ஜாக்டோ ஜியோ வாழ்வாதார நம்பிக்கை மாநாட்டில் தமிழக முதல்வர் அறிவித்துள்ள அறிவிப்புக்கள் - Full Speech - pdf - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Saturday, September 10, 2022

ஜாக்டோ ஜியோ வாழ்வாதார நம்பிக்கை மாநாட்டில் தமிழக முதல்வர் அறிவித்துள்ள அறிவிப்புக்கள் - Full Speech - pdf

 

Click Here to Download - Hon'ble CM Speech - Jactto Geo function -Date  10.9.2022 - Pdfஜாக்டோ ஜியோ வாழ்வாதார நம்பிக்கை மாநாட்டில் மாண்புமிகு. தமிழக முதல்வர் அறிவித்துள்ள அறிவிப்புக்கள்......


1) பகுதி நேர ஆசிரியர்கள் 60 வயது வரை பணிபுரிய வாய்ப்பு


2) அக்டோபர் 15 முதல் மாறுதல் கலந்தாய்வு நடைபெறும் 


3)101,& 108 அரசாணை ரத்து செய்யப்பட்டுள்ளது..

( G.O-151 - நாள் - 09.09.2022- ன் படி தொடக்கக்கல்வி தனியாக இயங்கும்


4)அரசு ஊழியர்களின் சில கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் கையெழுத்திட்டு வந்துள்ளேன். ஜாக்டோ ஜியோ மாநாட்டில் முதலமைச்சர் பேச்சு
5) நிதி நிலை சரியான பின்னர் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும்


அரசு ஊழியர்கள் கடந்த அதிமுக ஆட்சியில் பழிவாங்கப்பட்டார்கள் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஜாக்டோ-ஜியோ அமைப்பின் ஆசிரியர், அரசு ஊழியர், அரசு பணியாளர்கள் வாழ்வாதார நம்பிக்கை மாநாடு சென்னை தீவுத் திடலில் நடைபெற்று வருகிறது. அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் தலைமையில், உயர்மட்ட குழு உறுப்பினர்கள் முன்னிலையில் நடக்கும் இந்த மாநாட்டில், முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுள்ளார். பேருரையாற்றுகிறார். கடந்த 1988ம் ஆண்டுக்கு பிறகு முதல் முறையாக ஜாக்டோ-ஜியோ அமைப்பு நடத்தும் இந்த மாநாட்டில் முதல்வர் பங்கேற்பது இதுவே முதல் முறை.


மாநாட்டில் உரையாற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின்; நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக ஆட்சியை பிடித்ததற்கு அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் காரணம். நீங்கள் தனி தீவு கிடையாது; நானும் உங்களில் ஒருவன். நீங்கள் அரசு ஊழியர்கள், நான் மக்கள் ஊழியன். திமுக ஆட்சிக்கு வந்ததும் ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றுவோம் என தெரிவித்தேன். அரசு ஊழியர்கள் கடந்த அதிமுக ஆட்சியில் பழிவாங்கப்பட்டார்கள். அரசு ஊழியர்களின் சில கோரிக்கைகளை நிறைவேற்றும் கொம்புகளுக்கு ஒப்புதல் அளித்துள்ளேன். மற்ற மாநிலங்களை விட அனைத்து துறைகளிலும் முன்னோக்கி சென்று கொண்டிருக்கிறோம்.


துறை அமைச்சர்களிடம் தெரிவிக்கப்படும் கோரிக்கைகள், நிச்சயம் தன கவனத்துக்கு வரும் என தெரிவித்தார். தொடர்ந்து பேசிய முதல்வர்; தற்காலிக பணியில் இருக்கும் ஆசிரியர்கள் 60 வயது வரை பணியை தொடரலாம். அக். 15 முதல் அரசு ஊழியர்களுக்கான பணிமாறுதல் கலந்தாய்வு ஆன்லைன் மூலமாக வெளிப்படைத்தன்மையுடன் நடக்கும். அரசு பெண் ஊழியர்களுக்கான மகப்பேறு விடுமுறை 9 மாதங்களில் இருந்து 12 மாதங்களாக உயர்த்தப்பட்டுள்ளது இவ்வாறு கூறினார்.

திட்டங்களை நிறைவேற்ற கருவூலத்தில் பணம் இருந்தால்போதும் - முதல்வர் மு.க.ஸ்டாலின்   நீங்கள் தனி தீவு கிடையாது : நானும் உங்களில் ஒருவன்


ஜாக்டோ - ஜியோ மாநாட்டில் முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு

நீங்கள் அரசு ஊழியர், நான் மக்கள் ஊழியன் - முதல்வர் ஸ்டாலின்Post Top Ad