சேலம் மாவட்டம் வேம்படிதாளம் அருகே திருவளிப்பட்டியில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் கடந்த மாதம் 23ம் தேதி சத்துணவில் மரப்பூச்சி கிடந்துள்ளது. சத்துணவை சாப்பிட்ட 3ம் வகுப்பு மாணி துர்கா நந்தினிக்கு, உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து பள்ளியை பெற்றோர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
இது குறித்து, வீரபாண்டி வட்டார கல்வி அலுவலர் அன்பழகன், பள்ளியின் சத்துணவு அமைப்பாளர் விமலாதேவி, சமையலர் ஜெயந்தியிடம் விசாரித்தார். அதன் அடிப்படையில் சத்துணவு அமைப்பாளர் விமலாதேவியை சஸ்பெண்ட் செய்து, கலெக்டர் கார்மேகம் உத்தரவிட்டுள்ளார்.
No comments:
Post a Comment