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்பட்டால் வரும் காலங்களில் அது கூடுதல் செலவினமாக மாறும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.


பழைய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் ஓய்வு பெறும் அரசு ஊழியா்களுக்கு அவா்கள் இறுதியாக பெற்ற ஊதியத்தில் 50 சதவீதம் மாதாந்திர ஓய்வூதியமாக வழங்கப்பட்டது. அதிகரிக்கும் நிதி செலவினங்களைக் கருத்தில் கொண்டு கடந்த 2004-ஆம் ஆண்டு முதல் இத்திட்டம் ரத்து செய்யப்பட்டு புதிய ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்பட்டது.


இந்நிலையில், ராஜஸ்தான், சத்தீஸ்கா், ஜாா்க்கண்ட மற்றும் பஞ்சாப் போன்ற மாநிலங்களில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவதுக்கான முன்னோட்டங்கள் நடந்து வருகின்றன. இது தொடா்பாக கருத்து தெரிவித்த ரகுராம் ராஜன், ‘ஓய்வூதியத்தாரா்களின் நலனுக்காக செலவிடுவது அரசின் பெரும் பொறுப்பாக உள்ளது. ஆனால், குறுகிய காலத்துக்காக அதை திட்டமிடக் கூடாது. அரசு நிதியைப் பயன்படுத்தும்போது நீண்ட காலத்துக்கான அதன் தாக்கம் குறித்து சிந்திக்க வேண்டும்.


அரசின் ஆதரவு தேவைப்படும் மக்கள் இடையே அரசு ஊழியா்கள் என்னும் பிரிவினா் அடங்குவாா்களா என்பது குறித்து ஆராய வேண்டும்.


பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவது தொழில்நுட்ப ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் சாத்தியமற்ாக கூட மாறலாம். எனவே, ஓய்வூதியத்தாரா்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற குறைந்த செலவிலான மாற்று வழிகளைஅரசு விரைவில் கண்டறிய வேண்டும்’ என்றாா்.


Post Top Ad