விடைத்தாள் தைத்த மாணவியர் - தலைமை ஆசிரியை சஸ்பெண்ட் - Asiriyar.Net

Saturday, March 11, 2023

விடைத்தாள் தைத்த மாணவியர் - தலைமை ஆசிரியை சஸ்பெண்ட்

 



விடைத்தாள் முகப்பு தாளை தைக்கும் பணியில், மாணவியரை ஈடுபடுத்திய விவகாரத்தில், பள்ளி தலைமை ஆசிரியை உட்பட இரண்டு பேர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர்.


தமிழகத்தில் வரும், 13 முதல், பிளஸ் 2 பொதுத்தேர்வு தொடங்க உள்ளது. இதற்காக தேர்வு எழுத உள்ள மாணவ - மாணவியரின் புகைப்படத்துடன் கூடிய முகப்பு தாளை, விடைத்தாளுடன் தைக்கும் பணி, தேர்வு மையங்களில் நடந்து வருகிறது.


இப்பணிக்கு மதிப்பூதியம் வழங்கப்படும் நிலையில், சேலம், கோட்டை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நேற்று முன்தினம், மாணவியர் சிலரை தைக்கும் பணியில் ஆசிரியர்கள் ஈடுபடுத்தினர்.


இந்த, 'வீடியோ' பரவிய நிலையில், நேற்று அப்பள்ளி ஆசிரியர்கள், மாணவியரிடம், சேலம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முருகன் விசாரணை நடத்தினார்.


தொடர்ந்து, தலைமை ஆசிரியை தமிழ்வாணி, தையல் ஆசிரியை செல்வியை, சஸ்பெண்ட் செய்து, முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டார்.





No comments:

Post a Comment

Post Top Ad